சூன் 2015
<< | சூன் 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMXXIV |
சூன் 2015 (June 2015, ஜூன் 2015), 2015 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமாகும்.
சிறப்பு நாட்கள்
[தொகு]- சூன் 4 - திருஞான சம்பந்தர் குருபூசை
- சூன் 4 - திருநீலநக்க நாயனார் குருபூசை
- சூன் 4 - திருநீலகண்ட யாழ்ப்பாணர் குருபூசை
- சூன் 4 - முருக நாயனார் குருபூசை
- சூன் 5 - குமர குருபரர் குருபூசை
நிகழ்வுகள்
[தொகு]- சூன் 27:
- ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய தடையில்லை என்று அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளதற்கு ஐ நா பொதுச் செயலாளர் பான் கி மூன் வரவேற்பு தெரிவித்தர். (ஏபிசி 7)
- சூன் 26:
- இலங்கையின் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன இலங்கையின் 14வது நாடாளுமன்றத்தைக் கலைத்தார். புதிய தேர்தல்கள் ஆகத்து 17 இல் நடைபெறும். (தி இந்து)
- சூன் 25:
- அமெரிக்க அலாஸ்கா மாநிலத்தின் தென் கிழக்கே பாறைப் பகுதியொன்றில் மோதி சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 9 பேரும் உயிரிழந்துள்ளனர். (சிஎன்என்),(கிறோ)
- சூன் 24:
- தென் கொரியாவில் மெர்ஸ் நோய் தொற்றிக் கொண்டோரின் எண்ணிக்கை 24ஆம் நாள் 179ஐ எட்டியுது.(மகு டெய்லி டைம்ஸ்)
- சூன் 23:
- 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் பாராலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பிக்க உள்ளதாக பாரிஸ் நகரம் 23ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. (பிபிசி)
- சூன் 22:
- நைஜீரியாவில் 2 பெண் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். (யாகூ)
- சூன் 19:
- புரூணை அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடங்கிய கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை 77 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்பினர் தெரிவித்தனர். (யூஸ் நியூஸ்)
- சூன் 16:
- அமெரிக்காவின் ஆளில்லா வான்தாக்குதலில் அல் காயிதா தலைவர் நாசர் அல்-வுகாய்சி கொல்லப்பட்டார் என அவ்வியக்கம் அறிவித்தது. (பிபிசி)
- சிரிய உள்நாட்டுப் போர்: குர்திய மக்கள் பாதுகாப்புப் படையினர் இருலாமிய தேசப் போராளிகளிடம் இருந்து தெல் அபியாத் என்ற எல்லை நகரை மீளக் கைப்பற்றினர். (அல்-சசீரா)
- சூன் 15:
- சாட் நாட்டில் நிஜாமீனா நகரில் காவல்துறை தலைமையகம் மீது போகோ அராம் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். (நியூயோர்க் டைம்சு)
- இங்கிலாந்தின் ஜோன் மன்னரால் நிறைவேற்றப்பட்ட மாக்னா கார்ட்டா தீர்பானத்தில் 800வது நிறைவு ஆண்டு உலகெங்கும் அனுசரிக்கப்பட்டது. (பிபிசி)
- சூன் 14:
- ஆப்கானித்தானில் நேட்டோ படைகளின் தாக்குதலில் 15 தாலிபான்கள் கொல்லப்படனர். (பிசினெசு ஸ்டான்டர்டு)
- ஜோர்ஜியாவின் திபிலீசி நகரில் மழை, மெற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் விலங்குக் காட்சிச்சாலையில் இருந்து மிருகங்கள் பல தப்பியோடின. ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- வால்வெள்ளி 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ சூரியனை அண்மித்த நிலையில் அங்கு கடந்த ஆறு மாதங்களாகத் தூக்கத்தில் இருந்த ஐரோப்பாவின் பிலே விண்கலம் விழித்துக் கொண்டது. (பிபிசி)
- சூன் 13:
