உள்ளடக்கத்துக்குச் செல்

சுரு ஆறு (சிந்து)

ஆள்கூறுகள்: 33°49′59″N 76°13′07″E / 33.832917°N 76.21861°E / 33.832917; 76.21861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரு ஆறு
கார்கில் நகரம் வழியே ஓடு சுரு ஆறு
சுரு ஆற்றோட்டப் பாதை
அமைவு
நாடுஇந்தியா, பாக்கித்தான்
எல்கைஇலடாக்கு (இந்தியா), ஜில்ஜிட்-பால்டிஸ்தான் (பாக்கித்தான்)
மாவட்டம்கார்கில் (இந்தியா), ஸ்கர்டு மாவட்டம் (பாக்கித்தான்)
சிறப்புக்கூறுகள்
மூலம்பென்சிலா கொடுமுடி, பென்சிலா கணவாய், கார்கில், இந்தியா
 ⁃ அமைவுபென்சிலா கணவாய், கார்கில், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்33°49′59″N 76°13′07″E / 33.832917°N 76.21861°E / 33.832917; 76.21861
 ⁃ ஏற்றம்4,555 m (14,944 அடி)
முகத்துவாரம்சிந்து ஆறு
 ⁃ அமைவு
மரோல், கார்மாங் மாவட்டம், பாக்கித்தான்
 ⁃ ஆள்கூறுகள்
34°44′46″N 76°12′57″E / 34.746134°N 76.215927°E / 34.746134; 76.215927
 ⁃ உயர ஏற்றம்
2,528 m (8,294 அடி)
நீளம்185 km (115 mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி385 m3/s (13,600 cu ft/s)

சுரு ஆறு (Suru River (Indus) என்பது சிந்து ஆற்றின் துணை ஆறு ஆகும். இந்த ஆறு, இந்தியாவின் இலடாக்கு கார்கில் மாவட்டம் வழியாக பாக்கித்தானின் கில்கிட்-பால்டிசுதானில் பாய்கிறது. சுருப் பள்ளத்தாக்கு கார்கில் தெகசிலுடன் இணைந்து உள்ளது. கார்கில் நகரம் இதன் கரையில் அமைந்துள்ளது. இந்த ஆறு கில்கிட்-பால்டிசுதானின் கர்மாங் மாவட்டத்திற்குள் நுழைந்து, மரோல் அருகே சிறிது தூரம் ஓடிச் சிந்து ஆற்றுடன் இணைகிறது.[1]

புவியியல்

[தொகு]
தூரத்தில் உள்ள நுன் குன் மலை

சுரு ஆறு 185 கிலோமீட்டர் (115 மைல்) ஓடும் ஓர் ஆறாகும். இது ட்ராங் ட்ரங் பனிப்பாறைக்கு அருகே பென்சி லா கணவாயில் அமைந்துள்ள பன்செல்லா பனிப்பாறையிலிருந்து உருவாகிறது. டிராங் ட்ரங் பனிப்பாறையில் ஸ்டோட் ஆறும் உருவாக்குகிறது. இது சுருவிற்கு எதிர்த் திசையில் பாய்கிறது. சுரு ஆற்றின் ஆதாரம் கார்கில் நகரத்திற்குத் தெற்கே 142 கிலோமீட்டர் (88 மைல்) தொலைவிலும், சான்சுகருக்கு வடக்கே 79 கிலோமீட்டர் (49 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. சம்மு-காசுமீரின் தலைநகரான சிறிநகர் மேற்கே 331 கிலோமீட்டர் (206 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. சுரு ஆறு சான்சுகார் மலைத்தொடரின் மேற்கு மற்றும் வடக்கு எல்லையை உருவாக்குகிறது.[2] இந்த ஆறு இதன் மூலத்திலிருந்து கார்கில்-சானாசுகர் சாலையுடன் மேற்கு நோக்கிப் பாய்கிறது. நுன் குன் மலையில் மலைத்தொடர்களால் உயர்த்தப்பட்ட சுரு பள்ளத்தாக்கை உருவாக்குகிறது. இது சுரு பள்ளத்தாக்கில் உள்ள சான்சுகார் மலைத்தொடரின் நுன் குன் மலைப் பகுதியிலிருந்து பாய்கிறது.[3] மேலும் குல்மடாங்கோவின் மேய்ச்சல் நிலங்களில் "சில்லிங் நாலா" என்ற துணை ஆற்றுடன் இணைகிறது. இந்த நீரோடை பார்கச்சிக் பனிப்பாறையில் உருவாகிறது. சுரு ஆறு பின்னர் ஆழமான, குறுகிய பள்ளத்தாக்கு வழியாக வடக்கு நோக்கி கார்கில் நகரில் பாய்கிறது. இங்கு இதே பெயரில் உள்ள பனிப்பாறையிலிருந்து உருவாகும் போட்குல் ஆறு ஓடுகிறது.[1] சிங்கோ ஆறு நீரைப் பெறும் திராசு ஆறு, அர்தாசில் சுரு ஆற்றுடன் இணைகிறது. இந்த இடம் கார்கில் நகரத்திற்கு வடக்கே 7 கிலோமீட்டர் (4 மைல்) தொலைவில் உள்ளது.[4] சுரு ஆறு பின்னர் பாக்கித்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காசுமீரில் திராசு மற்றும் சுரு ஆறுகள் இணையும் இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் (3,1 மைல்) தொலைவில் முறையே இந்தியா மற்றும் பாக்கிதானின் பகுதி 43 மற்றும் பகுதி 44 வழியாக நுழைந்து மரோலுக்கு அருகே சிந்து ஆற்றுடன் இணைகிறது.[1][2]

