உள்ளடக்கத்துக்குச் செல்

பூமரா கோயில்

ஆள்கூறுகள்: 24°25′42.1″N 80°38′29.6″E / 24.428361°N 80.641556°E / 24.428361; 80.641556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமரா கோயில்
பர்குலீஸ்வரர் கோயில்
கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டின் சிவனுக்குரிய கற்கோயில்
கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டின் சிவனுக்குரிய கற்கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பூம்ரா, நகோட்
புவியியல் ஆள்கூறுகள்24°25′42.1″N 80°38′29.6″E / 24.428361°N 80.641556°E / 24.428361; 80.641556
சமயம்இந்து சமயம்
மாநிலம்மத்தியபிரதேசம்
மாவட்டம்சத்னா[1]

பூமரா கோயில் அல்லது பர்குலீஸ்வரர் கோயில் (இக்கோயிலை பூமரா கோயில், பூப்பரா கோயில், பூம்ரா கோயில் என்றும் அழைப்பர்) (Bhumara Temple, sometimes called Bhumra or Bhubhara), இது கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டின் குப்தர்கள் காலத்து இந்து கற்கோயில் ஆகும். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கபப்ட்ட இக்கோயில் மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சத்னா நகரத்திற்கு தென்மேற்கில் 40 கிமீ தொலைவில் உள்ளது.[2][3][4]சதுர வடிவில் அமைந்த இக்கோயில் ஒரு மண்டபத்துடன் கூடியது.[5]தற்போது இக்கோயிலின் பெரும்பகுதிகள் சிதிலமடைந்து உள்ளது. இக்கோயில் சுற்றுப் பிரகாரங்களைக் கொண்டது. இக்கோயிலின் கருவறையின் நுழைவாயிலில் கங்கை மற்றும் யமுனா தேவிகளின் சிற்பங்கள் கொண்டுள்ளது.[1][6] இக்கோயில் கருவறையின் ஒருமுக சிவலிங்கம் குப்தர்களின் கலைநயத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

இக்கோயிலில் மகிஷாசூரனை கொன்ற துர்கை மற்றும் விநாயகர், முருகன், விஷ்ணு, பிரம்மா, யமன், குபேரன், சூரியன், மன்மதன் போன்ற தேவர்களின் சிற்பங்கள் உள்ளது.[7][5][8]

சூரியச் சிற்பம், பூமரா கோயில்

காலம்

[தொகு]

1920-இல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குப்தர் காலத்து இக்கோயிலின் காலம், கிபி 5-6-ஆம் நூற்றாண்டு காலத்தவை என தொல்லியல் அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.[9][10][5][11]

பூமரா சிவன் கோயிலின் கருவறை, ஆண்டு 1919
பூமரா சிவன் கோயில் கருவறை ஜன்னலின் புகைப்படம், ஆண்டு, 1919

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Bhumra temple". Archaeological Survey of India, Bhopal Circle.
  2. George Michell 1988, ப. 39, 95.
  3. Heather Elgood (2000). Hinduism and the Religious Arts. Bloomsbury Publishing. p. 144. ISBN 978-0-8264-9865-6., Quote: "Other examples are the fifth-century Siva temple at Bhumara which has a fine ekamukha (single faced) linga, a sixth century Dasavatara temple at Deogarh (...)".
  4. Bhumra (Bhumara) Shiva temple, viewed from south, Gupta Dynasty, India, ca. 5th-6th century A.D. C. Krishna Gairola (1975), University of Washington
  5. 5.0 5.1 5.2 Ulrich Wiesner (1978). Nepalese Temple Architecture: Its Characteristics and Its Relations to Indian Development. BRILL Academic. pp. 46–48. ISBN 90-04-05666-1.
  6. Ulrich Wiesner (1978). Nepalese Temple Architecture: Its Characteristics and Its Relations to Indian Development. BRILL Academic. pp. 46–48, 74. ISBN 90-04-05666-1.
  7. Radhakumud Mookerji (1959). The Gupta Empire. Motilal Banarsidass. p. 146. ISBN 978-81-208-0440-1.
  8. Banerji 1998, ப. 9-10, with Plates XII-XV.
  9. Heather Elgood (2000). Hinduism and the Religious Arts. Bloomsbury Publishing. p. 144. ISBN 978-0-8264-9865-6.
  10. Frederick M. Asher (1980). The Art of Eastern India: 300 - 800. University of Minnesota Press. p. 27. ISBN 978-1-4529-1225-7.
  11. Michael W. Meister (1984). Discourses on Siva. University of Pennsylvania Press. p. 494. ISBN 978-0-8122-7909-2.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமரா_கோயில்&oldid=3777667" இலிருந்து மீள்விக்கப்பட்டது