உள்ளடக்கத்துக்குச் செல்

தாரோன் அசெமோகுலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரோன் அசெமோகுலு
2016 இல் அசெமோகுலு
பிறப்புசெப்டம்பர் 3, 1967 (1967-09-03) (அகவை 57)
இசுதான்புல், துருக்கி
நிறுவனம்இலண்டன் பொருளியல் பள்ளி (1989–1993)
துறைஅரசியல் பொருளாதாரம்
பொருளாதார வளர்ச்சி
வளர்ச்சிப் பொருளாதாரம்
உழைப்பு (பொருளியல்)
கல்விமரபுபுதிய நிறுவன பொருளாதாரம்
தாக்கம்ஜோயல் மோகிர்
கென்னத் சோகோலோஃப்
டக்ளஸ் நார்த்
சீமோர் மார்ட்டின்
லிப்ஸெட்
பாரிங்டன் மூர்
விருதுகள்பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2024)
ஆய்வுக் கட்டுரைகள்

கமெர் தாரோன் அசெமோகுலு (Kamer Daron Acemoglu) (பிறப்பு: செப்டம்பர் 3,1967) ஒரு துருக்கிய- அமெரிக்க பொருளாதார நிபுணர் ஆவார். இவர் 1993 முதல் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் கற்பித்து வருகிறார். இங்கு இவர் தற்போது எலிசபெத் மற்றும் ஜேம்சு கில்லியன் பொருளாதார பேராசிரியராக உள்ளார். மேலும் 2019-இல் இங்கு நிறுவன பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[1] இவர் 2005-இல் ஜான் பேட்சு கிளார்க் பதக்கத்தையும், சைமன் ஜான்சன் மற்றும் ஜேம்சு ஏ. இராபின்சன் ஆகியோருடன் சேர்ந்து 2024-இல் பொருளியலுக்கான நோபல் பரிசையும் பெற்றார்.[1][2]

இளமை

[தொகு]

இசுதான்புல்லில் துருக்கிய ஆர்மீனிய பெற்றோருக்கு மகனாக் பிறந்த அசெமோகுலு, 1989 -இல் யார்க் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், 1992இல் இலண்டன் பொருளியல் பள்ளியில் முனைவர் பட்டமும் பெற்றார். மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் சேருவதற்கு முன்பு ஒரு வருடம் இலண்டன் பொருளியல் பள்ளியில் கற்பித்தார். 2005ஆம் ஆண்டில் இவருக்கு ஜான் பேட் சு கிளார்க் பதக்கம் வழங்கப்பட்டது.

தொழில் வாழ்க்கை

[தொகு]

அசெமோகுலு அரசியல் பொருளாதாரம் குறித்த தனது பணிக்காக மிகவும் பிரபலமானவர். இவர் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். இவற்றில் பல நீண்டகால ஒத்துழைப்பாளர்களான சைமன் ஜான்சன் மற்றும் ஜேம்சு ஏ. இராபின்சன் ஆகியோருடன் இணைந்து எழுதப்பட்டுள்ளன. இராபின்சனுடன் இணைந்து, எகனாமிக் ஆரிஜின்ஸ் ஆப் டிக்டேட்டர்ஷிப் அண்ட் டெமாக்ரசி (2006) மற்றும் ஒய் நேஷன்ஸ் பெயில் (2012) ஆகிய இரு புத்தகங்களை எழுதினார். பிந்தைய புத்தகம் நாடுகளின் பொருளாதார விளைவுகளை வடிவமைப்பதில் நிறுவனங்கள் வகிக்கும் பங்கு குறித்த செல்வாக்குமிக்க புத்தகமாகும். இது பரந்த அறிஞர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. ஒரு மையவாதியாக விவரிக்கப்படும் இவர், ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை பொருளாதாரத்தை நம்புகிறார். அரசியல் பிரச்சினைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் பல்வேறு குறிப்பிட்ட கொள்கைகள் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

அமெரிக்க பொருளாதார வல்லுநர்களிடையே 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், "60 வயதிற்குட்பட்ட விருப்பமான வாழும் பொருளாதார வல்லுநர்கள்" பட்டியலில் பால் கிரக்மேன் மற்றும் கிரெக் மான்கிவ் ஆகியோருக்கு அடுத்தபடியாக அசெமோகுலு மூன்றாவது இடத்தில் உள்ளார். 2015ஆம் ஆண்டில், பொருளாதாரத்தில் ஆராய்ச்சி ஆவணத் தரவுகளின்படி கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட பொருளாதார நிபுணராக இவர் இருக்கிறார். திறந்தவெளி பாடத்திட்டத் திட்டத்தின் படி, மான்கிவ் மற்றும் கிரக்மேனுக்குப் பிறகு பொருளாதாரப் படிப்புகளுக்கான கல்லூரி பாடத்திட்டங்களில் அதிகம் குறிப்பிடப்படும் எழுத்தாளர் அசெமோக்லு ஆவார்.[3]

