உள்ளடக்கத்துக்குச் செல்

நூப்ரா பள்ளத்தாக்கு

ஆள்கூறுகள்: 34°36′N 77°42′E / 34.6°N 77.7°E / 34.6; 77.7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூப்ரா பள்ளத்தாகு
நகரம் மற்றும் கிராமங்கள்
நூப்ரா பள்ளத்தாக்கின் திஸ்கித் பௌத்தக் கோயில் மற்றும் சற்றுத் தொலைவில் ஹன்டர் நகரம்
நூப்ரா பள்ளத்தாக்கின் திஸ்கித் பௌத்தக் கோயில் மற்றும் சற்றுத் தொலைவில் ஹன்டர் நகரம்
நூப்ரா பள்ளத்தாகு is located in லடாக்
நூப்ரா பள்ளத்தாகு
நூப்ரா பள்ளத்தாகு
இந்தியாவின் லடாக்கில் நூப்ரா பள்ளத்தாக்கின் அமைவிடம்
நூப்ரா பள்ளத்தாகு is located in இந்தியா
நூப்ரா பள்ளத்தாகு
நூப்ரா பள்ளத்தாகு
நூப்ரா பள்ளத்தாகு (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°36′N 77°42′E / 34.6°N 77.7°E / 34.6; 77.7
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்லே
வருவாய் வட்டம்நூப்ரா பள்ளத்தாக்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
மைத்திரேயரின் 33 மீட்டர் உயரச் சிலை, நூப்ரா பள்ளத்தாக்கு

நூப்ரா பள்ளத்தாக்கு இந்தியாவின் லடாக் பள்ளத்தாக்கின் வட கிழக்கில் அமைந்துள்ள ஒரு வருவாய் வட்டம் ஆகும். இவ்வட்டத்தில் துர்டுக் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இது லே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான லே நகரத்திலிருந்து 150 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கின் சராசரி உயரம் ஏறத்தாழ 10,000 அடி (3048 மீ). இந்த பள்ளத்தாக்கிற்கு செல்ல லே நகரத்தில் இருந்து கார்துங்க் லா கணவாய் வழியாக பயணம் செய்ய வேண்டும்.[1] இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு தேவையில்லை. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு தேவைப்படுகிறது.

அமைவிடம்

[தொகு]

சியோக் ஆறு, நூப்ரா அல்லது சியாச்சின் ஆற்றுடன் கலக்குமிடத்தில் நூப்ரா சமவெளி அமைந்துள்ளது. நூப்ரா சமவெளி லடாக் மற்றும் காரகோர மலைத்தொடர்களைப் பிரிக்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி (3,000 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. லே நகரத்திற்கு வடக்கே கார்துங்க் லா கணவாய் வழியாக 160 கிலோ மீட்டர் தொலைவில் நூப்ரா சமவெளி உள்ளது..

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 3606 குடியிருப்புகள் கொண்ட நூப்ரா வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள் தொகை 22,433 ஆகும். அதில் ஆண்கள் 13,740 மற்றும் பெண்கள் 8,693 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 633 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 72.06%. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தவரும், பழங்குடியினரும் முறையே 67 மற்றும் 16,455 ஆக உள்ளனர். நூப்ரா பள்ளத்தாக்கு வருவாய் வட்டத்தில் பௌத்தர்கள் 47.43%, இசுலாமியர்கள் 33%, இந்து சமயத்தவர்கள் 18.53% மற்றும் பிறர் 0.70% ஆகவுள்ளனர்.[2]

வரலாறு

[தொகு]

1947 இந்திய பாகிஸ்தான் போரின் போது, கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்து கொண்டது. பின்னர் 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் முடிவில் பல்டிஸ்தான் பகுதியில் இருந்த நூப்ரா பள்ளத்தாக்கின் சாளுங்கா, தியாக்சி, துர்டுக், தாங் உள்ளிட்ட நான்கு கிராமங்களை இந்தியா கைப்பற்றி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துடன் இணைத்தது. பின்னர் 2019ஆம் ஆண்டில் லடாக் ஒன்றியப் பகுதியில் இணைக்கப்பட்டது.

புவியியல்

[தொகு]
நூப்ரா பள்ளத்தாக்கின் மணற்திட்டுகள்

இது உயரமான குளிர் பாலைவனமாக காணப்படுகிறது. இங்கு மிகக்குறைவான தாவர வகைகளே உள்ளன. இங்குள்ள கிராமங்களில் கோதுமை, பார்லி, பட்டாணி, கடுகு, ஆப்பிள்கள், அக்ரூட் பருப்புகள், ஆப்ரிகாட் ஆகியன விளைகின்றன. இங்கு பெரும்பாலான மக்கள் பௌத்த மதத்தினர் ஆவர்.

நூப்ரா பள்ளத்தாக்கின் மேற்கில் குறைந்த உயரத்தில் உள்ள பகுதிகள் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளன. இதன் வடக்கில் சியாச்சின் பனிமலை அமைந்துள்ளது. இங்கு சியோக் ஆறு பாய்கிறது. சஸ்ஸேர் கணவாயும் கரகோரம் கணவாயும் வடமேற்கில் அமைந்துள்ளன. முற்காலத்தில் இப்பகுதி மேற்கு சீனாவின் சிஞ்சியாங், நடு ஆசியா ஆகிய பகுதிகளுக்கு வர்த்தக வழியாக இருந்தது.

நூப்ரா பள்ளத்தாக்கிற்குள் நுழைய ஆண்டு முழுவதும் அனுமதிக்கப்படுகிறது. இங்கு உலகின் மிக அதிக உயரத்திலுள்ள சாலை உள்ளது.

சியாச்சின் பனிமலையில் நூப்ரா பள்ளத்தாக்கின் அமைவிடம்

கல்வி

[தொகு]

இங்குள்ள மக்களுக்கு நல்ல, தரமான கல்வி கிடைக்கவில்லை. இங்குள்ள மோசமான வானிலை காரணமாக அரசாங்கத்தால் நிலையான பள்ளிகளை அமைக்க முடியவில்லை. நூப்ரா பிராந்தியத்தில் மிக சில அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கர்மபூமி எனும் அரசு சாரா தொண்டு நிறுவனம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு உதவும் பணியில் இறங்கியுள்ளது.


படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nubra Valley
  2. [ https://www.censusindia.co.in/subdistrict/nubra-tehsil-leh-jammu-and-kashmir-11 Nubra Tehsil Population, Caste, Religion Data]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூப்ரா_பள்ளத்தாக்கு&oldid=4042084" இலிருந்து மீள்விக்கப்பட்டது