சத்யபிரமோத தீர்த்தர்
சத்யபிரமோத தீர்த்தர் | |
---|---|
பிறப்பு | 1918 குட்டல், தார்வாட் மாவட்டம், கருநாடகம் |
இறப்பு | 3 நவம்பர் 1997 திருக்கோயிலூர், தமிழ்நாடு |
இயற்பெயர் | குருராஜாச்சார்ய குட்டல் |
சமயம் | இந்து சமயம் |
தலைப்புகள்/விருதுகள் | தர்க்க சிரோன்மணி |
நிறுவனர் | ஜெயதீர்த்த வித்யாபீடம் |
தத்துவம் | துவைதம் |
குரு | சத்யபிஜ்னா தீர்த்தர் |
சத்யபிரமோத தீர்த்தர் (Satyapramoda Tirtha) (1918- 3 நவம்பர் 1997) இவர் ஓர் இந்திய இந்து மதத் தத்துவவாதியும், குருவும், ஆய்வாளரும், ஆன்மீகத் தலைவரும், துறவியும், தென்னிந்தியாவில் துவைத வேதாந்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மடமான உத்திராதி மடத்தின் துவைதத் தத்துவத்திற்கு புத்துயிர் அளித்தவரான மத்துவாச்சாரியருக்குப் பிறகு இவர் உத்திராதி மடத்தின் 41 வது தலைவராக இருந்தார்.[1] மேலும் ஜெயதீர்த்த வித்யாபீடத்தின் நிறுவினார். [2]
ஜெயதீர்த்த வித்யாபீடம்
[தொகு]சத்யப்பிரமோத தீர்த்தர் 1989 ஆம் ஆண்டில் ஜெயதீர்த்த வித்யாபீடத்தை நிறுவினார். இது தற்போது 200 க்கும் மேற்பட்ட மாணவர்களையும் 15 ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. துவைத வேதாந்தம், வியாகரணம், நியாயம் மற்றும் நியாயசுத்தம் ஆகிய பாடங்களில் இங்கு கற்பிக்கப்படுகிறது. இது ஆயிரக்கணக்கான பனை-இலை கையெழுத்துப் பிரதிகளின் பரந்த தொகுப்பைக் கொண்டுள்ளது. [3][4]
குறிப்பிடத்தக்க படைப்புகள்
[தொகு]இவர் ஆறு முக்கிய படைப்புகளை இயற்றியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை வர்ணனைகளும் இவரது சில சொந்தப் படைப்புகளுமாகும். இவரது நியாய சுத்த மந்தனம் என்ற நூல், அத்வைத அறிஞரான அனந்தகிருஷ்ண சாஸ்திரியின், ஜெயதீர்த்தரின் நியாய சுத்தம் மீதான விமர்சனத்திற்கு பதிலாகவும், மேலும், ஆதி சங்கரருக்குப் பிந்தைய அத்வைதச் சிந்தனையாளர்களின் பொதுவான விமர்சனங்களுக்கு விடையாகும். [5][6][7]
மேலும் காண்க
[தொகு]- துவைத வேதாந்தம்
- மாதவச்சார்யாவின் படைப்புகள்
- உத்திராதி மடம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sharma 2000, ப. 229.
- ↑ Tripathi 2012, ப. 198.
- ↑ Tripathi 2012, ப. 108.
- ↑ Vedas continue to live here. The Times of India. Retrieved 3 June 2012.
- ↑ Sharma 2000, ப. 553.
- ↑ Potter 1995, ப. 1504.
- ↑ Raghunathacharya 2002, ப. 261.
நூலியல்
[தொகு]- Sharma, B. N. Krishnamurti (2000). A History of the Dvaita School of Vedānta and Its Literature, Vol 1. 3rd Edition. Motilal Banarsidass (2008 Reprint). ISBN 978-8120815759.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Rao, C. R. (1984). Srimat Uttaradi Mutt: Moola Maha Samsthana of Srimadjagadguru Madhvacharya.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Potter, Karl H. (1995). Encyclopedia of Indian philosophies. 1, Bibliography : Section 1, Volumes 1-2. Motilal Banarsidass Publications. ISBN 978-8120803084.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Dasgupta, Surendranath (1975). A History of Indian Philosophy, Volume 4. Motilal Banarsidass. ISBN 978-8120804159.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Naqvī, Ṣādiq; Rao, V. Kishan (2005). A Thousand Laurels--Dr. Sadiq Naqvi: Studies on Medieval India with Special Reference to Deccan, Volume 2. Department of Ancient Indian History, Culture & Archaeology, Osmania University.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Tripathi, Radhavallabh (2012). Ṣaṣṭyabdasaṃskr̥tam: India. Rashtriya Sanskrit Sansthan. ISBN 978-8124606292.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Raghunathacharya, Es. Bi (2002). Modern Sanskrit Literature: Tradition & Innovations. Sahitya Akademi. ISBN 978-8126014118.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)