மீரா-பய்ந்தர்
மீரா-பய்ந்தர் | |
---|---|
மகாராட்டிராவின் மும்பை பெருநகரப் பகுதியில் மீரா பயந்தரின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 19°17′N 72°51′E / 19.29°N 72.85°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | தானே |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | மீரா-பயந்தர் மாநகராட்சி |
• துணை மேயர் | Hasmukh Gahlot |
• மும்பை பெருநகரப் பகுதி | திலீப் தோலே |
பரப்பளவு | |
• மொத்தம் | 79.4 km2 (30.7 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 8,09,378 |
• அடர்த்தி | 10,000/km2 (26,000/sq mi) |
மொழி | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 401107 மீரா ரோடு, 401101 பயந்தர்-மேற்கு & 401105 பயந்தர் (கிழக்கு) |
தொலைபேசி குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH-04 |
பாலின விகிதம் | 1000: 898 |
இணையதளம் | www |
மீரா பயந்தர் (Mira-Bhayandar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்த பெரிய நகரங்களில் ஒன்றாகும். 79 வார்டுகளும், 79.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட மாநகராட்சியான இந்நகரம்[1] மும்பை பெருநகரப் பகுதியாகும். இந்நகரம் சால்செட் தீவிற்கு வடக்கில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 1,87,059 வீடுகள் கொண்ட மீரா-பயாந்தர் மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 8,09,378 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 429,260 மற்றும் 380,118 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 898 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 88,015 - 10.87% ஆகும். சராசரி எழுத்தறிவு 90.98% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 68.96%, இசுலாமியர்கள் 16.28%, பௌத்தர்கள் 1.86%, சமணர்கள் 5.67%, சீக்கியர்கள் 0.53%, கிறித்துவர்கள் 6.01% மற்றும் பிறர் 0.68% ஆக உள்ளனர்.[2]