மகாலக்ஷ்மி கோவில், கோலாப்பூர்
கோலாப்பூர் அம்பாபாய் கோயில் | |
---|---|
மகாராட்டிரத்தில் கோயிலின் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | மகாராட்டிரம் |
மாவட்டம்: | கோலாப்பூர் |
அமைவு: | பவானி மண்டபம், மகாத்வார் சாலை, கோலாப்பூர் |
ஆள்கூறுகள்: | 16°42′00″N 74°14′00″E / 16.70000°N 74.23333°E |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
அமைத்தவர்: | கர்ணதேவர், சாளுக்கிய ஆட்சி |
கோயில் அறக்கட்டளை: | பஷ்சிம் மஹராஷ்டிர தேவஸ்தான சமிதி |
இணையதளம்: | www |
ஸ்ரீ மகாலட்சுமி கோவில் (Mahalakshmi Temple, Kolhapur) இந்தியா, மகாராட்டிர மாநிலத்தில் நிலை கொண்ட கோலாப்பூர் என்ற இடத்தில் இந்து மத புராணங்களில் உரைத்துள்ள படி, இந்தியாவில் பற்பல இடங்களில் நிறுவியுள்ள சக்தி பீடங்களில் ஒன்றாகும்.[1][2][3]
இந்து புராணங்களில் எழுதிய படி, சக்தி பீடம் என்பது சக்திக்கே உறைவிடமாக திகழும் தேவியான அம்மன் சக்தியுடன் தொடர்புடையதாகும். கோலாப்பூர் சக்தி பீடம் ஆனது இந்துக்களுக்கு ஒரு மிகவும் சிறப்புபெற்ற ஆறு சக்தி பீடங்களில் ஒன்றாகும், இந்த இடத்தின் சிறப்பு இங்கே ஒருவன் வந்து தேவி அன்னையை வழிபடுவதால் அவன் அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் துறந்து இறைவனடி அடைந்து முக்தி பெறுவான் அல்லது அவனது அனைத்து விருப்பங்களையும் அன்னை நிறைவேற்றி வைப்பாள் என்று இந்துக்கள் நம்புவதேயாகும். இந்தக் கோவிலின் பெயர் திருமால் விஷ்ணுவின் மனைவியாக விளங்கும் மகாலக்ஷ்மியின் பெயரில் இருந்து வந்ததாகும், மேலும் இவ்விடத்தில் திருமால் அவருடைய தேவியுடன் வசிப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.
அமைப்பு
[தொகு]இந்த கோவில் கன்னடத்து சாளுக்கிய சாம்ராஜ்ஜிய மன்னர்கள் பொ.ஊ. 700 ஆண்டுகளில் ஆட்சிபுரிந்த பொழுது, முதல் முதலாக கட்டிய கோவில்களில் ஒன்றாகும். கருங்கல்லில் அமைந்த ஒரு அடித்தளத்தின் மீது நான்கு கரங்களுடன் கூடிய மகுடம் தரித்த தேவியின் உருவச்சிலை நிறுவப் பெற்றுள்ளது, மேலும் இந்தச்சிலை மணிக்கற்ககளால் வடிவமைத்ததாகும் மேலும் அதன் எடை சுமார் 40 கிலோகிராம் அளவாகும். மகாலக்ஷ்மியின் வடிவம் கறுப்புக் கல்லில் செதுக்கியதாகும் மேலும் அதன் உயரம் சுமார் மூன்று அடிகளாகும். இந்தக் கோவிலில் உள்ள ஒரு சுவரில் தேவியின் ஸ்ரீ யந்திரம் பொறித்துள்ளது. சிலையின் பின்னால் இறைவியின் வாகனம் ஆன ஒரு கல்லால் செதுக்கிய சிங்கத்தின் உருவச்சிலை நிலைகொண்டுள்ளது. மேலும் மகுடத்தில் இறைவன் விஷ்ணுவின் நாகப் பாம்பு — சேஷ நாகத்தின் உருவமும் செதுக்கப் பெற்றுள்ளது. தேவி மகாலக்ஷ்மியின் நான்கு கரங்களில் இந்துக்கள் புனிதமாகக் கருதும் பொருட்கள் இடம் பெறுகின்றன. கீழ் வலது கரத்தில் ஒரு கிச்சிலி பழத்தையும், வலது மேல் கரத்தில் ஒரு கௌமோதகி என்ற தண்டாயுதம் ஒன்றையும், அதன் தலை கீழே நிலத்தை தொட்டுள்ளபடி உள்ளது, இடது மேல் கரத்தில் ஒரு கேடகம் என்ற கவசத்தையும் மற்றும் கீழ் இடதுகரத்தில் ஒரு பானபாத்திரம் என்ற கிண்ணத்தையும் வைத்துக் காணப்படுகிறாள். இதர இந்து கோவில் சிலைகள் போல் அல்லாமல், அங்கெல்லாம் சிலைகள் வடக்கு அல்லது கிழக்கு முகமாக அமைந்திருக்கும், இங்கே இந்தக் கோவிலில் இந்த தேவியின் உருவச்சிலை மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மேற்கு சுவர்ப்பகுதியில் ஒரு திறந்த ஜன்னல் அமைந்துள்ளது, அதன் வழியாக கதிரவனின் ஒளிக்கீற்று வருடத்தில் இரு முறை தேவியின் பாதங்களை தொட்டு திருமுகத்தை பளிச்சிடும், தோராயமாக மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் 21 தேதி வாக்கில் மூன்று நாட்களுக்கு இவ்வாறு ஆண்டு தோறும் நடைபெறும்.
