மரியாவின் பாடல்
மரியாவின் பாடல் என்று அழைக்கப்படும் பாடல் லூக்கா நற்செய்தியில் இயேசுவின் தாய் மரியாள், திருமுழுக்கு யோவானின் தாயான எலிசபெத்தைச் சந்தித்த போது கடவுளை போற்றிப் பாடியப் பாடலாகும். இது மிகப் பழைய எட்டுக் கிறித்துவப் பாடல்களுல் ஒன்றாகும். இது பல கிறித்துவப் பிரிவிகளின் வழிபாட்டில் பயன் படுத்தப்படுகின்றது.[1][2] இப்பாடலை, இதன் இலத்தீன் மொழியின் துவக்க வார்த்தையான மேக்னிஃபிகாத் (Magnificat ) என்று ஆங்கிலத்திலும் மேலும் பல மொழிகளிலும் அழைப்பர்.
இப்பாடலின் வரிகள் லூக்கா நற்செய்தியில் இடம் பெறுகின்றது (Luke 1:46-55). இது மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த போது பாடப்படுகின்றது.[1] இப்படலைக்கேட்கும் போது எலிசபெத்து திருமுழுக்கு யோவானை ஆறு மாதம் கருத்தரித்திருந்தார்.
இப்பாடல் பல பழைய ஏற்பாடு விவிலியப் பகுதிகளின் கருப்போருளைக்கொண்டுள்ளது. 1 சாமுவேல் நூலில் (1Samuel 2:1-10) காணப்படும் அன்னாவின் பாடல் மற்றும் செப்துவசிந்தா படிகளினோடும் ஒத்து இருக்கின்றது.
பாடல்
[தொகு]இப்பாடலின் மூல மொழி புதிய ஏற்பாடு எழுதப்பட்ட மொழியான கிரேக்கம் ஆகும்.
- Μεγαλύνει ἡ ψυχή μου τὸν Κύριον
- καὶ ἠγαλλίασεν τὸ πνεῦμά μου ἐπὶ τῷ Θεῷ τῷ σωτῆρί μου,
- ὅτι ἐπέβλεψεν ἐπὶ τὴν ταπείνωσιν τῆς δούλης αυτοῦ.
- ἰδού γὰρ ἀπὸ τοῦ νῦν μακαριοῦσίν με πᾶσαι αἱ γενεαί,
- ὅτι ἐποίησέν μοι μεγάλα ὁ δυνατός,
- καὶ ἅγιον τὸ ὄνομα αὐτοῦ,
- καὶ τὸ ἔλεος αὐτοῦ εἰς γενεὰς καὶ γενεὰς
- τοῖς φοβουμένοις αυτόν.
- Ἐποίησεν κράτος ἐν βραχίονι αὐτοῦ,
- διεσκόρπισεν ὑπερηφάνους διανοίᾳ καρδίας αὐτῶν·
- καθεῖλεν δυνάστας ἀπὸ θρόνων
- καὶ ὕψωσεν ταπεινούς,
- πεινῶντας ἐνέπλησεν ἀγαθῶν
- καὶ πλουτοῦντας ἐξαπέστειλεν κενούς.
- ἀντελάβετο Ἰσραὴλ παιδὸς αὐτοῦ,
- μνησθῆναι ἐλέους,
- καθὼς ἐλάλησεν πρὸς τοὺς πατέρας ἡμῶν
- τῷ Αβραὰμ καὶ τῷ σπέρματι αὐτοῦ εἰς τὸν αἰῶνα.[3]
கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ இலத்தீன் வடிவம்:
- Magnificat anima mea Dominum,
- et exsultavit spiritus meus in Deo salvatore meo,
- quia respexit humilitatem ancillae suae.
- Ecce enim ex hoc beatam me dicent omnes generationes,
- quia fecit mihi magna,
- qui potens est,
- et sanctum nomen eius,
- et misericordia eius in progenies et progenies
- timentibus eum.
- Fecit potentiam in brachio suo,
- dispersit superbos mente cordis sui;
- deposuit potentes de sede
- et exaltavit humiles;
- esurientes implevit bonis
- et divites dimisit inanes.
- Suscepit Israel puerum suum,
- recordatus misericordiae,
- sicut locutus est ad patres nostros,
- Abraham et semini eius in saecula.[4]
தமிழ் விவிலிய வடிவம்:
- ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
- என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகைக் கொள்கின்றது.
- ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
- இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
- ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
- தூயவர் என்பதே அவரது பெயர்.
- அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
- அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
- உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.
- வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
- தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்;
- பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
- செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
- மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
- ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
- என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்;
- தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.
வழிபாடுகளில்
[தொகு]இப்பாடல் கத்தோலிக்க திருச்சபையில் திருப்புகழ் மாலை (கட்டளை செபம்), லூதரனியம் மற்றும் ஆங்கிலிக்கத்தில் மாலை செபமாகவும் பயன் படுத்தப்படுகின்றது.
இப்பாடலை திரித்துவப் புகழோடு நிறைவு செய்வது மரபு.
இசை
[தொகு]இப்பாடலுக்கு ஆன்டன் புரூக்னர், விவால்டி, யோகான் செபாஸ்தியன் பாக் முதலிய பலர் இசை அமைத்துள்ளனர். தமிழ் மொழியிலும் இப்பாடல் பலரால் இசை அமைக்கப்பட்டு வழிபாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது.
- இவற்றையும் காண்க: List of composers who set Magnificat (செருமன் மொழி)
சமூகம் மற்றும் அரசியல்
[தொகு]இப்பாடல் நிக்காராகுவா நாட்டு உழவர்களிடையே மிகவும் பெயர்போனது. அவர்கள் இப்படல் பொறிக்கப்பட்ட காப்பை எப்போது அணிந்திருப்பர். இதனாலேயே சோமோசா காலங்களின் உழவர்கள் சோமோசாவுக்கு ஓட்டு போட்டதர்க்கான சீட்டை எப்போதும் வைத்திருக்க ஆணையிடப்பட்டது. ஆகவே இதனை கேலிசெய்யும் விதமாக இதனையும் மேக்னிஃபிகாத் (இலத்தீனில் இப்பாடலின் பெயர்) என அழைத்தனர்..[5]
இப்பாடலுக்கு தர்கால இசை வடிவம் "Let Morning Shine" என்னும் ரிச்சர்டு வுவின் பாடல் தொகுப்பில் இடம் பெருகின்றது. இது தென் கொரியாவின் விடுதலைக்காக இயற்றப்பட்டது ஆகும்.[6]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 The History and Use of Hymns and Hymn-Tunes by David R Breed 2009 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-110-47186-6 page 17
- ↑ Favourite Hymns by Marjorie Reeves 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8264-8097-7 page 3-5
- ↑ The Resurgence Greek Project[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Revised Vulgate text
- ↑ 'The Gospel in Solentiname', Ernesto Cardenal (Maryknoll: Orbis Books, 1978) p.25.
- ↑ http://www.globalshift.org/tag/let-morning-shine/
வெளி இணைப்புகள்
[தொகு]- The Magnificat
- Exegesis and Sermon Study of Luke 1:46-55: The Magnificat, by Curtis A. Jahn பரணிடப்பட்டது 2008-12-18 at the வந்தவழி இயந்திரம்
- ChoralWiki: Magnificat
- "Magnificat". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.