ஏர்ணஸ்ட் ருஸ்கா
ஏர்ணசுட் ருசுகா | |
---|---|
பிறப்பு | Ernst August Friedrich Ruska 25 திசம்பர் 1906 ஐடல்பெர்க், செருமனி |
இறப்பு | 27 மே 1988 மேற்கு பெர்லின், செருமனி | (அகவை 81)
தேசியம் | செருமனி |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | Fritz Haber Institute பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | மேகுசு நால் |
அறியப்படுவது | இலத்திரன் நுண்நோக்கி |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1986) |
ஏர்ணசுட் ஆகத்து பிரீட்ரிச் ருசுகா (Ernst August Friedrich Ruska) (திசம்பர் 25, 1906–மே 25, 1988), ஒரு செருமானிய இயற்பியலாளர். இவர் ஐய்டில்பர்க்கில் (Heidelberg) பிறந்தார். 1925 தொடக்கம் 1927 வரை மியூனிக் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும், பின்னர் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும் கல்வி கற்றார். ஒளியைப் பயன்படுத்தும் நுண்நோக்கியைக் காட்டிலும் ஒளியிலும் அலைநீளம் குறைந்த இலத்திரன்களைப் பயன்படுத்துவதன்மூலம் கூடிய உருப்பெருக்கத்தைப் பெறமுடியும் என உணர்ந்தார். 1931 இல் இலத்திரன் வில்லை ஒன்றை உருவாக்கிய இவர், தொடர்ந்து இவ்வாறான பல வில்லைகளை உருவாக்கினார். 1933 இல், இலத்திரன் நுண்நோக்கியை உருவாக்கினார்.
1937க்கும், 1955க்கும் இடையில் Siemens-Reiniger-Werke AG என்னும் நிறுவனத்தில் ஆய்வுப் பொறியியலாளராகப் பணியாற்றிய இவர் 1955 தொடக்கம், 1972 வரை பிரிட்சு ஆர்பெர் நிறுவனத்தின் (Fritz Harber Institute) இலத்திரன் நுண்நோக்கியல் நிறுவனத்தில் (Institute for Electron Microscopy) இயக்குனராகப் பணி புரிந்தார். அதே சமயத்தில் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும் ஓய்வு பெறும்வரை பேராசிரியராகக் கடமையாற்றினார். 1986 இல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. 1988 ஆம் ஆண்டு இவர் மேற்கு செருமனியில் காலமானார்.