உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்னார்ட் கிலுக் தும்போக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்னார்ட் கிலுக் தும்போக்
Bernard Giluk Dompok
மலேசிய தோட்டத் தொழில் அமைச்சர்
பதவியில்
10 ஏப்ரல் 2009 – 15 மே 2013
பிரதமர்நஜீப் ரசாக்
தொகுதிபெனாம்பாங்
பிரதமர் துறை அமைச்சர்
பதவியில்
15 திசம்பர் 1999 – 9 ஏப்ரல் 2009
பிரதமர்மகாதீர் முகமது
அப்துல்லா அகமது படாவி
பெனாம்பாங் மக்களவைத் தொகுதி
பதவியில்
8 மார்ச் 2008 – 5 மே 2013
பெரும்பான்மை3,409 (1986)
9,078 (1990)
இரானாவ் மக்களவைத் தொகுதி
பதவியில்
2 ஆகஸ்டு 1986 – 24 ஏப்ரல் 1995
பெரும்பான்மை5,423 (1999)
1,387 (2004)
11-ஆவது சபா முதலமைச்சர்
பதவியில்
29 நவம்பர் 1999 – 8 மார்ச் 2004
பதவியில்
28 மே 1998 – 14 மார்ச் 1999
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Bernard Giluk Dompok

7 அக்டோபர் 1949 (1949-10-07) (அகவை 74)
பெனாம்பாங்,
பிரித்தானிய வடக்கு போர்னியோ
(தற்போது சபா), மலேசியா
அரசியல் கட்சிஐக்கிய சபா கட்சி (PBS)
சபா மக்களாட்சி கட்சி (PDS)
கடாசான் மூருட் அமைப்பு (UPKO)
துணைவர்(கள்)வாலரி பிஞ்சிவான்; டயானா அலிப்
பிள்ளைகள்5
முன்னாள் கல்லூரிகிழக்கு லண்டன் பல்கலைக்கழகம்
கையெழுத்து
இணையத்தளம்bernard-dompok.blogspot.com

பெர்னார்ட் கிலுக் தும்போக் (ஆங்கிலம்; Bernard Giluk Dompok; மலாய்: Tan Sri Datuk Seri Panglima Bernard Giluk Dompok) (பிறப்பு: 7 அக்டோபர் 1949) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். இவரின் பதவிகள்:

பொது

[தொகு]

பெர்னார்ட் கிலுக் தும்போக், சபாவின் பெனாம்பாங்கில் பிறந்தார். அவர் தன் தொடக்கக் கல்வியை பெனாம்பாங் செயின்ட் மைக்கேல் பள்ளி; மற்றும் கோத்தா கினபாலு தஞ்சோங் அரு லா சாலே மேல்நிலைப் பள்ளி; ஆகிய பள்ளிகளில் பெற்றார். பின்னர் அவர் 1978-இல், ஐக்கிய இராச்சியத்தின் வெசுட்காம் தொழில்நுட்ப நிறுவனத்தில் (இப்போது கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம்), இளங்கலை பட்டம் பெற்றார்.[3]

அவர் 1978-இல், சபா மாநில நிலங்கள் மற்றும் நில அளவைத் துறையில் மதிப்பீட்டாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் பொதுத் துறையை விட்டு வெளியேறி 1980 முதல் 1985 வரை சுமார் ஐந்து ஆண்டுகள் தனியார் மதிப்பீட்டாளராகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

ஆரம்பத்தில் ஐக்கிய சபா கட்சியின் (PBS) உறுப்பினராக இருந்த பெர்னார்ட் கிலுக் தும்போக், சபா மாநில சட்டமன்றத் தொகுதியான மோயோக் சட்டமன்றத் தொகுதி; மற்றும் பெனாம்பாங் மக்களவைத் தொகுதி ஆகிய இரண்டிலும்; 1986 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1986 மாநிலத் தேர்தலில் ஐக்கிய சபா கட்சி பெரும்பான்மையில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து பெர்னார்ட் கிலுக் தும்போக், சபா மாநிலத்தின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4]