சுரு ஆறு

சுரு ஆற்றின் பெரும்பகுதி கார்கில் மாவட்டத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ளது. இது டோங்குல், சுரு, கிரான்டுங், கோமா மற்றும் அர்தாசு நகரங்கள் வழியாகப் பாய்கிறது. கார்கில் நகரம் சுரு ஆற்றின் கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமாகும். மேலும் இலடாக்கு பிராந்தியத்தில் லே-க்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. கார்கில் மற்றும் ஸ்கர்டு நகரை இணைக்கும் சுரு ஆற்றின் குறுக்கே பழங்காலப் பட்டுப் பாதையின் கிளை ஓடியது. கட்டுப்பாட்டுக் கோடு காரணமாக இச்சாலை இப்போது மூடப்பட்டுள்ளது.[5][6]

சுரு ஆற்றில் சாகசப் படகுப் பயணம் செய்வதற்கான விரிவான சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும் இங்குக் கோடையில் பயிற்சி வழங்கப்படுகிறது. சாகசப் படகுப் பயணங்களுக்கான தொடக்க இடமாக சுரு பள்ளத்தாக்கு உள்ளது. மேலும் இது நுன் குன் மலை மலைக்கு மலையேறும் பயணங்களுக்கு ஒரு தளமாகவும் உள்ளது.[7]

வறண்ட காலநிலை காரணமாக இலடாக்கில் விவசாயம் குறைவாக நடைபெறுகிறது. விவசாயம் ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டுமே நடைபெறுகிறது. சுரு ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியால் உருவாக்கப்பட்ட சுரு பள்ளத்தாக்கு, சுரு ஆற்றின் கால்வாய்கள் மூலம் பாசனத்தைப் பெறுகிறது. பள்ளத்தாக்கில் பயிரிடப்படும் முக்கிய பயிர்களில் வாற்கோதுமை, நெளிகோதுமை, கோசுக்கிழங்கு, கடுகு ஆகியவை அடங்கும்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Joldan, Sonam (Autumn 2006), "Relationship between Ladakh and Buddhist Tibet: Pilgrimage and trade", The Tibet Journal, 31 (3): 43–76, JSTOR 43300982
  2. 2.0 2.1 "Rivers of Ladakh". ladakh.com. Archived from the original on 2 September 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-08-29.
  3. Prem Singh Jina (1996). Ladakh: The Land and the People. Indus Publishing, 1996. p. -16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-057-6. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012.
  4. Omacanda Hāṇḍā (2001). Buddhist Western Himalaya: A politico-religious history. Indus Publishing, 2001. p. -67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-124-5. பார்க்கப்பட்ட நாள் 27 August 2012.
  5. "Kargil the Suru valley". gaffarkashmir.com. Archived from the original on 2019-04-19. பார்க்கப்பட்ட நாள் 2012-08-29.
  6. Sanjeev Kumar Bhasin (2006). Amazing Land Ladakh: Places, People, and Culture. Indus Publishing, 2006. p. -28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-186-3. பார்க்கப்பட்ட நாள் 28 August 2012.
  7. Bali, Yogendra; Somi, R. S., eds. (2005). Incredible Himalayas: Environment, Culture, Tourism, and Adventure. Indus Publishing, 2005. p. -143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-179-5. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012.
  8. Indu Ramchandani (2000). Students' Britannica India, Volumes 1-5. Popular Prakashan, 2000. p. -126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85229-760-5. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]

பொதுவகத்தில் Suru River பற்றிய ஊடகங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரு_ஆறு_(சிந்து)&oldid=4107762" இலிருந்து மீள்விக்கப்பட்டது