மும்பையின் புவியியல்





மும்பையின் புவியியல் (Geopgraphy of Mumbai) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகராக உள்ள மும்பை மேற்கு இந்தியாவின் கொகண் மண்டலத்தில் அரபுக் கடலை ஒட்டி அமைந்த சால்சேட் தீவு உள்ளிட்ட ஏழு தீவுப் பகுதிகளில் அமைந்துள்ளது. பின்னர் மும்பை பெருநகரப் பகுதியாக விரிவாக்கம் பெற்றது. இதன் மக்கள் தொகை 20 மில்லியன் ஆகும். பெருநகர மும்பை அமைந்துள்ளது. மும்பைப் பகுதிகள் அரபுக் கடலை ஒட்டி மாகிம் விரிகுடா, தானே கடற்கழி, மாலாடு கடற்கழி, கொராய் கடற்கழி மற்றும் வசை கடற்கழிகள் கொண்டுள்ளது. மும்பையின் சால்சேட் தீவுப் பகுதிகளில் மித்தி ஆறு, ஒசிவரா ஆறு, பொய்சார் ஆறு மற்றும் உல்லாஸ் ஆறுகள் பாய்கிறது. மேலும் இப்பகுதியில் துளசி ஏரி, விகார் ஏரி மற்றும் பவய் ஏரிகள் உள்ளது. தெற்கு மும்பை பகுதியில் மலபார் மலை, எலிபண்டா குகைகள் மற்றும் கான்கேரி குகைகள் அமைந்துள்ளது. மும்பையின் வடக்கில் சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா உள்ளது.