1994-இல், சபா மக்களாட்சி கட்சி (PDS) என முன்பு அறியப்பட்ட கடாசான் மூருட் அமைப்பின் (UPKO} தலைவரானார். அதன் பின்னர், பெர்னார்ட் கிலுக் தும்போக் மற்றும் பலர் ஐக்கிய சபா கட்சியில் (PBS) இருந்து பிரிந்து பாரிசான் நேசனல் (BN) கூட்டணியில் சேர்ந்தனர். பாரிசான் நேசனல் கூட்டணிக்கு மாறிய பிறகு, 1995-ஆம் ஆண்டு மலேசியப் தேர்தலில் அவர் தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.[4]

சபா முதலமைச்சர் பதவி

[தொகு]

பெர்னார்ட் கிலுக் தும்போக், தன் மக்களவை உறுப்பினர் பதவியை இழந்த போதிலும், மாநிலச் சட்டமன்ற உறுப்பினராகவும், மாநில பாரிசான் நேசனல் அரசாங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் இருந்தார். 1998 முதல் 1999 வரை சுழற்சி அடிப்படையில், சபா முதலமைச்சர் பதவியை ஏற்கும் முன், சபா மாநில அரசாங்கத்தின் பல அமைச்சுகளில் பணியாற்றினார்.

1999-இல் அவர் கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதியில், ஐக்கிய சபா கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 2004-இல் மலேசிய அமைச்சரவையில் பிரதமர் துறை அமைச்சராக இணைந்து 2008-இல், மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சின் அமைச்சரானார்.

2013 மலேசியப் பொதுத் தேர்தலில், மக்கள் நீதிக் கட்சியின் (PKR) டேரல் லீக்கிங் (Darell Leiking) என்பவரிடம் தன் கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதியை இழந்தபோது, ​​அவரின் நாடாளுமன்ற வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது.[5]

பொதுத்தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசிய மக்களவை: P174 பெனாம்பாங் மக்களவைத் தொகுதி, சபா[6]
ஆண்டு அரசு வாக்குகள் % எதிரணி வாக்குகள் %
1986 பெர்னார்ட் கிலுக் தும்போக் (PBS) 6,659 52.32% மார்செல் லீக்கிங் (சுயேச்சை) 3,250 25.53%
1990 பெர்னார்ட் கிலுக் தும்போக் (PBS) 12,654 77.97% மார்செல் லீக்கிங் (DAP) 3,576 22.03%
1995 பிரான்சிஸ் நோட்டியன் (PBS) 14,652 53.02% பெர்னார்ட் கிலுக் தும்போக் (SDP) 12,982 46.98%
2008 பெர்னார்ட் கிலுக் தும்போக் (UPKO) 13,400 52.4% எட்வின் போசி(PKR) 10,337 40.5%
2013 பெர்னார்ட் கிலுக் தும்போக் (UPKO) 12,382 33.9% டோரல் லீக்கிங் (PKR) 22,598 61.8%

விருதுகள்

[தொகு]

மலேசிய விருதுகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Muguntan Vanar (27 October 2015). "Dompok selected as Malaysia's envoy to the Vatican". The Star. பார்க்கப்பட்ட நாள் 27 October 2015.
  2. Muguntan Vanar (17 March 2016). "Bernard Dompok receives appointment letter as ambassador to Vatican". The Star. பார்க்கப்பட்ட நாள் 18 March 2016.
  3. Muguntan Vanar (24 December 2015). "Ex-La Salle Tanjung Aru principal passes away". The Star. பார்க்கப்பட்ட நாள் 18 March 2016.
  4. 4.0 4.1 "Dompok confirms resigning as Upko president on March 21". The Sun. 5 March 2014. பார்க்கப்பட்ட நாள் 3 November 2014.
  5. Sandra Sokial (6 March 2014). "Dompok retires, passes baton to Tangau". The Borneo Post. பார்க்கப்பட்ட நாள் 3 November 2014.
  6. "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
  7. "Semakan Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat".

வெளி இணைப்புகள்

[தொகு]
தூதரகப்பதவிகள்
முன்னர்
பதவி உருவாக்கம்
திரு ஆட்சிப்பீடம்
2016–2018
பின்னர்
அரசியல் பதவிகள்
முன்னர் சபா முதலமைச்சர்
1998–1999
பின்னர்