வியாகுலத் தாய்மரி (தொடர்பாடல்)
வியாகுலத் தாய்மரி அல்லது வியாகுலச் சங்கீதம் என்னும் பாடல் தூய மரியாவின் துயரங்களின் நினைவாகப் கத்தோலிக்க திருச்சபையில் பாடப்படும் பாடலாகும். இது 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். இதன் ஆசிரியர் பிரான்சிஸ்கன் சபையினைச் சேர்ந்த ஜெகொபின் த டோடி அல்லது திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டாகவோ இருக்கலாம்.[1][2][3]
கிறிஸ்துவின் பாடுகளின் போது மரியாள் பட்ட துன்பங்களை நினைவுகூறும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது. 1388-இல் இப்பாடல் வியாகுல அன்னை நவநாளில் பயன் படுத்தப்பட்டதாக ஜார்ஜுஸ் ஸ்டெல்லா என்பவர் எழுதியுள்ளார்.[4][5]
இப்பாடல் திருப்பலியில் தொடர்பாடலாக பாடப்படுவதை திரெந்து பொதுச்சங்கம் நீக்கியது. எனினும் திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்டால் இது தூய மரியாவின் துயரங்களின் நினைவு நாளான செப்டம்பர் 15 அன்று பாடப்பட அனுமதிக்கப்பட்டது.[6]
பாடல்
[தொகு]கீழ்வரும் மொழிபெயர்ப்பு கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாகும். இது கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி வாசக நூலிலிருந்து எடுக்கப்பட்டது. இது வார்த்தைக்கு வார்த்தை செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு அல்ல. மாறாக பொருள் மாறாவண்ணம், தமிழ் கவிதை நடைக்கு ஒப்ப பெயர்க்கப்பட்டது ஆகும்.
Stabat mater dolorosa Cuius animam gementem, O quam tristis et afflicta Quae moerebat et dolebat, Quis est homo qui non fleret, Quis non posset contristari Pro peccatis suae gentis Vidit suum dulcem Natum Eia, Mater, fons amoris Fac, ut ardeat cor meum Sancta Mater, istud agas, Tui Nati vulnerati, Fac me tecum pie flere, Juxta Crucem tecum stare, Virgo virginum praeclara, Fac, ut portem Christi mortem, Fac me plagis vulnerari, Flammis ne urar succensus, Christe, cum sit hinc exire, Quando corpus morietur, |
திருமகன் சிலுவையில் தொங்கிய போது அருகில், பொருமலும் வருத்தமும் பொங்கிட ஆங்குத் தேவ சுதனின் அன்பால் அன்னை, அன்புத் தாயவர் மாண்புறு மகனின் இத்துணைத் துயரில் மூழ்கித் தவிக்கும் தம் திருமகனோடு பெருந்துயர் கொள்ளும் தம்முடைய மக்களின் பாவம் நீங்க தேனினுமினிய தேவனின் மைந்தன் அன்பின் ஊற்றாம் அன்னையே, அம்மா, இறைவனாம் கிறிஸ்துவுக் கன்பு செய்து தூய நல்தாயே இவ்வரம் வேண்டும்: அடியேனுக்காய்க் காயமும் துன்பமும் சிலுவை நாதருடன் துயருறவும், சிலுவையடியில் உம்மோடு நின்று, சிந்தும் கன்னியர் தம்முள் சிறந்த கன்னியே, கிறிஸ்துவின் சாவை நானும் தாங்கவும் நின் மகன் காயம் நினைந்துளம் வருந்தவும் என்றன் இறுதித் தீர்ப்பு நாளில் எரியில் கிறிஸ்துவே, நான் இம்மை விட்டங்கே என்னுடல் மரித்து அழியும் போதில் |
இசை
[தொகு]இப்படலின் ஆங்கில மற்றும் இலத்தீன் வரிகளுக்கு ஆன்டோனியோ விவால்டி, பிராண்ஸ் சூபேர்ட், ஜூசெப்பே வேர்டி, எபிகா இசைக்குழு, ஜோசப் ஹேடன், அன்டனின் டுவோராக் முதலிய பலர் இசையமைத்துள்ளனர்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Sabatier, Paul Life of St. Francis Assisi Charles Scribner Press, NY, 1919, page 286
- ↑ The seven great hymns of the Mediaeval Church by Charles Cooper Nott 1868 ASIN: B003KCW2LA page 96
- ↑ p. 574, Alighieri, Durling, Martinez (2003) Dante, Robert M., Ronald L. Oxford The Divine Comedy of Dante Alighieri: Purgatorio Volume 2 of The Divine Comedy of Dante Alighieri Oxford University Press. "The Stabat Mater by the Franciscan Jacopone da Todi."
- ↑ Catholic encyclopedia
- ↑ "Stabatmater Speciosa". Archived from the original on 2012-12-08. பார்க்கப்பட்ட நாள் 2012-09-15.
- ↑ Heartz, Daniel (1995). Haydn, Mozart and the Viennese School: 1740-1780. W.W. Norton & Co. p. 305. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-393-03712-6. பார்க்கப்பட்ட நாள் 3 April 2011.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- A catalog of Stabat Mater settings பரணிடப்பட்டது 2012-04-23 at the வந்தவழி இயந்திரம்
- Several English translations பரணிடப்பட்டது 2013-01-22 at the வந்தவழி இயந்திரம்