ஓவன் சேம்பர்லேன்
ஓவன் சேம்பர்லேன் Owen Chamberlain | |
---|---|
![]() | |
பிறப்பு | சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா | சூலை 10, 1920
இறப்பு | பெப்ரவரி 28, 2006 பெர்க்கிலி, கலிபோர்னியா | (அகவை 85)
தேசியம் | ஐக்கிய அமெரிக்கர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | லாசு அலாமொசு தேசிய ஆய்வுகூடம் |
கல்வி கற்ற இடங்கள் | டார்ட்மவுத் கல்லூரி கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) சிக்காகோ பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | என்ரிக்கோ பெர்மி |
முனைவர் பட்ட மாணவர்கள் | ஜான் கூத் |
அறியப்படுவது | துகள் இயற்பியல் |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு, 1959 |
ஓவன் சேம்பர்லேன் (Owen Chamberlain, சூலை 10, 1920 – பெப்ரவரி 28, 2006) அமெரிக்க இயற்பியலறிஞர் ஆவார். அணுவடி இதிர்த்துகள்களில் ஒன்றான எதிர் புரோத்தனைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும் எமீலியோ சேக்ரே என்பவருக்கும் 1959 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சான் பிரான்சிஸ்கோவில் பிறந்த ஓவன் சேம்பர்லேன், டார்ட்மவுத் கல்லூரியில் இயற்பியல் படித்தார். பின்னர் பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்தார். இரண்டாம் உலகப் போர் தொடக்கத்தில் 1942 இல் மன்காட்டன் திட்டத்தில் இணைந்தார்.[2] போருக்குப் பின்னர், 1946 இல் பிரபல இயற்பியலாளர் என்ரிக்கோ பெர்மியின் கீழ் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் படித்து,[3] 1949 இல் கோட்பாட்டு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
1985 இல் சேம்பர்லேன் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு, 1989 இல் இளைப்பாறினார். 2006 பெப்ரவரி 28 இல், பெர்க்கிலியில் தனது 85-வது அகவையில் காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jaros, John; Nagamiya, Shoji; Steiner, Herbert (August 2006). "Obituary: Owen Chamberlain". Physics Today 59 (8): 70–72. doi:10.1063/1.2349741. Bibcode: 2006PhT....59h..70J. http://scitation.aip.org/content/aip/magazine/physicstoday/article/59/8/10.1063/1.2349741.
- ↑ Sanders, Robert. Owen Chamberlain, Physics Nobelist, UC Berkeley professor, LBNL researcher and co-discoverer of the anti-proton, has died at 85. www.berkeley.edu (2006 March 1)
- ↑ Yarris, Lynn. Berkeley Scientific Great Owen Chamberlain Has Died பரணிடப்பட்டது 2022-02-17 at the வந்தவழி இயந்திரம். www.lbl.gov (2006 March 1)
வெளி இணைப்புகள்
[தொகு]- Biography and Bibliographic Resources, from the Office of Scientific and Technical Information, United States Department of Energy
- Owen Chamberlain
- The Nobel Prize in Physics 1959 பரணிடப்பட்டது 2004-07-12 at the வந்தவழி இயந்திரம்
- Short Bio at Berkeley பரணிடப்பட்டது 2004-12-21 at the வந்தவழி இயந்திரம்
- Guide to the Owen Chamberlain Papers at The Bancroft Library
- New York Times obituary
- National Academy of Sciences Biographical Memoir