வைகுண்ட பெருமாள் கோயில், உத்திரமேரூர்
வைகுந்தப் பெருமாள் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | காஞ்சிபுரம் மாவட்டம் |
அமைவு: | உத்திரமேரூர் |
ஆள்கூறுகள்: | 12°52′49″N 79°42′45″E / 12.88028°N 79.71250°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தென்னிந்திய கட்டிடக்கலை |
கல்வெட்டுகள்: | தமிழ் |
வரலாறு | |
அமைத்தவர்: | பல்லவர், சோழர் விஜயநகர மன்னர்கள் |
வைகுந்தப் பெருமாள் கோவில் (Vaikunta Perumal Temple) தமிழ்நாட்டிலுள்ள உத்திரமேரூர் கிராமத்தில் உள்ளது. இக்கோவில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய கட்டிடக்கலையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. பல்லவரால் கட்டப்பட்ட இந்தக் கோவிலின் பிற்கால இணைப்புகள் சோழர்களால் ஏற்படுத்தப்பட்டவை. முதலாம் பராந்தக சோழன் (பொ.ஊ. 907-55) ஆட்சியின் போது கிராம சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஜனநாயக நடைமுறைகளை குறிக்கும் கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் காணப்படுகின்றன. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கோவிலுக்கு வந்தபோது இந்த நடைமுறை மூலம் ஈர்க்கப்பட்டு, கிராமங்களில் பஞ்சாயத்து ராஜ் என்ற இந்திய அமைப்புமுறையை மேம்படுத்துவதை வலியுறுத்தினார்.
வரலாறு
[தொகு]உத்திரமேரூர் பல்லவர், சோழர், பாண்டியர், சம்புவரையர், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்களால் ஆளப்பட்டது. கோவில் கல்வெட்டுக்களின்படி, பொ.ஊ. 750 ஆண்டுகளில் பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மன் (பொ.ஊ. 730–795) இச்சிற்றூரை நிறுவியதாகக் கூறப்படுகிறது.[1] அவ்வரசனால் இவ்வூர் பிராமணர்களுக்கும் வைணவர்களுக்கும் நன்கொடையாக அளிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[2]
இப்பகுதி சோழர்களால் கைப்பற்றப்பட்டு பொ.ஊ. 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர்களது ஆட்சியின் கீழ் வந்தது. முதலாம் பராந்தக சோழன் (பொ.ஊ. 907–950), முதலாம் இராஜராஜ சோழன் (பொ.ஊ. 985–1014), இராசேந்திர சோழன் (பொ.ஊ. 1012–1044), முதலாம் குலோத்துங்க சோழன் (பொ.ஊ. 1070–1120) ஆகிய சோழ அரசர்களின் காலங்களில் கோவிலுக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் குறித்த தகவல்களடங்கிய கல்வெட்டுக்கள் இங்குள்ளன. உள்ளூர் தலைவர்களைத் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கும் "குடவோலை" முறை பற்றிய விவரங்களும் இக்கோவில் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.[3][4] பராந்தக சோழன் காலத்தில் கிராமத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இக்குடவோலை வழக்கம் நடைமுறையில் இருந்ததற்கான குறிப்புகள் கோவில் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.[2][5]
பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியும் கிராமமும் பாண்டியர்களிடம் சென்று பின்னர் தெலுங்கு சோழ ஆட்சியாளரான விஜய கந்தகோபாலனிடம் சென்றன. பிற்காலத்தில், பல்லவர்கள் , சாளுக்கிய சோழர்கள், சம்புவரையர்கள் மற்றும் இறுதியாக விஜயநகரப் பேரரசின் மன்னர் குமார கம்பண்ணா ஆகியோரால் ஆளப்பட்டது. இவ்வூரிலுள்ள வைகுந்தப் பெருமாள் கோவில், சுப்ரமண்யர் கோவில் மற்றும் கைலாசநாத கோயில் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயரால் (1502-29) கட்டப்பட்டது.[3] பாரம்பரிய மரபுரிமை நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கோவில், இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.[6]
கட்டிடக்கலை
[தொகு]வைகுந்தப் பெருமாள் ஆலயம் சுமார் 0.5 ஏக்கர் (0.20 ஹெக்டேர்) பரப்பளவைக் கொண்டுள்ளது. சிறீதேவி மற்றும் பூதேவி இரு பக்கங்களிலும் உள்ள வைகுந்தநாதரின் உருவச்சிலை இந்த சன்னதியில் உள்ளது.[2] 2,500 சதுர அடியில் (230 சமீ) ஒரு மண்டபம் உள்ளது. கோவிலின் கூரைகள் தூண்களின்றி சுவர்களால் தாங்கப்படுகின்றன. சோழர் காலக் கல்வெட்டுகள் மண்டபத்தின் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன[7] குலோத்துங்க சோழர் மண்டபத்தைன் கூரையை அமைத்ததாகக் கருதப்படுகிறது.[8] இந்த முழு அமைப்பும் முதலில் ஒரு கூடும் மண்டபமாக இருந்தது; குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது அது சரிந்ததால் வைகுண்ட பெருமாளின் உருவத்தைக் கொண்ட கோவிலுடன் அம்மண்டபத்தை அவர் மீண்டும் கட்டினார் என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. ஆகம நெறிப்படி கூடும் மண்டபம் கிராமத்தின் மையப்பகுதியில் கட்டப்பட்டு, அதைச் சுற்றி கோவில்கள் அமைக்கப்பட்டன என்ற விவரங்களும் கல்வெட்டுக்களில் உள்ளன.[9]
குடவோலை முறை
[தொகு]கிராமவாசிகள் தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தேர்ந்தெடுப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென கோரியதாகவும் அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பராந்தக சோழர் குடவோலை முறையை (வாக்குப்பதிவு) ஏற்படுத்தியதாகவும் கோவிலின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. தேர்ந்தெடுக்கும் விதிகள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் வாக்காளர்களின் தகுதி ஆகியவை கல்வெட்டுகளில் விவரிக்கப்பட்டுள்ளன.
