கல்வான் ஆறு
கால்வான் ஆறு | |
---|---|
Mouth of the Galwan River in Ladakh to the west of the Sino-Indian Line of Actual Control | |
அமைவு | |
நாடுகள் | சீனா மற்றும் இந்தியா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | அக்சாய் சின் / லடாக் AksaiAksai Chin/Ladakh |
⁃ ஆள்கூறுகள் | 34°44′41″N 78°44′09″E / 34.74484°N 78.73579°E |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | சியோக் ஆறு |
⁃ ஆள்கூறுகள் | 34°45′33″N 78°10′13″E / 34.75917°N 78.17028°E |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
வடிநிலம் | சிந்து ஆறு |
கல்வான் ஆறு | |||||||
---|---|---|---|---|---|---|---|
சீனப் பெயர் | |||||||
சீன எழுத்துமுறை | 加勒萬河 | ||||||
எளிய சீனம் | 加勒万河 | ||||||
| |||||||
Hindi name | |||||||
Hindi | गलवान नदी |
கால்வான் ஆறு (Galwan River) என்பது சீனாவின் மேற்கு சிஞ்சியாங் பகுதியில் இருந்து இந்தியாவின் சம்மு காசுமீர் வரை பாய்கின்ற ஒரு நதியாகும். சாம்சுங்லிங் என்ற பகுதியில் தோன்றும் இந்நதி மேற்கு நோக்கிப் பாய்ந்து 34°45′33″வ 78°10′13″கி என்ற ஆள்கூறுகளில் சியோக் ஆற்றுடன் இணைகிறது. சிந்து நதியின் கிளை நதிகளில் நீரின் திசைக்கு எதிராகப் பாயும் நதிகளில் இதுவும் ஒன்றாகும்.
சுமார் 80 கிலோமீட்டர் நீளத்திற்குப் பாயும் இவ்வாற்றில் நீரின் வேகமும் அதிகமாகும். இந்தியாவின் லடாக் பகுதியைச் சேர்ந்த குலாம் ரசூல் கால்வான் [1]என்பவரின் வீரதீரச் செயல்களை பாராட்டும் நினைவாக பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்கள், இந்த ஆற்றுக்கு கால்வான் ஆறு எனப்பெயரிட்டனர்.[2]
கல்வான் ஆறும், கால்வான் பள்ளத்தாக்கும் லடாக்கின் வடமேற்கு நிலப்பகுதியான அக்சாய் சின்னில் உள்ளது. இப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே சர்ச்சை நீடிக்கிறது என்றாலும் இப்பகுதி 1959 ஆம் ஆண்டு முதல் சீனக்கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பள்ளத்தாக்கின் தரைப்பகுதி மிகவும் கடினமாக இருக்கிறது. 1962 ஆம் ஆண்டில் இந்தியா இப்பகுதியில் தன்னுடைய இராணுவப்படையை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் 1962-இல் நடைபெற்றஇந்தியச் சீனப் போரில், சீனா வெற்றி பெற்று இப்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.[3]
இதனையும் காண்க
[தொகு]- தவுலத் பெக் ஓல்டி
- துர்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலை
- சியோக் ஆறு
- பாங்காங் ஏரி
- உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு
- திஸ்கித்
- துர்புக்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lots In A Name". Himalayan Club. Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2013-11-24.
- ↑ Life and times of the man after whom Galwan river is named
- ↑ Maxwell, Neville (1970). India's China War. New York: Pantheon. p. 26. Archived from the original on 12 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 29 August 2013.
{{cite book}}
: Check date values in:|archivedate=
(help)