ததாகதர்

ததாகதர் (மனதில் நிறைநிலை அடைந்தவர்), கௌதம புத்தர் துறவறம் பூண்டு, ஆறு ஆண்டுகள் கயையில் தவம் செய்து ஞானம் அடைந்தார். தான் அடைந்த ஞானத்தின் மூலம் கடும் நோன்புகள் போன்ற தவம் மற்றும் உண்ணாநோன்பு போன்ற கடும் விரதங்களைக் கையாள்வதன் மூலம் ஒரு மனிதன் விடுதலை அடைய இயலாது என்று அறிந்தார். கடும் தவம் மற்றும் உலக போகங்களை துய்ப்பதற்கு பதிலாக நடுவழியைக் கண்டார். நடுவழியைப் பின்பற்றுபவதன் மூலம் அன்பு நிறைந்த நெஞ்சத்துடன் அனைத்து உயிர்களையும் சமமாக நோக்க வேண்டும் என உபதேசித்தார். கௌதம புத்தர் தமது சீடர்களான பிக்குகள் மத்தியில் உபதேசம் செய்கையில், தம்மை ததாகதர் என்றே கூறிக்கொள்கிறார். [1] மேலும் கௌதம புத்தரின் சீடர்கள், புத்தரை ததாகதர் என்றே குறிப்பிடுகின்றனர் [2]
ததாகர் பொருள் விளக்கம்
[தொகு]வட மொழிச் சொல்லான ததாகதர் என்பதற்கு ததா என்பதற்கு அப்படியே என்றும்; கதர் என்பதற்கு போனவர் என்று பொருள்படும். ததாகதர் என்பதற்கு குடும்பத்தைச் சட்டென துறந்து துறவு நிலை மேற்கொண்டவர் என்பதாகும். [3][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கௌதம புத்தரின் வாழ்க்கை
- ↑ #https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.pdf/208போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை
- ↑ 3.0 3.1 Tathāgata तथागत. tathAgata. (accessed: January 19, 2016)
- ↑ யார் இந்த ததாகதர்