உள்ளடக்கத்துக்குச் செல்

நாளந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாளந்தா
नालंदा
நகரம்
நாளாந்த பல்கலைக்கழக இடிப்பாடுகள்
நாளாந்த பல்கலைக்கழக இடிப்பாடுகள்
நாடுஇந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்நாளந்தா
மொழிகள்
 • அதிகாரப்பூர்வ மொழிகள்மைதிலி, இந்தி

நாளந்தா (Nalanda) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும். இது மாநிலத் தலைநகரான பாட்னாவிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இங்கு தான் பண்டைய காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது. 14 ஹெக்டேர் பரப்பளவுள்ள பல்கலைக்கழக கட்டடம் செங்கற்களால் ஆனது. திபெத்தியர்கள், சீனர்கள், கிரேக்கர்கள், பெர்சியர்கள் என பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், அறிஞர்களும் இந்த பல்கலைக்கழகத்தால் ஈர்க்கப்பட்டனர்.[1] பொ.ஊ. 1193 ஆம் ஆண்டு பக்தியார் கில்ஜியின் இராணுவத்தால் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது.[2] இவர்களால் அழிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் நூலகம் தீயிட்டு மூன்று மாதங்களாக எரிந்ததாகக் கூறப்படுகிறது, இதன் மூலம் அங்குள்ள நூல்களின் எண்ணிக்கையை மதிப்பிடலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
  2. Scott, David (May 1995). "Buddhism and Islam: Past to Present Encounters and Interfaith Lessons". Numen 42 (2): 141. doi:10.1163/1568527952598657. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாளந்தா&oldid=3813967" இலிருந்து மீள்விக்கப்பட்டது