மும்பையின் காலக்கோடுகள்
Appearance
மும்பையின் காலக்கோடுகள் (Time lines of Mumbai), மும்பையின் வரலாறு கிமு 600 ஆண்டுகள் முதல் அறியப்படுகிறது.
18ஆம் நூற்றாண்டு வரை
[தொகு]- கிமு 600 – மராத்திய மொழி பேசும் கோலி மக்கள் மற்றும் அக்ரி மக்களின்[1] குடியிருப்புகள் முதன்முதலில் மும்பையில் காணப்பட்டது.[2]
- கிமு 300 –மௌரியப் பேரரசின் ஆட்சிப் பகுதியில் இருந்தது.
- கிபி 900 – சிலகார வம்ச ஆட்சியில் மும்பை இருந்தது.
- 1343 – குஜராத் சுல்தானகத்தின் பகுதியாக இருந்தது.
- 1431 –ஹாஜி அலி தர்கா நிறுவப்பட்டது.
- 1508 - போர்த்துகேய இந்தியாவின் ஆளுநர் பிரான்சிஸ் கோ டீ அல்மெய்டா மும்பை துறைமுகத்தை அடைந்தார்..
- 1534 – மும்பை பகுதி போர்த்துகேயர்க்ளுக்கு விட்டு கொடுக்கப்பட்டது.
- 1661 – போர்த்துகேய இளவரசி கேத்தரின்--இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு திருமணத்தை முன்னிட்டு வரதட்சணையாக மும்பை பகுதியை பிரித்தானியப் பேரரசுக்கு வழங்கப்பட்டது.
- 1668/1669 – இரண்டாம் சார்லசிடமிருந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மும்பையின் ஏழு தீவுகளைக் குத்தகையாக எடுத்துக் கொண்டது.
- 1670 – பார்சி வணிகர் பீம்ஜீ பரீக் அச்சு இயந்திரத்தை இறக்குமதி செய்து நிறுவினார்.
- 1672 – பார்சி மக்களின் அமைதியின் கோபுரம் மற்றும் நெருப்புக் கோவில் முதன்முதலில் நிறுவப்பட்டது.
- 1675 – மும்பையின் மக்கள் தொகை 60,000 இருந்து 1661ல் 1,00,000 ஆக உயர்ந்தது.
- 1675 –போரி பந்தரில் மும்பா தேவி கோவில் நிறுவப்பட்டது.
- 1709 – தனியார் பார்சி நெருப்புக் கோவில் நிறுவப்பட்டது.
- 1735 - மும்பையில் பிரபாதேவி கோயில் நிறுவப்பட்டது.
- 1735 –வாடியா மற்றும் டங்கன் நிறுவனத்தினர் கப்பல் கட்டும் நிறுவனத்தை துவக்கினர்.
- 1750 –ஆசியா முதல் கப்பல் கட்டும் தளம் மும்பையில் துவக்கப்பட்டது.
- 1777 – ருஸ்தம் கெரஸ்ப்ஜெரே என்பவர் முதல் செய்தித் தாள் வெளியிடப்பட்டார்.
19ஆம் நூற்றான்டு
[தொகு]- 1801 – பிரபாதேவி பகுதியில் சித்தி விநாயகர் கோயில் நிறுவப்பட்டது.
- 1803 – மும்பையில் நெருப்பு பிடித்தது.[3]
- 19 சூன் 1810 – எச் எம் எஸ் மிந்தேன் போர்க்கப்பல் மும்பையில் கட்டப்பட்டது.[4]
- 1822 – குஜராத்தி மொழியில் பம்பாய் சமாச்சார் எனும் நாளிதழ் வெளியிடப்பட்டது.
- 1838 – முதல் வணிக இதழான மும்பை டைம்ஸ் வெளியானது.
- 1845 – பெரிய மருத்துவக் கல்லூரி மற்றும் ஜாம்செட்ஜி-ஜீஜீபாய் குழும மருத்துவமனைகள் நிறுவப்பட்டது.[5]
- 1846 –சால்சேட் தீவு-மாகிம் இணைப்புச் சாலை போடப்பட்டது.
- 16 ஏப்ரல் 1853 – மும்பை-தானே இடையே, முதல் இருப்புப்பாதை போடப்பட்டு, தொடருந்து சேவைகள் தொடங்கியது.
- 1854 – முதல் பருத்தி ஆலை நிறுவப்பட்டது.
- 1857 – மும்பை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
- 1858 – இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் சீன பட்டய வங்கியின் மும்பை கிளை திறக்கப்பட்டது.
- 1864 – பரோடா மற்றும் மத்திய இரயில்வேக்கள் மும்பை வரை சேவைகள் தொடங்கியது.
