மாயா
Appearance


மாயா அல்லது மகா மாயா கவுதம புத்தரின் தாயார். இவரை மகாமாயா, மாயாதேவி என்ற பெயர்களாலும் அழைப்பர். இவர் பண்டைய நேபாளத்தின் தேவதகா வம்சத்தில் பிறந்தார். இவர் கபிலவத்துவின் மன்னனான சுத்தோதனரை மணந்தார். இவருக்கு லும்பினியில், கௌதமர் பிறந்த ஏழு நாட்களுக்குப் பின்னர் இறந்து விட்டார்.[1] கௌதம புத்தரை வளர்க்க, சுத்தோதனர், மாயாவின் தங்கையான மகாபிரஜாபதி கௌதமியை திருமணம் செய்து கொண்டார்.