உள்ளடக்கத்துக்குச் செல்

படா பாக்

ஆள்கூறுகள்: 26°57′18″N 70°53′13″E / 26.955°N 70.887°E / 26.955; 70.887
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படா பாக்
பெருந்தோட்டம்
உள்ளூர் பெயர்
இந்தி:बड़ा बाग
மேல்: பெருந்தோட்டத்தில் நினைவு மண்டபங்கள்
கீழ்: பெருந்தோட்டத்தின் அகலப்பரப்புக் காட்சி
Map
Map
Map
வகைபெருந்தோட்ட வளாகத்தில் ஜெய்சல்மேர் மன்னர்களின் நினைவு மண்டபங்கள்
அமைவிடம்ஜெய்சல்மேர், இராஜஸ்தான், இந்தியா
கட்டியவர்இரண்டாம் ஜெயித் சிங்

படாபாக் அல்லது பெருந்தோட்டம் (Bada Bagh), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் அமைந்த ஜெய்சல்மேர் நகரத்தில் உள்ள அரண்மனை தோட்டம் மற்றும் மன்னர்களின் நினைவு மண்டபங்களின் தொகுதி ஆகும். இது ஜெய்சல்மேர் நகரத்திற்கு வடக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்பெரும் தோட்டத்தை ஜெய்சல்மேர் இராச்சிய மன்னர் இரண்டாம் ஜெயித் சிங் நிறுவினர். கிபி 18ஆம் நூற்றாண்டில் மறைந்த ஜெய்சல்மேர் இராச்சிய மன்னர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் கல்லறை நினைவு மண்டங்கள் இப்பெருந்தோட்டத்தில் நிறுவப்பட்டது.[1][2][3]

வரலாறு

[தொகு]

சாகம்பரியின் சௌகான்கள் மரபில் வந்த இரண்டாம் ஜெய்த் சிங் (1497–1530) ஜெய்சல்மேர் இராச்சியத்தை நிறுவினார். ஒரு சிறு குன்றில் படாபாக் எனப்படும் பெருந்தோட்டம் அருகே அழகான ஏரியை வெட்டி அமைத்தார். மேலும் தோட்டத்தில் இறந்த அரசர், அரசி, இளவரசர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகள் மேல் நான்கு வகையான பளிங்குக் கல்லால் நினைவு மண்டபங்கள் நிறுவினார்.[4]

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bada Bagh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. .Bada Bagh பரணிடப்பட்டது 2012-12-15 at the வந்தவழி இயந்திரம் Department of Tourism, Government of Rajasthan website.
  2. "Sonar Qila". Financial Express. 9 January 2004. https://www.financialexpress.com/archive/sonar-qila/48364/0/. 
  3. Lindsay Brown; Amelia Thomas (2008). Rajasthan, Delhi & Agra (Lonely Planet Travel Guides). Lonely Planet. p. 335. ISBN 978-1-74104-690-8.
  4. "Bada Bagh / Bara Bagh, Jaisalmer - Timings, History, Best time to visit".

26°57′18″N 70°53′13″E / 26.955°N 70.887°E / 26.955; 70.887

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=படா_பாக்&oldid=4229966" இலிருந்து மீள்விக்கப்பட்டது