உள்ளடக்கத்துக்குச் செல்

பிப்ரவா

ஆள்கூறுகள்: 27°26′35″N 83°07′40″E / 27.443000°N 83.127800°E / 27.443000; 83.127800
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிப்ரவா
தொல்லியல் களம்
பிப்ரவா is located in உத்தரப் பிரதேசம்
பிப்ரவா
பிப்ரவா
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவா கிராமத்தின் அமைவிடம்
பிப்ரவா is located in இந்தியா
பிப்ரவா
பிப்ரவா
பிப்ரவா (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°26′35″N 83°07′40″E / 27.443000°N 83.127800°E / 27.443000; 83.127800
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சித்தார்த்நகர்
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
பிப்ரவா கிராமத்தின் பௌத்த தூபி

பிப்ரவா (Piprahwa) வடஇந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம் - நேபாள எல்லையில் உள்ள, சித்தார்த்தநகர் மாவட்டத்தின் பன்சி தாலுக்காவில் உள்ள சிறிய கிராமம் ஆகும்.

கௌதம புத்தர் தமது 29வது அகவை வரை குடும்பத்தினருடன் வாழ்ந்த பண்டைய கபிலவஸ்து நகர அரண்மனையின் தொல்பொருட்களை, தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளர்கள் பிப்ரவா கிராமத்தில் அகழ்ந்தெடுத்தனர்.

வாசனையுடன் கூடிய கருப்பு நிற காலாநமக் நெல் இக்கிராமத்தில் அதிகம் பயிரிடப்படுகிறது.[2]

கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பின், அவரது உடல் குசிநகரில் எரியூட்டப்பட்டது. கௌதம புத்தரின் சாம்பல் மற்றும் எலும்புகளின் ஒரு பகுதியை பிப்ரவா கிராமத்தில் வைத்து, அதன் மீது கட்டப்பட்ட ஒரு பெரிய தூபியும், சிதலமடைந்த பௌத்த விகாரைகளும், 1971-1973 காலகட்டங்களில் நடைபெற்ற இந்தியத் தொல்லியல் அய்வகத்தின் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டது. [3]

வில்லியம் கிளாக்ஸ்டோன் பெப்பியின் அகழ்வாராய்ச்சிகள்

[தொகு]

சீன பௌத்தப் பிக்குளான பாசியான் மற்றும் யுவான் சுவாங் கபிலவஸ்துவிற்கு புனித யாத்திரை மேற்கொண்ட குறிப்புகளின் அடிப்படையில்,[4][5][6][7]

பிரித்தானிய தொல்லியல் அறிஞரான வில்லியம் கிளாக்ஸ்டோன் பெப்பி என்பவர் சனவரி, 1898ல் பிப்ரவா கிராமத்தில் அகழ்வாராய்ச்சி செய்த போது, ஒரு தூபி மற்றும் விகாரைகள் கண்டெடுத்தார். மேலும் எலும்பு துண்டுகள், சாம்பல் மற்றும் நகைகள் உள்ளடக்கிய ஐந்து சிறிய குவளைகள் கொண்ட ஒரு கல் குடுவை கண்டெடுக்கப்பட்டது. [8] ஒரு மட்பாண்டத்தின் மேற்புறத்தில் மேலும் பிராமி எழுத்தில எழுதப்பட்டிருந்த ஒரு மட்பாண்டம் கண்டெடுக்கப்பட்டது. அதை ஜார்ஜ் புக்லர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அதன் பொருள்:

This relic-shrine of divine Buddha (is the donation) of the Sakya-Sukiti brothers, associated with their sisters, sons, and wives,[9]

பிப்ரவா கிராமத்தில் கிடைத்த கௌதம புத்தரின் எலும்புகள், சாம்பல் முதலிய புனிதப் பொருட்களின் சிறு பகுதிகளை, பௌத்த சமயத்தை பின்பற்றும் தாய்லாந்து, இலங்கை, பர்மா, மங்கோலியா போன்ற நாடுகளுக்கு எடுத்துச் சென்று, அதனை வைத்து நினைவுத் தூபிகள் எழுப்பி வழிபடுகின்றனர். [10][11]

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் அகழ்வாராய்ச்சிகள்

[தொகு]
பிப்ரவா கிராமத்தின் தெற்கில் உள்ள விகாரையின் எஞ்சிய பகுதிகள்

1971 - 1973களில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினர் இக்கிராமத்தில் மீண்டும் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டனர். கிமு நான்காம் - ஐந்தாம் நூற்றாண்டின் காலத்திய தொல்பொருட்கள் அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்தன. கௌதம புத்தர் வாழ்ந்த பண்டைய கபிலவஸ்து நகரமே தற்கால பிப்ரவா கிராமம் என்பதற்கு சான்றுகள் கிடைத்துள்ளது. [12]

இங்கு கிடைத்த கௌத புத்தரின் எலும்புத் துண்டுகளின் ஒரு பகுதி தேசிய அருங்காட்சியகம், புது டில்லியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. [13]

தற்போது பிப்வரா - கன்வாரியா கிராமங்களில் கிடைத்த தொல்பொருட்கள், இந்தியத் தொல்லியல் துறை இயக்கும் கபிலவஸ்து அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[14]

வேற்று கருத்துகள்

[தொகு]

சில அகழ்வாராய்ச்சியாளர்கள் பிப்ரவா கிராமத்திற்கு அருகில் உள்ள, நேபாள நாட்டின் திலௌராகோட் கிராமமே கௌதம புத்தர் வாழ்ந்த பண்டைய கபிலவஸ்து நகரம் என கருதுகின்றனர்.[15]

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pincode of Piprahwa Bansi Siddharth Nagar District in State of Uttar Pradesh
  2. Mishra 2005.
  3. Excavations at Piprahwa and Ganwaria[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Beal, Samuel (1884). Si-Yu-Ki: Buddhist Records of the Western World, by Hiuen Tsiang. 2 vols. Translated by Samuel Beal. London. 1884. Reprint: Delhi. Oriental Books Reprint Corporation. 1969. Volume 1
  5. Beal, Samuel, trans. (1911). The Life of Hiuen-Tsiang. Translated from the Chinese of Shaman (monk) Hwui Li. London. Reprint Munshiram Manoharlal, New Delhi. 1973.
  6. Li, Rongxi (translator) (1995). The Great Tang Dynasty Record of the Western Regions. Numata Center for Buddhist Translation and Research. Berkeley, California. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-886439-02-8
  7. Watters, Thomas (1904). On Yuan Chwang's Travels in India, 629-645 A.D. Volume1. Royal Asiatic Society, London.
  8. Peppe 1898, ப. 573–88.
  9. Bühler 1898, ப. 388.
  10. Smith 1898, ப. 868.
  11. Jinavaravansa 2003, ப. 214.
  12. Srivastava 1980, ப. 103–10.
  13. Srivathsan 2012.
  14. Archaeological Survey of India 2015.
  15. Tuladhar, Swoyambhu D. (November 2002), "The Ancient City of Kapilvastu - Revisited" (PDF), Ancient Nepal (151): 1–7

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிப்ரவா&oldid=4072006" இலிருந்து மீள்விக்கப்பட்டது