- 1870 – மும்பை துறைமுக அறக்கட்டளை அமைக்கப்பட்டது..
- 1874 – மும்பை துறைமுகப் பகுதியில் செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளி நிறுவப்பட்டது.
- 1885 – இந்திய தேசிய காங்கிரசு கட்சி நிறுவப்பட்டது.
- 1887 – விக்டோரியா தொழில்நுட்ப மையம் (1887–1997) நிறுவப்பட்டது.
- 1888 – பெருநகரமும்பை மாநகராட்சி நிறுவப்பட்டது.
- 1893 – இந்து-முஸ்லீம் கலவரங்கள் தொடங்கியது.
- 1896 –கொள்ளைநோய்க்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1897 – பார்ஸ்டெர் கிராம்டன் கிரீவ்ஸ் என்பவர் பெட்ரோலில் ஓடும் வாகனத்தை இந்தியத் துணை கண்டத்திற்கு அறிமுகப்படுத்தினார்.
- 1899 – மும்பையில் கொள்ளைநோய் பரவியது.[6]
20ஆம் நூற்றாண்டு
[தொகு]- 1900 – மேற்கு இரயில்வே சார்பில் மும்பையிலிருந்து பல திசைகளில் 45 இரயில்கள் இயக்கப்பட்டது.
- 1911 – இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் இராணி மேரி மும்பை நகரத்திற்கு இந்தியாவின் நுழைவாயில் வழியாக வருகை புரிந்தனர்.
- 1912 – மன்னர் ஜார்ஜ் ஆங்கிலப் பள்ளி தாதரில் நிறுவப்பட்டது.[7]
- 1913 – வணிகக் கல்விக்கான சிடென்கம் கல்லூரி நிறுவப்பட்டது.
- 12 சனவரி 1915 – மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு மும்பை வழியாக வந்தடைந்தார்.
- 22 சனவரி 1926 –சேட் கோர்தன்தாஸ் சுந்தர்தாஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மன்னர் எட்வர்டு நினைவு மருத்துவமனை துவக்கப்பட்டது.
- 15 சூலை 1926 – இந்தியாவில் முதல் மோட்டார் பேருந்துகள் மும்பையில் இயக்கப்பட்டது.
- 1928 – முதல் மின்சார இரயில் சர்ச்கேட்- போரிவலி வரை இயக்கப்பட்டது.
- 1930 – மும்பை கிரிக்கெட் சங்கம் தொடங்கப்பட்டது.
- 15 அக்டோபர் 1932 – ஜெ. ர. தா. டாட்டா, கராச்சியிலிருந்து அகமதாபாத் வழியாக மும்பை வரை விமானம் ஓட்டி வந்தார். இதுவே இந்தியாவில் விமானப் போக்குவரத்திற்கு வித்திட்டது.
- 1 அக்டோபர் 1933 – வேதியியல் தொழில் நுட்ப நிறுவனம் நிறுவப்பட்டது.[8]
- 1934 –காங்கிரசு சோசலிசக் கட்சி நிறுவப்பட்டது.[9]
- 1940 – நிலச் சீரமைப்பு செய்து நாரிமன் பாயிண்ட் பகுதி உருவாக்கப்பட்டது.
- 8 ஆகஸ்டு 1942 –மும்பையில் கூடிய காங்கிரசு மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் அறிவிக்கப்பட்டது..
- 14 ஏப்ரல் 1944 – மும்பை துறைமுகத்தில் வெடித்த குண்டுகளால் பலர் கொல்லப்பட்டனர்[10]
- 21 நவம்பர் 1955 - சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி & துப்பாக்கிச் சூட்டில் 105 பேர் கொல்லப்பட்டனர்.
- 1958 – இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை தொடங்கப்பட்டது.
- 1 மே 1960 – புதிய மகாராட்டிரம் மாநிலத்தின் தலைநகராக மும்பை அறிவிக்கப்பட்டது.
- 31 மார்ச் 1964 – போரி பந்தர் முதல் தாதர் வரை இயக்கப்பட்ட டிராம் சேவைகள் நிறுத்தப்பட்டது.
