மாரி ஜெல் மேன்
மாரி ஜெல் மேன் ( Murray Gell-Mann (/ˈmʌri ˈɡɛl ˈmæn/; செப்டம்பர் 15, 1929 - மே 24, 2019) ஓர் அமெரிக்க இயற்பியலறிஞர் ஆவார். இவர் துகள் இயற்பியலின் கோட்பாடு குறித்த தனது பணிக்காக 1969 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார் . இவர் கலிபோர்னியா தொழில் நுட்பக் கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகனின் பேராசிரியராக இருந்தார். சாண்டா ஃபே நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவராகவும் , நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகவும்,தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் மருத்துவத்தின் பேராசிரியராகவும் பணியாற்றினார். [1]
ஜெல்-மான் சுவிட்சர்லாந்தில் ஒரு அணு ஆராய்ச்சி நிலையமான ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் பல காலங்கள் இருந்தார். 1972 ஆம் ஆண்டில் ஜான் சைமன் குகன்ஹெய்ம் நினைவு அறக்கட்டளை உறுப்பினராக இருந்தார். [2] [3]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]ஜெல் மேன் லோயர் மன்ஹாட்டனில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார்.ஆஸ்திரிய-அங்கேரியன் பேரரசில் இருந்து குடியேறிவர்கள் ஆவர். [4] [5] இவரது பெற்றோர் பவுலின் (நீ ரீச்ஸ்டீன்) மற்றும் ஆர்தர் இசிடோர் கெல்-மான் ஆகியோர் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக (இஎஸ்எல்) கற்பித்தனர். [6]
சிறுவயது முதலே கணிதத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர் 14 வயதில் கொலம்பியா கிறாமர் மற்றும் பிரிபரேட்டரி ஸ்கூலில் இருந்து நிறைவுறையாளார் பட்டம் பெற்றார், அங்கு யேல் கல்லூரியில் சேர்ந்தார். [7] யேலில், இவர் வில்லியம் லோவெல் புட்னம் கணித போட்டியில் பங்கேற்றார் மற்றும் 1947 இல் இரண்டாவது பரிசை வென்ற யேல் பல்கலைக்கழகத்தை ( முர்ரே ஜெர்ஸ்டன்ஹேபர் மற்றும் ஹென்றி ஓ. பொல்லக் ஆகியோருடன் ) பிரதிநிதித்துவப்படுத்தும் அணியில் இவர் இடம் பெற்றார். [8] ஜெல்-மேன் 1948 இல் யேல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலை பட்டமும், 1951 இல் மாசசூசெட்ஸ் தொழில் நுட்பக் கழகத்தில்) இயற்பியலில் முனைவட் பட்டமும் பெற்றார். எம்ஐடியில் இவரது மேற்பார்வையாளர் விக்டர் வெயிஸ்கோப் ஆவார் .
பணி
[தொகு]இவர் கலிபோர்னியா தொழில் நுட்பக் கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகனின் பேராசிரியராக இருந்தார். சாண்டா ஃபே நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவராகவும் , நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகவும்,தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் மருத்துவத்தின் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
தொழில்
[தொகு]ஜெல்-மேன் மற்றும் 1952 முதல் 1953 வரை அர்பானா-சாம்பேனில் உள்ள இலினொய் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக இருந்தார். [9] இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராகவும், கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்திற்குச் செல்வதற்கு முன்பு 1954-1955 இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகவும் இருந்தார், அங்கு இவர் 1955 முதல் 1993 இல் ஓய்வு பெறும் வரை அந்தக் கல்லூரியில் கற்பித்தல் பணியினை மேற்கொண்டார். [10]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ஜெல்-மேன் ஜெ.மார்கரெட் டோவ் எனவரை 1955 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். மார்கரெட் 1981 ஆம் ஆண்டில் இறந்தார், 1992 இல் இவர் மார்சியா சவுத்விக் என்பவரை இரண்டாவது திருமணம் மணந்தார், இந்தத் தம்பதிக்கு ஒரு வளர்ப்பு மகன் இருந்தார்.
விருதுகள் மற்றும் கவுரவங்கள்
[தொகு]இவர் துகள் இயற்பியலின் கோட்பாடு குறித்த தனது பணிக்காக 1969 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்
சான்றுகள்
[தொகு]- ↑ "Nobel Prize Winner Appointed Presidential Professor at USC". Archived from the original on September 19, 2010.
- ↑ Gell-Mann, M. (1972). "Quarks". CERN-affiliated article by Gell-Mann. Springer. pp. 733–761. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-7091-4034-5_20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7091-4036-9.
- ↑ Scientific publications of M. Gell-Mann on INSPIRE-HEP
- ↑ M. Gell-Mann (October 1997). "My Father". Web of Stories. பார்க்கப்பட்ட நாள் October 1, 2010.
- ↑ J. Brockman (2003). "The Making of a Physicist: A talk with Murray Gell-Mann". Edge Foundation, Inc. பார்க்கப்பட்ட நாள் October 1, 2010.
- ↑ Profile, NNDB; accessed April 26, 2015.
- ↑ "Notable Alumni". Jonathan Edwards College. பார்க்கப்பட்ட நாள் 27 May 2019.
- ↑ The William Lowell Putnam Mathematical Competition.
- ↑ in 1954, there, with Francis E. Low, he discovered the renormalization group equation of QED.
- ↑ "Interview with Murray Gell-Mann [Oral History]". Caltech Institute Archives. பார்க்கப்பட்ட நாள் May 25, 2019.