இந்தக் கோவிலின் வெளிப் பிராகாரத்தில் நவக்கிரகங்கள், சூரியன், மகிஷாசுர மர்த்தினி, விட்டல்-ரக்மாயி, சிவர், விஷ்ணு, துளஜா பவானி மற்றும் பல இதர தைவங்களை வழிபடுவதற்கான தளங்களும் அமைந்துள்ளன. இவற்றில் சில சிலை வடிவங்கள் பொ.ஊ. 11 ஆம் நூற்றாண்டை சார்ந்தவையாகும், மற்றும் சில சமீபத்தில் நிறுவியவை ஆகும். மேலும் இந்தக் கோவிலின் வளாகத்தில் மணிகர்ணிகா குண்டம் எனும் கோவில்-குளமும் உள்ளது, இந்தக் குளக்கரையில் விஷ்வேஷ்வர் மகாதேவருக்கான ஒரு கோவிலும் நிலை கொண்டுள்ளது.
கோவில் வழிபாட்டு முறை
[தொகு]ஒவ்வொரு நாளும் கோவிலில் ஐந்து விதமான சேவைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. முதல் சேவை விடியற்காலை 5 மணிக்கே தொடங்குவதாகும், அப்பொழுது ஒரு காக்கடா தீப்பந்தத்தை வைத்துக்கொண்டு, தெய்வீகப் பாடல்கள் பாடிக்கொண்டு, துயிலும் தேவியை எழுப்பும் சடங்காகும். இரண்டாவது சேவை, காலை 8 மணிக்கு, தேவிக்கு 16 மூலகங்கள் கொண்ட சோடோபசார பூஜைகள் செய்து வணங்குவதாகும்.
இதைத் தொடர்ந்து மதிய மற்றும் மாலை வேலை சேவைகள் நடைபெறும் மற்றும் இரவில் ஷேஜாரதி பூஜைகள் நடைபெறும்.
சிறப்பு நிகழ்ச்சிகள்
[தொகு]தேவியின் உற்சவச்சிலை கோவில் பிரகாரத்தை சுற்றி ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும், பௌர்ணமி நாட்கள் அன்றும், மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பெறும்.
உற்சவம்
[தொகு]மனித வாழ்க்கை ஒளியூட்டம் மற்றும் செழிப்பை நமக்கு வழங்கும் இறைவி மகாலக்ஷ்மியை சார்ந்து இருப்பதைப் போலவே, சூரியனின் கிரணங்களும் தேவி மகாலட்சுமிக்கு அஞ்சலி செலுத்துவதில் வியப்பேதுமில்லை. இருந்தாலும் அந்தக் காலத்தில் இந்த கோவிலை கட்டிய கட்டிடக் கலைஞர்கள் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் கோவிலை அமைத்துள்ளார்கள், சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் கொல்ஹாபூரில் அமைந்த மகாலக்ஷ்மியின் கோவிலில் அமைந்த ஒரு ஜன்னல் வழியாக தேவியின் பாதங்களை தொட்டு வணங்கி, பின்னர் மறைவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த சிறப்பு நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் 'கிரண் உற்சவம்' என்ற உற்சவ தினங்களில் கண்டு களிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் : 31 ஜனவரி, 1 பெப்ரவரி, 2 பெப்ரவரி, 9 நவம்பர், 10 நவம்பர், 11 நவம்பர் ஆகிய நாட்களில் மாலையில் இந்த விழா கொண்டாடுகிறார்கள்.
வருடத்தில் மூன்று நாட்கள் சூரியக் கடவுள் தேவி மகாலக்ஷ்மி அவர்களுக்கு மரியாதை வழங்குவதாக கூறப் படுகிறது. பொதுவாக இது ரத சப்தமி என்ற சடங்கை ஒட்டி வருவதாகும், இந்த பண்டிகை ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் வருகிறது. இது மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. முதல் நாளன்று, சூரியனின் கிரணங்கள் தேவியின் பாதத்திலும், இரண்டாம் நாளன்று தேவியின் இடைப் பாகத்திலும், மூன்றாம் நாள் தேவியின் முக மண்டலத்திலும் விழுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இது போன்று இந்தக் கோவிலை கட்டிய கட்டிடக் கலைஞர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இவ்வாறு உருவாக்கியுள்ளார்கள், இது மிகவும் பெருமை சேர்ப்பதாகும், மேலும் இன்றும் நாம் அந்த அற்புதத்தை கண்டு களிக்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stephen Knapp (1 January 2009). Spiritual India Handbook. Jaico Publishing House. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184950243.
- ↑ Amar Nath Khanna (2003). Pilgrim Shrines of India. Aryan Books International. p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173052385.
- ↑ "Rahasya Thrayam I- Pradhanika Rahasyam - Hindupedia, the Hindu Encyclopedia". www.hindupedia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-08.
பிறகு, பேஷாவர் வம்சத்து ஆட்சியாளர்கள், இந்தக் கோவிலை பழுது பார்த்து புதுப்பித்தார்கள். இந்தக் கோவிலை சுற்றி பல அழகான சிற்பங்கள் உள்ளன, ஆனால் இந்தியாவில் இதை சார்ந்த இடங்களை பல மன்னர்கள் போர் தொடுத்து சூறையாடியதால், சில சிற்பங்கள் அதனால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.