உள்ளடக்கத்துக்குச் செல்

செவ்விரி இண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செவ்விரி இண்டன்
2023 இல் செஃப்ரி இன்டன்
பிறப்புசெஃப்ரி எவரெசுடு இன்டன்
6 திசம்பர் 1947 (1947-12-06) (அகவை 76)[1]
விம்பிள்டன், இலண்டன், இங்கிலாந்து
துறை
பணியிடங்கள்
கல்விகிளிஃப்டன் கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வேடுதளர்வும், பார்வையில் அதன் பங்கும் (1977)
ஆய்வு நெறியாளர்கிறித்தோபர் லோங்கெட்-இகின்சு
அறியப்படுவது
  • பின்நோக்குப் பரப்பின் பயன்பாடுகள்
  • போல்ட்சுமன் இயந்திரம்
  • ஆழமான கற்றல்
  • காப்சியூல் நரம்பு வலையமைப்புகள்
விருதுகள்
துணைவர்யோவான்
ரோசலின் சாலின் (இற. 1994)

சாக்கி போர்டு
(தி. 1997; இற. 2018)
துணைவர்ரோசுமேரி கார்ட்னர்
பிள்ளைகள்2
இணையதளம்
www.cs.toronto.edu/~hinton/ இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

செவ்விரி எவெரசுட்டு இண்டன் (Geoffrey Everest Hinton)[2] (பிறப்பு 6 திசம்பர் 1947) ஓர் பிரித்தானிய-கனடிய கணினி அறிவியலாளரும் அறியுணர்வு உளத்தியலாளரும் ஆவார். இவருடைய செயற்கை நரம்பிய வலைகளுக்கான ஆய்வுகளுக்காக அறியப்படுபவர். "செயற்கை நுண்ணறிவின் அறிவுத்தந்தை" ("Godfather of AI".) என்று போற்றப்படுபவர். இவர் சான் ஓப்பீலிடுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை வென்றுள்ளார்.[3]

2013 முதல் 2023 வரை இவர் கூகுள் நிறுவனத்திலும் (கூகுள் மூளை திட்டத்தில்) தொராண்டோ பல்கலைக்கழகத்திலும் தன் நேரத்தைப் பங்கிட்டு பணியாற்றினார். மே 2023 இல் கூகுள் பணியில் இருந்து வெளிப்பட்டார். குறிப்பாக செயற்கை நுன்ணறிவின் தீவாய்ப்புகளைக் குறிப்பிட்டு வெளியேறினார்.[4][5]

1986 இல் தாவீது உருமெலார்த்து, உரோனாலடு வில்லியம்சு ஆகியோருடன் இண்டன் எழுதிய கட்டுரை பல படல செயற்கை நரம்பிய பிணைப்பு வலைக்கான பின்செல்லும் படிமுறைத்தீர்வு ("backpropagation algorithm") பெரிதும் வரவேற்பைப்பெற்றது. ஆனாலும் இதுவே முதன் முன்வைப்பு அன்று.[6] ஆழக்கற்றல் என்னும் துறையில் இண்டன் முன்னணி ஆய்வாளராகக் கருதப்படுகின்றார். இண்டன் [7][8][9][10][11] தன்னுடைய மாணவர்களுடன் கூட்டாக பணி செய்ய உருவாக்கிய ஆலெக்கசு நெட்டு (AlexNet) என்பது கணினி அடையாளம் காணும் உருவ முயற்சியில் புதிய திருப்புமுனையாகக் கருதப்பட்டது.[12][13][14]

2018 இல் இண்டன் யோசுவா பெங்கியோ, யான் இலீக்கன் ஆகியோருடன் இணைந்து தூரிங்கு விருதைப் பெற்றார். கணினித்துறையில் நோபல் பரிசு போன்ற பெருமை கொண்டது இப்பரிசு.[15][16][17]

கல்வி

[தொகு]

இண்டன் பிரிசுடலில்[18] உள்ள கிளிப்டன் கல்லூரியிலும் கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியிலும் கல்வி பயின்றார். இயற்கை அறிவியல், கலை வரலாறு மற்றும் தத்துவம் போன்ற பல்வேறு பாடங்களுக்கு இடையே தனது பட்டத்தை மீண்டும் மீண்டும் மாற்றிய பிறகு, இறுதியில் 1970-இல் பரிசோதனை உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.[1] பின்னர் இண்டன் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார். இங்கு 1978-இல் கிறிசுடோபர் லாங்குட்-கிக்கின்சு மேற்பார்வையில் செயற்கை நுண்ணறிவில் முனைவர் பட்டம் பெற்றார்.[19][20]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Anon (2015) ,. Who's Who (online ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ed.). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc. எஆசு:10.1093/ww/9780199540884.013.20261
  2. Anon (1998). "Professor Geoffrey Hinton FRS". அரச கழகம். London. Archived from the original on 3 November 2015. One or more of the preceding sentences incorporates text from the royalsociety.org website where:

    "All text published under the heading 'Biography' on Fellow profile pages is available under Creative Commons Attribution 4.0 International License." --"Royal Society Terms, conditions and policies". Archived from the original on 11 November 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-03-09.