- சனவரி,1982 – தத்தா சமந்த் தலைமையில் பெரிய பாம்பே ஜவுளி வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
- டிசம்பர் 1992 – சனவரி 1993 –இந்து-முஸ்லீம்களிடையே ஏற்பட்ட மும்பை கலவரங்களில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- 1993 – 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
- 1995 – பம்பாயின் பெயர் மும்பை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
21ஆம் நூற்றாண்டு
[தொகு]- 2002 – பந்த்நகர்-காட்கோபர் அருகே பேருந்து குண்டு வெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்..[11]
- 2003
- 27 சனவரி –காட்கோபர் அருகே பேருந்து குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டர்..[12]
- 13 மார்ச் –மும்பை தொடருந்து குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.[13]
- 28 சூலை –காட்கோபர் பேருந்தில் குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர்.[14]
- 25 ஆகஸ்டு – இந்திய நுழைவாயில் மற்றும் சாவேரி பஜார் அருகே இரண்டு கார்களில் இருந்த குண்டுகள் வெடித்ததில் 54 பேர் கொல்லப்பட்டனர்.[15]
- 2006
- 11 சூலை – தொடர் வண்டியில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
- 2008 – 2008 மும்பாய் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர்.
- 2009 – பாந்த்ரா-வொர்லி இணைப்பு கடல் பாலம் துவக்கப்பட்டது.
- 2011 – மும்பை குண்டு வெடிப்புகளில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
- 2014
- செப்டம்பர் – சிவ சேனாவின் சினேகா அம்பேத்கார் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்..[16]
- 1 பிப்ரவரி – மும்பை மோனோரயில் சேவை துவக்கப்பட்டது.
- 8 சூலை – மும்பை மெட்ரோ சேவை துவக்கப்பட்டது.
- 2021
- 18 சூலை – மும்பை நிலச்சரிவினால் வீடுகள் இடிந்து 32 பேர் கொல்லப்பட்டனர்.
- 2023-24
- பாந்த்ரா-வொர்லி இணைப்பு கடல் பாலத்துடன் இணைப்பதற்கான கடற்கரை சாலைகள் நிறுவப்பட்டது.
- மும்பை-நவி மும்பையை இணைக்கும் 21.8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அடல் சேது கடல் பாலம் 12 சனவரி அன்று துவக்கப்பட்டது.[17][18]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Agri (caste)
- ↑ "Marriage Customs of Christian Son Kolis". Archived from the original on 2021-11-17.
- ↑ Schellinger and Salkin, ed. (1996). "mumbai". International Dictionary of Historic Places: Asia and Oceania. UK: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781884964046.
- ↑ HMS Minden (1810)
- ↑ Grant Medical College and Sir Jamshedjee Jeejeebhoy Group of Hospitals
- ↑ Bombay plague epidemic
- ↑ "I.E.S. Raja Shivaji Vidyalaya". www.iesrsv.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-12.
- ↑ Ṭikekara, Aruṇa (2006). The Cloister's Pale: A Biography of the University of Mumbai (in ஆங்கிலம்). Popular Prakashan. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7991-293-5. பார்க்கப்பட்ட நாள் 12 June 2020.
- ↑ James C. Docherty; Peter Lamb (2006). "Chronology". Historical Dictionary of Socialism (2nd ed.). Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-6477-1.
- ↑ 1944 Bombay explosion
- ↑ "Blast outside Ghatkopar station in Mumbai, 2 killed". rediff.com India Limited. 6 December 2002. http://www.rediff.com/news/2002/dec/02mum.htm. பார்த்த நாள்: 26 March 2012.
- ↑ Mumbai, Vijay Singh in. "Blast near Vile Parle station in Mumbai". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-15.
- ↑ Asthana, N. C.; Nirmal, A. (2009). Urban Terrorism : Myths And Realities. Pointer Publishers. p. 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171325986.
- ↑ Mumbai, Vijay Singh & Syed Firdaus Ashraf in. "Blast in Ghatkopar in Mumbai, 4 killed". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-13.
- ↑ "Death for three in 2003 Mumbai bomb blasts case". தி இந்து (Chennai, India). 7 August 2009 இம் மூலத்தில் இருந்து 9 August 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090809143518/http://www.hindu.com/2009/08/07/stories/2009080757860100.htm.
- ↑ Bhalerao, Sanjana (2014-09-09). "Shiv Sena's Snehal Ambekar elected Mumbai's new mayor". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 20 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141020052410/http://www.hindustantimes.com/india-news/mumbai/shiv-sena-s-snehal-ambekar-elected-mumbai-s-new-mayor/article1-1262009.aspx. பார்த்த நாள்: 18 June 2015.
- ↑ "Speed limit 100 km/hr, no bikes and autos: All about India's longest sea bridge". India Today (in ஆங்கிலம்). 2024-01-11. பார்க்கப்பட்ட நாள் 2024-08-15.
- ↑ "Atal Setu, India's longest bridge news: PM Modi to inaugurate Mumbai Trans Harbour Link today". www.livemint.com. 2024-01-12. பார்க்கப்பட்ட நாள் 2024-08-16.