சுசூல்
சுசூல் | |
---|---|
சிற்றூர் | |
இந்தியாவின் லடாக் பகுதியில் சுசூலில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 33°33′22″N 78°43′19″E / 33.556°N 78.722°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | லடாக் |
மாவட்டம் | லே |
வருவாய் வட்டம் | துர்புக்[1] |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 949 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மக்கள்தொகை கணக்கெடுப்பு குறியீடு | 908 |
சுசூல் (Chushul) இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில், லே மாவட்டத்தின் கிழக்கில் துர்புக் வருவாய் வட்டத்தில், திபெத் தன்னாட்சிப் பகுதியை ஒட்டி அமைந்த சுசூல் சமவெளியில் உள்ள ஒரு எல்லைக் கிராமம் ஆகும்.[2]இதன் தெற்கில் பாங்காங் ஏரியும், மேற்கில் ஸ்பான்க்கர் ஏரியும் உள்ளது. சுசூலுக்கு கிழக்கே 5 கிமீ தொலைவில், சுசூல் சமவெளிகளுக்கு இடையே, இந்தியா-சீனாவை பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு உள்ளது. சுசூல் கிராமம் இந்திய இராணுவத்தின் முக்கிய கேந்திரமாக உள்ளது. 1962 இந்திய-சீனப் போரின் போது 18 நவம்பர் 1962 அன்று சுசூல் கிராமம் சீனப்படைகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
அமைவிடம்
[தொகு]சுசூல் ஆற்றின் கரையில் அமைந்த சுசூல் கிராமம், பாங்காங் ஏரிக்கு தெற்கே 10 மைல் தொலைவில் உள்ளது.[3]1962 இந்திய-சீனப் போர் மற்றும் 2020 இந்தியா-சீனா எல்லை மோதல்கள் போது சுசூல் பகுதியில் உள்ள வான் படையின் தளம்[4], இந்திய இராணுவத்திற்கு உதவியாக செயல்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சுசூல் கிராமம் 148 குடியிருப்புகளும், 949 மக்கள்தொகையும் கொண்டிருந்தது. மக்களில் பெரும்பான்மையோர் திபெத்திய பௌத்தர்கள் ஆவர்.[5]
இந்திய-சீனா எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகள் சந்திக்குமிடம்
[தொகு]இந்திய-சீனா எல்லைப்பாதுகாப்புப் படை அதிகாரிகள், எல்லைப் பிணக்குகளை பேசித் தீர்ப்பதற்கு சுசூலில் ஒரு மையம் உள்ளது.[6]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://leh.nic.in/about-district/administrative-setup/village/
- ↑ "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. Archived from the original (PDF) on 9 September 2016. பார்க்கப்பட்ட நாள் 2015-07-23.
- ↑ Gazetteer of Kashmir and Ladak, Calcutta: Superintendent of Government Printing, 1890, p. 747
- ↑ Photos on www.flickr.com
- ↑ "Leh district census". 2011 Census of India (Directorate of Census Operations). http://www.censusindia.gov.in/datagov/CDB_PCA_Census/PCA_CDB_0103_F_Census.xls.
- ↑ "Indian soldiers prevent Chinese troops from constructing road in Arunachal". The Times of India. 28 Oct 2014. https://timesofindia.indiatimes.com/india/Indian-soldiers-prevent-Chinese-troops-from-constructing-road-in-Arunachal/articleshow/44953671.cms.
உசாத்துணை
[தொகு]- Ward, A. E. (1896), The Tourist's and Sportsman's guide to Kashmir and Ladak, Thaker, Spink & Co – via archive.org
மேலும் படிக்க
[தொகு]- SINO-INDIAN BORDER DEFENSES CHUSHUL AREA (CIA, 1963)
வெளி இணைப்புகள்
[தொகு]- A place called Chushul, himalaya.com, retrieved 21 November 2020.
- இந்தியா - சீனா எல்லை மோதல்கள்