சதுர்புஜக் கோயில்
ஓர்ச்சா சதுர்புஜக் கோயில் | |
---|---|
சதுர்புஜக் கோயில், ஓர்ச்சா | |
இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஓர்ச்சாவில் சதுர்புஜக் கோயிலின் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம்: | நிவாரி மாவட்டம் |
அமைவு: | ஓர்ச்சா |
ஆள்கூறுகள்: | 25°21′0″N 78°8′24″E / 25.35000°N 78.14000°E |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
அமைத்தவர்: | ஓர்ச்சா சமஸ்தானத்தின் புந்தேல இராஜபுத்திர குலத்தினர் |
சதுர்புஜக் கோயில் (Chaturbhuj Temple), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில், நிவாரி மாவட்டத்தில் உள்ள ஓர்ச்சா நகரத்தில் பேட்வா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த சதுர்புஜக் கோயில் மற்றும் ஓர்ச்சா கோட்டை வளாகத்தை 16-ஆம் நூற்றாண்டில் அடிக்கல் நாட்டி கட்டத் துவங்கியவர் ஓர்ச்சா சமஸ்தானத்தை ஆண்ட புந்தேல இராஜபுத்திர குல மன்னர் மதுகர் ஷா ஆவார். இதனை கட்டி முடித்தவர் அவரது மகன் வீர் சிங் ஆவார்.[1][2][3][4]இக்கோயில் 344 அடி உயரம் கொண்டது.
அமைவிடம்
[தொகு]சதுர்புஜக் கோயில் குவாலியரிலிருந்து 119 கிலோ மீட்டர் தொலைவில், ஜான்சி-கஜுராஹோ நெடுஞ்சாலையில உள்ளது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜான்சி நகரத்தில் உள்ளது. [5]
சிறப்புகள்
[தொகு]பேட்வா ஆற்றின் கரையில் இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சதுர்புஜக் கோயிலின் அடித்தளம் 4.5 மீட்டர் உயரம் கொண்டது. இக்கோயிலின் உயரம் 344 அடி (105 மீட்டர்) உயரம் கொண்டது. [2][6]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Quick Breaks: Orchha". Rediff.
- ↑ 2.0 2.1 "Interior of the Chaturbhuj Temple from the entrance archway, Orchha". British Library.
- ↑ Singh & Singh 1991, ப. 57.
- ↑ Asher 2003, ப. 57.
- ↑ "Orchha". Official website of Madhya Pradesh Tourism. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2015.
- ↑ Mitra 2009, ப. 43.
உசாத்துணை
[தொகு]- Asher, Frederick M. (2003). Art of India: Prehistory to the Present. Encyclopædia Britannica. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85229-813-8.
- Mitra, Swati (2009). Orchha, Travel Guide. Goodearth Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87780-91-5.
- Singh, Ajai Pal; Singh, Shiv Pal (1991). Monuments of Orchha. Agam Kala Prakasha.