கிராமவாசிகள் ஒரு பொதுவான இடத்தில் கூடி, பனை இலைகளில் தங்கள் விருப்பமான பெயரை எழுதி, ஒரு பானையில் வைத்துக் கொண்டனர். "குடம்" என்பது பானையையும்மாக தமிழ் மொழியில் பட் மற்றும் ஓலை என்பது பனையோலையையும் குறிக்கிறது. இதன் காரணமாகவே இத்தேர்தல்முறை "குடவோலை" என அழைக்கப்பட்டது.
பயணிகள் மற்றும் முதுமைக்கூர்வடைந்தவர்கள் வாக்களிக்கத் தடையிருந்தது. வேட்பாளர்களுக்கான குறைந்தபட்ச வயது, கல்வித் தகுதி மற்றும் சொத்து ஆகியவை விதிக்கப்பட்டது. தங்கள் சொந்தப் பணத்தில் வீடு கட்டியிருத்தல் வேண்டும்; வேறு எந்தக் குழுவிலும் பங்கேற்பவராக இருத்தல் கூடாது; 35 முதல் 70 வயது வரை உள்ளவாராக இருத்தல் வேண்டும் போன்றவை வேட்பாளர்களுக்கான கட்டுப்பாடுகளாகும். தங்கள் வேட்பாளர்கள் செயற்பாட்டில் குறைநேரின் அவர்களைத் திருப்பி அனுப்பும் அதிகாரம் வேட்பாளர்களுக்கு இருந்தது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அந்த வேட்பாளர்களின் அடுத்தடுத்த ஏழு தலைமுறையினரை அனுமதிக்காதது போன்ற கடுமையான தண்டனையை கல்வெட்டுகள் குறிப்பிட்டன. பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டில் சோழ ஆட்சி முடிவுக்கு வந்ததுடன் இந்த முறை முடிவுக்கு வந்தது.
இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி இக்கோவிலுக்கு சென்றபோது இந்த தேர்தல்முறையால் ஈர்க்கப்பட்டு, கிராமிய கிராமங்களில் இந்திய பஞ்சாயத்து ராஜ், இந்தியாவின் அமைப்புமுறைகளை மேம்படுத்துவதில் வலியுறுத்தினார்.[10]
மேற்கோள்
[தொகு]- ↑ "Constitution 1,000 years ago". The Hindu (Chennai, India). 11 July 2008 இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080714154459/http://www.hindu.com/fr/2008/07/11/stories/2008071151250300.htm.
- ↑ 2.0 2.1 2.2 Madhavan, Chithra (2007). Vishnu Temples of South India Volume 1 (Tamil Nadu). Chithra Madhavan. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-908445-0-5.
- ↑ 3.0 3.1 R., Nagaswamy (2003). Uttaramerur. Chennai: Tamil Arts Academy. pp. 12–16.
- ↑ Padmaja, T. (2002). Temples of Kr̥ṣṇa in South India: History, Art, and Traditions in Tamilnāḍu. Abhinav Publications. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170173984.
- ↑ "Ancient Epigraphical Inscription on elections, Vaikuntha Perumal Temple, Uthiramerur, Kancheepuram District". National Informatics Centre for Tamil Nadu State Election Commission, Government of India. 2004. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015.
- ↑ T.E., Narasimhan (7 July 2012). "Temple of democracy". Business Standard. Retrieved 7 November 2015.
- ↑ T.E., Narasimhan (7 July 2012). "Temple of democracy". Business Standard. Retrieved 7 November 2015.
- ↑ T.E., Narasimhan (7 July 2012). "Temple of democracy". Business Standard. Retrieved 7 November 2015.
- ↑ "Constitution 1,000 years ago". 11 July 2008. Retrieved 7 November 2015.
- ↑ T.E., Narasimhan (7 July 2012). "Temple of democracy". Business Standard. http://www.business-standard.com/article/beyond-business/temple-of-democracy-112070700027_1.html. பார்த்த நாள்: 7 November 2015.