பொருளாதாரப் பணிகள்

[தொகு]
2009 இல் அசெமோக்லு

அசெமோகுலு நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது ஆராய்ச்சியில் அரசியல் பொருளாதாரம், மனித மூலதனக் கோட்பாடு, வளர்ச்சிக் கோட்பாடும், பொருளாதார வளர்ச்சி, புதுமை, உழைப்புப் பொருளாதாரம், வருமானம் மற்றும் ஊதிய சமத்துவமின்மை, மற்றும் வலைப்பின்னல் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் அடங்கும்.[4][5] கடந்த 15 ஆண்டுகளில் இவர் மேற்கொண்ட பெரும்பாலான ஆராய்ச்சிகள் அரசியல் பொருளாதாரம் என்று பரவலாக அழைக்கப்படுவதைப் பற்றியவை என்று 2011இல் இவர் குறிப்பிட்டார். தொழிலாளர் பொருளாதாரத் துறையிலும் இவர் பங்களித்துள்ளார்.

ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள்

[தொகு]

அசெமோகுலு, புதிய நிறுவனப் பொருளாதாரத்தைப் பின்பற்றுபவராக கருதப்படுகிறார்.[6][7][8] ஜோயல் மோகிர், கென்னத் சோகோலோஃப், டக்ளஸ் நார்த், சீமோர் மார்ட்டின் லிப்ஸெட், மற்றும் பாரிங்டன் மூர் ஆகியோரின் கருத்துகளால் இவர் ஈர்க்கப்பட்டார்.[9]

குறிப்பிடத்தக்க நூற்பட்டியல்

[தொகு]
  • Acemoglu, Daron; Robinson, James A. (2006). Economic Origins of Dictatorship and Democracy. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521855266.
  • Acemoglu, Daron (2008). Introduction to Modern Economic Growth. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400835775.
  • Acemoglu, Daron; Robinson, James A. (2012). Why Nations Fail. Crown Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0307719218. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
  • Acemoglu, Daron; Laibson, David and List, John (2014). Principles of Economics, Pearson, New York.
  • Acemoglu, Daron; Robinson, James A. (2019). The Narrow Corridor: States, Societies, and the Fate of Liberty. Penguin Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0735224384. Description, arrow-searchable preview, & reviewers' comments (at bottom).
  • Acemoglu, Daron, and Simon Johnson (2023). Power and Progress: Our Thousand-Year Struggle Over Technology and Prosperity. New York: PublicAffairs.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Daron Acemoğlu CV August 2022" (PDF). economics.mit.edu.
  2. "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2024". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-14.
  3. "192,209 Authors". opensyllabus.org. Open Syllabus. Archived from the original on 21 September 2022.
  4. Shimer 2007, ப. 199–200.
  5. "Daron Acemoglu". cifar.ca. Canadian Institute for Advanced Research.
  6. Dzionek-Kozłowska, Joanna; Matera, Rafał (October 2015). "New Institutional Economics' Perspective on Wealth and Poverty of Nations. Concise Review and General Remarks on Acemoglu and James A. Robinson's Concept". Annals of the Alexandru Ioan Cuza University – Economics 62 (1): 11–18. doi:10.1515/aicue-2015-0032. 
  7. Keefer, Philip; Knack, Stephen (2005). "Social capital, social norms and the New Institutional Economics". Handbook of New Institutional Economics. pp. 700–725.
  8. "Introductory Reading List: New Institutional Economics". coase.org. Ronald Coase Institute. Archived from the original on 25 December 2019. பார்க்கப்பட்ட நாள் 11 January 2020.
  9. Wilkinson, Will (10 May 2016). "The Great Enrochment and Social Justice". Niskanen Center. Douglass North and his followers, such as Daron Acemoglu and James Robinson...

கூடுதல் ஆதாரங்கள்

[தொகு]
  • Robert Shimer (2007). "Daron Acemoglu: 2005 John Bates Clark Medalist". Journal of Economic Perspectives 21 (1): 191–208. doi:10.1257/jep.21.1.191. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரோன்_அசெமோகுலு&oldid=4119359" இலிருந்து மீள்விக்கப்பட்டது