உள்ளடக்கத்துக்குச் செல்

கௌதம புத்தரின் நினைவுச் சின்னங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌதம புத்தரின் அஸ்தியை பங்கீட்டுக் கொள்ளும் அல்லக்கப்பை உள்ளிட்ட எட்டு கண இராச்சியங்களின் தலைவர்கள்
கௌதம புத்தர் உருவம் பொறித்த பீமரன் பேழை கிடைத்த இடம் பீமரன் தூபி, ஆப்கானித்தான், காலம் கிபி முதல் நூற்றாண்டு

கௌதம புத்தரின் நினைவுச் சின்னங்கள் (Relics associated with Buddha), தற்கால இந்தியாவின் குசிநகரத்தில் கௌதம புத்தர் தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடைந்த பின்னர் அவரது பூத உடலை எரியூட்டி கிடைத்த சாம்பல் மற்றும் எலும்புகளை 8 கண இராச்சியங்களின் தலைவர்கள் பங்கிட்டுக் கொண்டதாக மகாபரிநிப்பான சூக்தம் எனும் பௌத்த நூல் கூறுகிறது.

நினைவுச் சின்னங்களின் பகுதிகள்

[தொகு]
புத்தரின் அஸ்தியை பங்கிட்டுக்கொண்ட குசிநகர்

இறந்த கௌதம புத்தரின் உடலை குசி நகரத்தில் எரியூட்டினாலும், கௌதம புத்தர் பிறந்த சாக்கிய குலத்தவர்களுக்கே முதலில் புத்தரின் அஸ்தி அனுப்பி வைக்கப்பட்டது. மகத மன்னர் அஜாதசத்துரு உள்ளிட்ட கண இராச்சியங்களின் தலைவர்கள் புத்தரின் அஸ்திக்கு உரிமை கோரியதால், அனைத்து கண சங்கத் தலைவர்களுக்கும் புத்தரின் அஸ்தியை எட்டு பங்காகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.[1] எஞ்சிய ஒரு பகுதி அஸ்தியை பிப்லிவனத்தை ஆண்ட மௌரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. [2]கௌதம புத்தர் அஸ்தியைப் பெற்றுக் கொண்ட தலைவர்கள், தங்கள் ஊர்களில் அஸ்தியின் மீது தூபிகள் எழுப்பி கௌதம புத்தரை நினைவு கூர்ந்தனர்.

குசிநகர், பிப்ரவா, இராமகிராமம் மற்றும் வைசாலி, அகழாய்வில் கௌதம புத்தரின் அஸ்தி வைத்து எழுப்பிய தூபிகள் கண்டறியப்பட்டது. [3][4]

புத்தகோசர் கூற்றுப்படி, புத்தரின் அஸ்தியின் ஒரு சிறு பகுதி, பெசாவர் நகரத்திற்கு அருகில் கனிஷ்கர் பேழையில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அசோகரால் பரவிய புத்தரின் அஸ்திகள்

[தொகு]
புத்தார் உருவம் பொறித்த கனிஷ்கர் பேழை, கிபி 127, பெசாவர் அருகில்

மகத மன்னர் அஜாதசத்துரு, புத்தரின் அஸ்தி மீது எழுப்பிய தூபிகளிலிருந்து, அசோகர் (கிமு-304 – 232) புத்தரின் அஸ்தியின் ஒரு பகுதியைத் தோண்டி எடுத்து மௌரியப் பேரரசு பகுதிகளில் புத்தரின் அஸ்திகளின் பகுதிகள் மீது ஆயிரக்கணக்கான தூபிகளை எழுப்பினார்..[5][6][note 1]

கிபி 5 மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு வருகை தந்த சீன பௌத்த அறிஞர்களான பாசியான் மற்றும் யுவான் சுவாங் தமது பயணக் குறிப்புகளில் புத்தரின் அஸ்தி மீது நிறுவப்பட்ட தூபிகள் சிதிலமடைந்த நிலையில் இருந்ததாக கூறுகின்றனர்.[7]

கௌதம புத்தரின் நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்கள்

[தொகு]
தாமேக் தூபி, சாரநாத், இந்தியா
புத்தரி அஸ்தி கொண்ட பீமரன் பேழை, ஆப்கானித்தான்
கௌதம புத்தரின் அஸ்தியை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக 8 கண இராச்சியங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையை காட்டும் சிற்பம், சாஞ்சி, கிமு அல்லது கிபி முதலாம் நூற்றாண்டு[8]

குறிப்புகள்

[தொகு]
  1. King Ajātasattu's Magadha kingdom was the predecessor of the Maurya Empire of King Ashoka.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Thomas William Rhys Davids (1901). "Asoka and the Buddha-Relics". Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland: 397–410. doi:10.1017/S0035869X00028653. http://ccbs.ntu.edu.tw/FULLTEXT/JR-ENG/rhy1.htm. 
  2. John Faithfull Fleet (1906). "XXIV:The Tradition about the Corporeal Relics of Buddha". Journal of the Royal Asiatic Society of Great Britain & Ireland: 655–671. doi:10.1017/S0035869X00034857. https://books.google.com/books?id=ZZLPO-SD_ecC&dq=pipphalivana&pg=PA665. 
  3. "Archaeological Excavations". Patna, Bihar, India: K. P. Jayaswal Research Institute. 7 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 October 2022.
  4. Tripathi, PK (20 August 2014). "Ancient stupa in a shambles - Neglect agony for 5th century Buddha relic in Vaishali". The Telegraph. Kolkata, West Bengal, India. பார்க்கப்பட்ட நாள் 8 October 2022.
  5. Strong 2007, ப. 132-136.
  6. K.R. Norman (1983). Pali Literature. O. Harrassowitz. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783447022859.
  7. A. Srivathsan (2012). "Gautama Buddha, Four Bones And Three Countries".
  8. John Marshall, A Guide to Sanchi, 1918 p.46ff (Public Domain text)

ஆதாரங்கள்

[தொகு]