- இந்தியாவின் ஆந்திராவில் தவலேசுவரம் நகரில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிந்ததில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர். (ஏஏபி)
- சூன் 12:
- நைஜீரியாவில் போகோ அராம் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- சிறிய ஆயுதக் குழு ஒன்று லிபியாவில் உள்ள துனீசியத் தூதரகத்தைத் தாக்கி 10 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். (அல்-அராபியா)
- சூன் 11:
- நேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். (தி இந்து)
- சூன் 10:
- சுணி இசுலாமியப் போராளிகளைப் பயிற்றுவிப்பதற்காக 450 அமெரிக்கப் படையினரை ஈராக்கிற்கு அனுப்ப அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா அனுமதி அளித்தார். (சீஎனென்)
- இந்தோனேசியாவின் சினாபுங் எரிமலை வெடித்ததில் 3,000 பேர் வெளியேற்றப்பட்டனர். (ஏஎஃப்பி)
- தென் கொரியாவில் மெர்சு தொற்றுநோயால் இறந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. 2,200 பாடசாலைகள் மூடப்பட்டன. (ராய்ட்டர்சு)
- சூன் 9:
- இந்தியாவின் சார்க்கண்ட் மாநிலத்தில் 12 நக்சலைட் மாவோயிசப் போராளிகள் காவல்துறையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டனர். (AP)
- உக்ரைன் தலைநகர் கீவில் இராணுவ எண்ணெய்க் குதம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- சூன் 8:
- ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் மியூசிக் என்ற புதிய இசை கேட்கும் சேவை ஒன்றை ஆரம்பித்தது. (என்காட்ஜெட்)
- தென் கொரியாவில் மத்திய கிழக்கு மூச்சுக் கூட்டறிகுறி நோயினால் இறந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது. (ஏஎஃப்பி)
- சூன் 7:
- சீனாவில் மூழ்கிய கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 400 ஐத் தாண்டியது. (கார்டியன்)
- டென்னிசு 2015 பிரெஞ்சு ஓப்பன் ஆண்கள் இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா செர்பியாவின் நோவாக் ஜோக்கொவிச்சை 4–6, 6–4, 6–3, 6–4 என்ற கணக்கில் வென்று தனது 2வது பெருவெற்றிக் கிண்ணத்தைப் பெற்றார். (டெலிகிராப்)
- சூன் 6:
- யெமனில் ஹூத்தி போராளிகள் ஏவிய ஸ்கட் ஏவுகணையை சவூதி அரேபியா சுட்டு வீழ்த்தியது. (ராய்ட்டர்சு)
- ஆப்கானித்தானில் யம்கான் மாவட்டத்தில் தாலிபான்கள் பெரும் தாக்குதல் ஒன்றைத் தொடுத்தனர். (ஏபி)
- மலேசியாவின் சபாவில் நேற்று இடம்பெற்ற நிலநடுக்கத்தை அடுத்து கினபாலு மலைப் பகுதியில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 8 பேரைக் காணவில்லை. (ஸ்ட்ரெயிட் டைம்சு)
- இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வங்காளதேசத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளுக்குமிடையேயான எல்லைப்பகுதியில் உள்ள 162 சிற்றூர்களில் உள்ளோர் தமது தேசியத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உடன்பாடு எட்டப்பட்டது. (அல்ஜசீரா)
- சங்கக் கால்பந்து: 2015 ஐரோப்பிய வாகையாளர் இறுதிப் போட்டியில் இத்தாலியின் யுவென்டசு அணியை எசுப்பானியாவின் பார்சிலோனா அணி 3:1 என்ற கணக்கில் வென்று ஐந்தாவது தடவையாக ஐரோப்பியக் கிண்ணத்தை வென்றது. (எசுபென்)
- டென்னிசு 2015 பிரெஞ்சு ஓப்பன் பெண்கள் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் செக் குடியரசின் லூசி சஃபரோவாவை 6-3, 6-7, 6-2 என்ற கனக்கில் வென்று தனது 20வது பெருவெற்றிக் கிண்ணத்தைப் பெற்றார். ('கார்டியன்)
