உள்ளடக்கத்துக்குச் செல்

நிகான் கிதான்கியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணு-, ஐதரசன்-குண்டுகளால் பாதிக்கப்பட்டோர் அமைப்புகளின் சப்பானியக் கூட்டமைப்பு
உருவாக்கம்ஆகத்து 10, 1956; 68 ஆண்டுகள் முன்னர் (1956-08-10)
நோக்கம்அணுவாயுதங்களை ஒழித்தல்
தலைமையகம்மினாட்டோ, தோக்கியோ
சேவைப் பகுதி
சப்பான்
முறைஅரசியல் ஆதரவு நாடுதல்
நிர்வாக இயக்குநர்
சூயிச்சி கீடோ
வலைத்தளம்www.ne.jp/asahi/hidankyo/nihon/

நிகான் கிதான்கியோ (Nihon Hidankyo) எனும் சப்பான் அணு, ஐதரசன் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டமைப்பு (Japan Confederation of A- and H-Bomb Sufferers Organizations) என்பது 1956ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு குழுவாகும். இது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவை மேம்படுத்தவும், அணு ஆயுதங்களை ஒழிக்கவும் அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து அணு ஆயுதங்களை ஒழிக்கும் குறிக்கோள்களுடன், சப்பான் அரசினை வலியுறுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.[1]

ஆயிரக்கணக்கான சாட்சிகளின் அடிப்படையில், தீர்மானங்கள் மற்றும் பொது முறையீடு மூலம் உலகளாவிய அணு ஆயுதக் குறைப்புக்காக வாதிட ஐக்கிய நாடுகள் உட்படப் பல்வேறு பன்னாட்டு அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் பிரதிநிதிகளை அனுப்புதல் இந்த அமைப்பின் செயல்பாடுகளில் அடங்கும்.[2]

அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான தன் முயற்சிகளுக்காகவும், அணு ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்று சாட்சியம் மூலம் நிரூபித்ததற்காகவும் இந்த அமைப்புக்கு 2024 அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[3][4]

கண்ணோட்டம்

[தொகு]

நிகோன் கிதான்கியோ என்பது இரோசிமாவிலும் நாகாசாக்கியிலும் அணுக்குண்டு வீச்சிலிருந்து ஒவ்வொரு மாகாணத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் தப்பிப்பிழைத்த குழுக்களால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு தழுவிய அமைப்பாகும்.[5] 1954ஆம் ஆண்டில் அமெரிக்காவால் பிகினி அடோலில் நடத்தப்பட்ட வெப்ப அணு ஆயுதச் சோதனையாகக் காசில் பிராவோவின் வீழ்ச்சி, அண்டை அடோல்களில் வசிப்பவர்களுக்கும் சப்பானிய மீன்பிடிக் கப்பலான டைகோ புகுரியு மாரு 23 குழு உறுப்பினர்களுக்கும் கடுமையான கதிர்வீச்சு நோய்க்குறியை ஏற்படுத்தியது. இது அடுத்த ஆண்டு இரோசிமாவில் அணு, ஐதரசன் குண்டுகளுக்கு எதிரான சப்பான் குழு உருவாக்க வழிவகுத்தது.[6] இந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்டும், ஆதரிக்கப்பட்டும், அணுக்குண்டு பாதிப்பிலிருந்து தப்பியவர்கள் 1956 ஆகத்து 10 அன்று நாகாசாகியில் நடந்த சபையின் இரண்டாவது வருடாந்திர மாநாட்டில் நிகோன் கிடான்கியோவை நிறுவினர்.[7] இருப்பினும், இந்த அமைப்பு அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டபோது இந்த இயக்கத்தின் ஒற்றுமை பாதிக்கப்பட்டது.[8] 1961-இல் சோவியத் ஒன்றியம் அணு ஆயுதச் சோதனைகளை மீண்டும் தொடங்கியபோது, இந்த அமைப்பின் பொதுவுடமை பிரிவு இவற்றைக் கண்டிக்க மறுத்தது. இது அமைப்புக்குள் கடுமையான பதற்றத்திற்கு வழிவகுத்தது.[9] பழமைவாத தாராளவாத ஜனநாயகவாதிகளின் ஆதரவுடன், தீவிரமான பொதுவுடைமை எதிர்ப்பு ஜனநாயக சோசலிஸ்ட் கட்சித் தலைவரான மசடோசி மாட்சுசிட்டா தலைமையிலான ஒரு புதிய அமைப்பினை நிறுவ வழிவகுத்தது.[10] அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்களுக்குள் ஏற்பட்ட இந்த உள் பதற்றங்கள், இரோசிமா போன்ற சில மாகாண கிடான்கியோசு உள்ளூர் மட்டத்திலும் பிளவுபடக் காரணமாக அமைந்தது. இங்கு சமதர்ம கட்சி ஆதரவு மற்றும் பொதுவுடைமை கட்சி ஆதரவு கிடான்கியசு இருவரும் ஒரே பெயரில் செயல்பட்டன.[5] தேசிய மயமாக்கப்பட்ட இந்த அமைப்பு எவ்வித அரசியல் சார்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடாது என 1965ஆம் ஆண்டில் முடிவெடுத்தப் போதிலும், பின்னர் அரசியல் சார்புடன் செயல்பட ஆரம்பித்தது.[5]

