அல்லக்கப்பை
அல்லக்கப்பை (Allakappa), பௌத்த இலக்கியங்கள் கூறும் பண்டைய இந்தியாவின் எட்டு குடியரசுகளில் ஒன்றாகும். இது தற்கால இந்தியாவின் பீகாரில் இருப்பதாக திக்க நியாயகம் எனும் பௌத்த நூல் கூறுகிறது.[1][2] இந்த குடியரசுகளுக்கும், கௌதம புத்தர் பரிநிர்வாணம்[1] அடைந்த பிறகு, அவரது உடலை எரியூட்டியப் பின்னர் கிடைத்த எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு கூறுகள் அல்லக்கப்பை உள்ளிட்ட 8 குடியரசுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த 8 குடியரசுகளும் புத்தரின் எலும்புகள் மற்றும் சாம்பலை வைத்து தூபிகள் எழுப்பி நினைவுகூர்ந்தனர்.
மல்லர்களின் தலைநகரான குசி நகரத்தில் கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததால், துவக்கத்தில் புத்தரின் எலும்புகள் மற்றும் சாம்பலை மல்லர்கள் மட்டுமே வைத்திருந்தனர். புத்தரின் அஸ்தியின் உரிமை கோரி பிற கண சங்கங்கள் மல்ல இராச்சியத்துடன் சண்டை இடத்தொடங்கியது. எனவே புத்தரின் அஸ்தியான பங்கிட்டு கண சங்கங்களின் தலைநகரங்களான ராஜகிரகம், வைசாலி, கபிலவஸ்து, இராமகிராமம், பவா நகரம், குசிநகர், பிப்லிவனம் மற்றும் அல்லக்கப்பை நகரங்களுக்கு பங்கிடப்பட்டது. அத்தலைநகரங்களில் புத்தரின் அஸ்தியை வைத்து தூபிகள் புத்தரை நினைவுகூர்ந்தனர்.[1]