- சூன் 5:
- நைஜீரியாவின் யோலா நகரில் சந்தை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மேகி நூடில்சுகள் அனைத்தையும் கடைகளில் இருந்து நெஸ்லே நிறுவனம் தற்காலிகமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டது. (எக்கனொமிக் டைம்சு)
- மலேசியாவின் சபா மாநிலத்தை 6.1 நிலநடுக்கம் தாக்கியதில் போர்னியோவில் கினபாலு மலைப் பகுதியில் இருவர் உயிரிழந்தனர். (த ஸ்டார்)
- கானாவின் அக்ரா நகரில் சூன் 3 அன்று இடம்பெற்ற தீ விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது. (சீ நியூசு)
- தென் கொரியாவில் மெர்சு நோயினால் 4 பேர் உயிரிழந்தனர். (ஏஎஃப்பி)
- சூன் 4:
- காசாவில் இருந்து இசுரேல் நோக்கி பல எறிகணைகள் ஏவப்பட்டன. (அல்ஜசீரா)
- இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் குறைந்தது 20 இந்தியத் தரைப்படையினரைக் கொன்றனர். (பிபிசி)
- சீனாவின் யாங்சி ஆற்றில் கடந்த சூன் 1 அன்று மூழ்கிய கப்பலில் இறந்தோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்தது. (கார்டியன்)
- தென் கொரியாவில் மெர்சு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. (சின்குவா)
- சூன் 3:
- சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் யெமன் தலைநகர் சனாவில் உள்ள இராணுவத் தளங்கள் மீது வான் தாக்குதல்களை மேற்கொண்டன. (ராய்ட்டர்சு)
- கானா தலைநகர் அக்ராவில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 75 பேர் உயிரிழந்தனர். (அல்ஜசீரா)
- வடகொரியா முழுவதையும் தாக்கக்கூடிய ஏவுகணைகள் இரண்டை தென் கொரியா வெற்றிகரமாகப் பரிசோதித்தது. (ஏபி)
- ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு அதிகாரிகள் சிலர் மீது பன்னாட்டுக் காவலகம் ஆணை அனுப்பியது. (ஏபி)
- முன்னாள் பீஃபா அதிகாரி சக் பிளேசர் 2010, 1998, உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் போது இலஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்டார். (சீஎனென்)
- சூன் 2:
- யெமனில் ஆயுதம் தாங்கிய பழங்குடிகள் 18 ஊத்திப் போராளிகளைக் கொன்றனர். (ராய்ட்டர்சு)
- 2015 இந்தியாவில் வெப்ப அலை: இறந்தோர் எண்ணிக்கை 2,330 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. (சீஎனென்)
- பொது இடங்களில் புகை பிடித்தலைத் தடை செய்யும் சட்டம் பெய்ஜிங்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. (சீஎனென்)
- ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் செப் பிளாட்டர் பதவியில் இருந்து விலகினார். (BBC) (ஆர்டீஈ)
- சூன் 1:
- ஈராக்கில் காவலரண் ஒன்றில் இசுலாமிய தேசப் போராளிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 37 பேர் கொல்லப்பட்டனர். (யாகூ)
- சீனா, யாங்சி ஆற்றில் 458 பேருடன் சென்ற கப்பல் மூழ்கியதில் ஏழு பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். ஏனையோரைக் காணவில்லை. (சின்குவா)
- கடந்த மூன்று நாட்களில் 5,000 குடியேறிகளை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மீட்டுள்ளனர். (டொச்செ வெலா)
இறப்புகள்
[தொகு]- சூன் 2 - சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழ்றிஞர் (பி. 1941)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்