பட்டாலிக்
பட்டாலிக் | |
---|---|
இந்தியாவின் லடாக் பிரதேசத்தின் பட்டாலிக்கின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 34°39′N 76°20′E / 34.65°N 76.33°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | லடாக் |
மாவட்டம் | கார்கில் |
வருவாய் வட்டம் | கார்கில் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 194103[1] |
பட்டாலிக் (Batalik), இந்தியாவின் வடக்கில் அமைந்த லடாக் ஒன்றியப் பகுதியின் கார்கில் மாவட்டம், கார்கில் வருவாய் வட்டத்தில் மலைகள் சூழ்ந்த சிற்றூர் ஆகும். இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பிரதேசமான கில்கித்-பஸ்டிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்த இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஊராகும். இது கார்கில், லே மற்றும் பல்திஸ்தான் பகுதிகளுக்கு மையத்தில் அமைந்த பட்டாலிக் ஊர் ஒரு இராணுவ கேந்திரம் ஆகும்.[2] 1999-ஆம் ஆண்டில் இப்பகுதியில் கார்கில் போர் நடைபெற்றது.[3] பட்டாலிக் கார்கில் நகரத்திற்கு வடகிழக்கில் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[4] பேரரசர் அலெக்சாந்தர் படைவீரர்களின் வழித்தோன்றல்களான பரோக்பா மக்கள்[5] பட்டாலிக் பகுதியில் வாழ்வதாக கருதப்படுகிறது. பட்டாலிக் பகுதி மக்கள் திபெத்திய பௌத்தம், சியா இசுலாம் மற்றும் இந்து சமயங்களைப் பின்பற்றுகின்றனர்.
போக்குவரத்து
[தொகு]சாலை
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 1, பட்டாலிக்கை கார்கில், லே மற்றும் சிறீநகருடன் இணைக்கிறது.
இதனையும் காண்க
[தொகு]மனோஜ் குமார் பாண்டே - கார்கில் போர் வெற்றி வீரர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Batalik (Google Maps)". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 29 April 2020.
- ↑ "Kargil anniv: 10 years later the war is Drass versus Batalik". Indiatoday.intoday.in. 2009-07-27. பார்க்கப்பட்ட நாள் 2017-09-30.
- ↑ "BATTLE FOR BATALIK". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 2017-09-30.
- ↑ "Now, go for a vacation to Kargil war battlefield Batalik". Dnaindia.com. 2010-05-28. பார்க்கப்பட்ட நாள் 2017-09-30.
- ↑ இந்தியாவில் 'தூய ஆரிய' ஆண்களிடம் கர்ப்பம் தரிக்க ஜெர்மானிய பெண்கள் வந்தார்களா?