வடக்கு நிலங்கள்
நடுவண் நிர்வாகத்தில் வடக்கு நிலங்கள் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் | |
[[Image:|100px|நடுவண் நிர்வாகத்தில் வடக்கு நிலங்கள் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியின் கொடி]] |
![]() |
தலைநகரம் • அமைவிடம் |
கில்கித் • 35°21′N 75°54′E / 35.35°N 75.9°E |
மக்கள் தொகை (2017) • மக்களடர்த்தி |
1,492,924 • /km² |
பரப்பளவு |
72496 கிமீ² |
நேர வலயம் | PST (UTC+5) |
மொழிகள் | உருது (தேசிய) ஷினா (ஆட்சி) பல்ட்டி வாக்கி கஜுனா கோவார் |
பிரிவு | சார்ப்பான பகுதி |
• மாவட்டங்கள் | • 14 |
• ஊர்கள் | • 7 |
• ஒன்றியச் சபைகள் | • |
தொடக்கம் • ஆளுனர்/ஆணையர் • முதலமைச்சர் • நாடாளுமன்றம் (உறுப்பினர்கள்) |
ஜூலை 1, 1970 • இம்ரான் அலி • இர்ஃபான் அலி, ஷஹீத் ஹுசேன் • வடக்கு நிலங்களின் சட்டமன்றம் (29) |
இணையத்தளம் | [1] |


ஜில்ஜிட்-பால்டிஸ்தான் அல்லது நடுவண் நிர்வாகத்தில் வடக்கு நிலங்கள்(ஆங்: Federally Administered Northern Areas, உருது: شمالی علاقہ جات) இந்தியா வடக்கில் அமைந்த ஓர் அரசியல் பிரிவு ஆகும். இப்பகுதியின் தலைநகரம் கில்கித். மொத்தத்தில் 1.5 மில்லியன் மக்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். 1970இல் இந்த அரசியல் பிரிவு உருவாக்கப்பட்டது. இது கில்கித் மற்றும் பல்திஸ்தான் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.[1] வடக்கில் ஆப்கானிஸ்தான், வடகிழக்கில் சீன மக்கள் குடியரசு, தென்கிழக்கில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமைந்தன. 2009ஆம் ஆண்டுடன் இப்பகுதியை வடக்கு நிலங்கள் குறிப்பிடுவதை விட்டு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் என்றே அரசால் அழைக்கப்படுகிறது.
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 72,496 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியின் மக்கள் தொகை 14, 92,924 ஆகும்.[2]
1947 - 1948 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் முன்னர் பாகிஸ்தானின் பஷ்தூன் மக்கள் வடக்கு நிலங்களைக் கைப்பற்றி பாகிஸ்தானுடன் இணைத்தனர். தற்போது இது பாகிஸ்தான் அரசுக்குக் கட்டுப்பட்ட மாநிலமாக உள்ளது. வடக்கு நிலங்கள் காஷ்மீரின் பகுதி என்றாலும் இதற்கு, மேற்குப் பகுதியான ஆசாத் காஷ்மீருக்கு உள்ள அதிகாரங்களை பாகிஸ்தான் அரசு அளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் அவையே காஷ்மீரின் வடக்கு பகுதியை குறிக்க வடக்கு நிலங்கள் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியது.
1963 இல் பாகிஸ்தான் வடக்கு நிலங்கள் பகுதியிலிருந்து காரகோரம் பகுதியை சார்ந்த ஒரு பகுதியை சீன அரசிற்கு அளித்தது. உலகின் 2வது உயரமான கொடுமுடியான கே-2 & மற்றொரு உயரமான கொடுமுடியான நங்க பர்வதம் இங்கு உள்ளன.
நிர்வாகம்
[தொகு]மாவட்டங்கள்
[தொகு]இப்பகுதியின் மாவட்டங்கள் 10 ஆக இருந்தது. ஏப்ரல் 2019ல் கூடுதலாக 4 மாவட்டங்கள் நிறுவப்பட்டது. தற்போது இப்பகுதியில் 14 மாவட்டங்கள் உள்ளது. அவைகள்:
- ஆஸ்தோர் மாவட்டம்
- கில்ஜித் மாவட்டம்
- கஞ்சே மாவட்டம்
- கார்மாங் மாவட்டம்
- கீசெர் மாவட்டம்
- குபிஸ்-யாசின் மாவட்டம்
- சிகார் மாவட்டம்
- தயமர் மாவட்டம்
- தாங்கிர் மாவட்டம்
- தாரெல் மாவட்டம்
- நாகர் மாவட்டம்
- ரோண்டு மாவட்டம்
- ஹன்சா மாவட்டம்
- ஸ்கர்டு மாவட்டம்
நகரங்கள்
[தொகு]பிற
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]