கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு சமூகத்தில் அதன் வெவ்வேறு குழுக்களுக்கிடையே அல்லது தனிநபர்களுக்கிடையே இருக்கக் கூடிய பொருளாதார நிலையின் சமனற்ற தன்மையைக் குறிக்கின்றது. பொருளாதார நிலையை வருமானத்தையும்நிலையான சொத்துக்களையும் கொண்டு வரையறை செய்யலாம். ஒரு ஆரோக்கியமான சமூகத்துக்கு அதன் அடிப்படை வாழ்க்கைத் தரம் சிறப்பாகவும், ஏற்றத்தாழ்வு குறைவாகவும் இருத்தல் நலம்.