  3. Who is Geoffrey Hinton, Nobel Prize-winning scientist who quit Google, then let world know about dangers of AI?
  4. Douglas Heaven, Will (1 May 2023). "Deep learning pioneer Geoffrey Hinton quits Google". டெக்னாலச்சி ரிவ்யூ (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 1 May 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-05-01.
  5. Taylor, Josh; Hern, Alex (2 May 2023). "‘Godfather of AI’ Geoffrey Hinton quits Google and warns over dangers of misinformation". The Guardian. https://www.theguardian.com/technology/2023/may/02/geoffrey-hinton-godfather-of-ai-quits-google-warns-dangers-of-machine-learning. 
  6. Jürgen Schmidhuber (1 January 2015). "Deep learning in neural networks: An overview". Neural Networks 61: 85–117. doi:10.1016/j.neunet.2014.09.003. பப்மெட்:25462637. 
  7. Mannes, John (14 September 2017). "Geoffrey Hinton was briefly a Google intern in 2012 because of bureaucracy – TechCrunch". டெக்கிரஞ்சு (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 17 March 2020. பார்க்கப்பட்ட நாள் 28 March 2018.
  8. Somers, James (29 September 2017). "Progress in AI seems like it's accelerating, but here's why it could be plateauing" (in en-US). டெக்னாலச்சி ரிவ்யூ இம் மூலத்தில் இருந்து 20 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180520005817/https://www.technologyreview.com/s/608911/is-ai-riding-a-one-trick-pony/. 
  9. Sorensen, Chris (2 November 2017). "How U of T's 'godfather' of deep learning is reimagining AI". University of Toronto News (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 6 April 2019. பார்க்கப்பட்ட நாள் 28 March 2018.
  10. Sorensen, Chris (3 November 2017). "'Godfather' of deep learning is reimagining AI" (in en-US). Phys.org இம் மூலத்தில் இருந்து 13 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190413185347/https://phys.org/news/2017-11-godfather-deep-reimagining-ai.html. 
  11. Lee, Adrian (18 March 2016). "Geoffrey Hinton, the 'godfather' of deep learning, on AlphaGo" (in en-US). Maclean's இம் மூலத்தில் இருந்து 6 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200306045825/https://www.macleans.ca/society/science/the-meaning-of-alphago-the-ai-program-that-beat-a-go-champ/. 
  12. Gershgorn, Dave (18 June 2018). "The inside story of how AI got good enough to dominate Silicon Valley". Quartz (website) (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 12 December 2019. பார்க்கப்பட்ட நாள் 5 October 2018.
  13. (3 December 2012)F. Pereira "ImageNet classification with deep convolutional neural networks". {{{booktitle}}}, 1097–1105, Curran Associates.
  14. Allen, Kate (17 April 2015). "How a Toronto professor's research revolutionized artificial intelligence" (in en). Toronto Star இம் மூலத்தில் இருந்து 17 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150417192718/http://www.thestar.com/news/world/2015/04/17/how-a-toronto-professors-research-revolutionized-artificial-intelligence.html. 
  15. Chung, Emily (27 March 2019). "Canadian researchers who taught AI to learn like humans win $1M award". கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இம் மூலத்தில் இருந்து 26 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200226061533/https://www.cbc.ca/news/technology/turing-award-ai-deep-learning-1.5070415. 
  16. Ranosa, Ted (29 March 2019). "Godfathers Of AI Win This Year's Turing Award And $1 Million". Tech Times (in ஆங்கிலம்). Archived from the original on 30 March 2019. பார்க்கப்பட்ட நாள் 5 November 2020.
  17. Shead, Sam (27 March 2019). "The 3 'Godfathers' Of AI Have Won The Prestigious $1M Turing Prize". போர்ப்ஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 14 April 2020. பார்க்கப்பட்ட நாள் 5 November 2020.
  18. Onstad, Katrina (2018-01-29). "Mr. Robot". Toronto Life (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-24.
  19. கணித மரபியல் திட்டத்தில் செவ்விரி இண்டன்
  20. Hinton, Geoffrey Everest (1977). Relaxation and its role in vision. Edinburgh Research Archive (PhD thesis). University of Edinburgh. hdl:1842/8121. இணையக் கணினி நூலக மைய எண் 18656113. Archived from the original on 30 March 2023. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்விரி_இண்டன்&oldid=4112134" இலிருந்து மீள்விக்கப்பட்டது