அக்டோபர் 2024 நிலவரப்படி, நிகோன் கிதான்கியோவின் செயல்பாடுகள் பின்வருமாறு:[11]

  • அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான வாதம் மற்றும் அரசுகளிடம் இழப்பீடுகளுக்கான கோரிக்கைகள்
  • சப்பானிய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அரசாங்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மனு
  • அணு ஆயுதங்களை அகற்றுதல், அணு ஆயுதங்களை அகற்றும் பன்னாட்டு ஒப்பந்தம் ஏற்படுத்துதல், பன்னாட்டு மாநாடுகளை நடத்துதல், அணுசக்தி அல்லாத சட்டங்களை இயற்றுதல் மற்றும் கிபகுசா ஆதரவு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்
  • உள்நாட்டிலும் பன்னாட்டு அளவிலும் அணுக்குண்டு வெடிப்புகளின் யதார்த்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  • அணுக்குண்டு சேதம் குறித்த ஆராய்ச்சி, ஆய்வு, வெளியீடு, கண்காட்சிகள் மற்றும் கூட்டங்கள் நடத்துதல்
  • கிபகுசாவுக்கான ஆலோசனை மற்றும் ஆதரவு நடவடிக்கைகள்

விருதுகள்

[தொகு]

அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு முன்பு, நிகோன் கிதான்கியோ 1985,1994 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தைத் தளமாகக் கொண்ட பன்னாட்டு அமைதி பணியகத்தால் பரிந்துரைக்கப்பட்டது.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Welcome to HIDANKYO". Japan Confederation of A- and H-Bomb Sufferers Organization (Nihon Hidankyo) website. பார்க்கப்பட்ட நாள் 2007-08-31.
  2. Royen, Ulrika (2024-10-11). "Press release". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
  3. Royen, Ulrika (2024-10-11). "Press release". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
  4. "Nobel Peace Prize awarded to the Japanese organisation Nihon Hidankyo of survivors of the World War II atomic bombings". telegraphindia.
  5. 5.0 5.1 5.2 "被団協機能不全に 「はっちゃん」の努力 原爆を背負って(42)". 西日本新聞me (in ஜப்பானியம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
  6. "ヒロシマの記録1955 9月". 中国新聞ヒロシマ平和メディアセンター (in ஜப்பானியம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
  7. "日本被団協". www.ne.jp. பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
  8. "ヒロシマの記録1959 3月". 中国新聞ヒロシマ平和メディアセンター (in ஜப்பானியம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
  9. "ヒロシマの記録1961 9月". 中国新聞ヒロシマ平和メディアセンター (in ஜப்பானியம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
  10. "ヒロシマの記録1961 11月". 中国新聞ヒロシマ平和メディアセンター (in ஜப்பானியம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
  11. "日本被団協". www.ne.jp. பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
  12. Seán MacBride Peace Prize - IPB
  13. Press release - Nobel Peace Prize 2024
  14. Atomic bomb survivors nominated for Nobel prize | The Japan Times. They were awarded the Nobel Peace Price in 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகான்_கிதான்கியோ&oldid=4113133" இலிருந்து மீள்விக்கப்பட்டது