நாகார்ஜுனகொண்டா
நாகார்ஜுன கொண்டா | |
---|---|
உள்ளூர் பெயர் నాగార్డున కొండ | |
பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டின் பௌத்த தலம் | |
அமைவிடம் | குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூற்றுகள் | 16°31′18.82″N 79°14′34.26″E / 16.5218944°N 79.2428500°E |
கட்டப்பட்டது | பொ.ஊ.மு. 225–325 |
கட்டிட முறை | ஆந்திர பௌத்தக் கட்டிடக் கலை |
நிர்வகிக்கும் அமைப்பு | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
நாகார்ஜுனகொண்டா (Nagarjunakonda) (நாகார்ஜுன மலை எனப் பொருள்) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் எனுமிடத்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க பௌத்தப் புனிதத் தலம் ஆகும்.[1][2][3]
முன்னர் ஸ்ரீபர்தவதம் என்று அழைக்கப்பட்ட இம்மலையை, பொ.ஊ.மு. இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியவில் வாழ்ந்தவரும், மகாயான பௌத்தத்தைப் பரப்பியவருமான பௌத்த அறிஞர் நாகார்ஜுனரின் பெயரால் தற்போது நாகார்ஜுனகொண்டா என்று அழைக்கப்படுகிறது.
பௌத்தப் புனிதத் தலமான அமராவதி கிராமத்திலிருந்து[4] மேற்கில் 160 கிலோ மீட்டர் தொலைவில் நாகார்ஜுனகொண்டா அமைந்துள்ளது.
சீனா, காந்தாரம், வங்காளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து நாகார்ஜுனகொண்டாவில் உள்ள பௌத்த சமயக் கல்வி மையங்களிலும், விகாரங்களிலும் பௌத்த பிக்குகள் தங்கிப் படித்தனர்.
வரலாறு
[தொகு]பொ.ஊ.மு. 225 – 325 முடிய நாகார்ஜுனகொண்டா, சாதவாகனர்களின் வழிவந்த ஆந்திர இச்வாகு மன்னர்களின் தலைநகராக விளங்கியது. இம்மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நாகார்ஜுனகொண்டாவில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டது.
பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியில் இருந்த முப்பதிற்கும் மேற்பட்ட புத்த விகாரைகள் மற்றும் பௌத்த கல்வெட்டுகள் தொல்லியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.[5]
1960-இல் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே நாகார்ஜுன நீர்த்தேக்கக் கட்டுமானப் பணியின் போது இங்கிருந்த பௌத்த நினைவுச் சின்னங்கள் நீரில் மூழ்கி விடும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே பௌத்த நினைவுச் சின்னங்களை அகற்றி, நாகார்ஜுன மலையின் உச்சியில், 1966-இல் கட்டிய அருங்காட்சியகத்தில் வைத்து இந்தியத் தொல்லியல் துறையினர் பராமரித்து வருகின்றனர்.[6]
பிற பௌத்தப் புனிதத் தலங்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1]
- ↑ [2]
- ↑ [3]
- ↑ Excavations at Amaravati today
- ↑ Ancient India நாகார்ஜுன கொண்டாவின் கலை மற்றும் கட்டிடக்கலை
- ↑ https://translate.google.co.in/translate?hl=ta&sl=en&u=http://asi.nic.in/asi_museums_badami.asp&prev=search
- ↑ Excavations at Amaravati today
வெளி இணைப்புகள்
[தொகு]- Photographs of Nagarjunakonda and related sites பரணிடப்பட்டது 2017-06-29 at the வந்தவழி இயந்திரம்