கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்துவின் திரு ஆத்துமமே எனத்துவங்கும் செபமானது கத்தோலிக்க திருச்சபையின் மரபில் நடுக் காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் செபமாகும். இச்செபமானது கத்தோலிக்கருக்கு நற்கருணையின் மீது இருக்கும் நம்பிக்கைகளையும், திருமுழுக்கு, மற்றும் திருப்பாடுகள் ஆகியவற்றில் இருக்கும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக்கொண்டதாகும்.[1]
ஜீன்-பாப்திஸ்டு லூலி (Jean-Baptiste Lully) இச்செபத்துக்கு இசைவடிவம் கொடுத்துள்ளார். புனித லொயோலா இஞ்ஞாசியார் தனது ஆன்ம பயிற்சிகள் (Spiritual Exercises) நூலில் இச்செபத்தை குறிப்பிட்டுள்ளதால் இதன் ஆசிரியர் இவர் என பலர் தவறாக எண்ணுகின்றனர். இக்காரணத்தால் இச்செபமானது இஞ்ஞாசியார் செபம் எனவும் அழைக்கப்படுகின்றது. எனினும் அவருக்கு முந்தியே பல செபநூல்களில் இச்செபமானது இடம்பெற்றுள்ளது என்பது குறிக்கத்தக்கது.