உள்ளடக்கத்துக்குச் செல்

சேவா பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேவா பாரதி
सेवा भारती
உருவாக்கம்1979
நிறுவனர்மதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ்
வகைசமுதாயச் சேவை
தலைமையகம்
சேவைப் பகுதி
உடல் நலம், கல்வி
தாய் அமைப்பு
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்
சார்புகள்சங்கப் பரிவார்
வலைத்தளம்https://www.sevabharathi.in/?about_us

சேவா பாரதி (Seva Bharati) (இந்தி: सेवा भारती) எனும் தொண்டு நிறுவனம் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் மற்றும் பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உடல் நலம் மற்றும் கல்வி குறித்து செயல்படும் அமைப்பாகும்.[1] சேவா பாரதி தொண்டு நிறுவனத்தை 8 ஏப்டல் 1979 அன்று தில்லி அம்பேத்கார் அரங்கக் கூட்டத்தில், தொண்டர்களிடையே பேசும் போது துவக்கி வைத்தவர் சமூக ஆர்வலர் மதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ் ஆவார். சேவா பாரதி நிறுவனத்தை சமூக-கலாச்சார தொண்டு நிறுவனமாக 2011-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. 2017-ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பின் தலைவராக பரக் அபயகார் உள்ளார்.

மேலும் இந்த அமைப்பு நகர்புறத்தில் உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு மருத்துவ உதவிகள், இலவசக் கல்வி மற்றும் தொழில் பயிற்சிகள் வழங்குகிறது.[2]. பன்னாட்டு அளவிலும், இந்திய அளவிலும் சேவா பாரதி அமைப்பு பல சிறப்பு விருதுகளை பெற்றுள்ளது. இதன் தாய் அமைப்பு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் ஆகும். இது சங்கப் பரிவாருடன் இணைப்பு பெற்றுள்ளது..[3][4]

சேவா பாரதியும், அதன் சகோதரி அமைப்புகளும் இணைந்து இராஷ்டிர சேவாபாரதி எனும் பெயரில் ஒரு குடையின் கீழ் இணைந்து நின்று, நாடு முழுவதும் பல்வேறு சேவை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பெரிய அளவிலான பேரிடர் காலத்தின் போது, எளிய மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளையும் சேவாபாரதி வழங்குகிறது. சென்னை மற்றும் கேரளா மழை வெள்ளத்தின் போது அதன் பணி சர்வதேச பாராட்டைப் பெற்றது. கொரோனாவின் தற்போதைய நெருக்கடியில், சேவாபாரதி அதன் கொடுமையை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

செயல்பாடுகள்

[தொகு]

2001 குஜராத் நிலநடுக்கம், 2004 சுனாமி, 2016 வட இந்தியப் பெருவெள்ளம் மற்றும் 2018 கேரள வெள்ளத்தின் போது சேவா பாரதி தொண்டர்கள் நிவாரணப் பணிகள் மேற்கொண்டனர்.[5][6] தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை, சேவா பாரதி மறுவாழ்வு இல்லங்களில் வளர்த்தெடுத்தது.[7][8] சேவா பாரதி தொண்டு நிறுவ்னம் இதுவரை கல்வி அளிப்பதில் 17,500 திட்டங்களையும், உடல் நலத்திற்கு 12,000 திட்டங்களையும் மேற்கொண்டுள்ளது.[9] பொருளாதாரத்தில் நசிந்த மக்கள் மற்றும் சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவா பாரதியின் மருந்துவ உதவி, குழந்தை காப்பகம், நூலகம், முதியோர் கல்வி, தொழில் மற்றும் தொழில் பயிற்சி, தெருவில் சுற்றும் குழந்தைகளின் மேம்பாடு மற்றும் தொழுநோயாளர்களுக்கு சேவா பாரதியின் நலத்திட்டங்கள் பெரிதும் உதவுகிறது.[10] இந்தத் திட்டங்களின் மூலம் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரை அவர்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை சேவாபாரதி நோக்கமாகக் கொண்டுள்ளது.

உடல் நலம்

[தொகு]
பெங்களூர் கித்வாய் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரிக்கும் சேவா பாரதி அமைப்பின் தொண்டர்கள்

இந்தியா முழுவதும் சேவா பாரதியின் 5,000 இலவச மருத்துவ நல மையங்கள் செயல்படுகிறது. அதில் 4,200 மையங்கள் கிராமப்புறங்களிலும், மலைவாழ் மக்கள் வாழும் இடங்களில் செயல்படுகிறது. மேலும் 480 நிலையான மருத்துவ மனைகள் மற்றும் 960 நடமாடும் மருத்துவ மனைகள், 6,500 ஆம்புலன்ஸ் வண்டிகள், 7 தொழுநோய் மருத்துவமனைகள் மற்றும் மறுவாழ்வு மையங்கள் செயல்படுகிறது. சேவா பாரதி 450 இரத்த சேமிப்பு வங்கிகள் கொண்டுள்ளது.[7][11] ".[12][7] குடிசைப் பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்களை நடத்துகிறது.[13][14][15][16][17]

கோவிட் 19 பெருந்தொற்று றின் போது

[தொகு]

கோவிட் பெருந்தொற்றின் போது சேவா பாரதி மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தொண்டர்கள் விழிப்புணர்வு முகாம்களை நடத்தினர்.[18]

மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கு

[தொகு]
சேவா பாரதியின் மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளுக்கான மையம், பெங்களூர்

மாற்றுத் திறன் படைத்த குழந்தைகள், முதியோர் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையம், மனமகிழ் மன்றங்களை சேவா பாரதி அமைப்பு இந்தியா முழுவதும் 179 மையங்களில் நடத்துகிறது.[19]

கல்வி

[தொகு]

பொருளாதாரத்தின் நலிவுற்றவர்கள், மலைவாழ் பழங்குடி மக்கள், கிராமபுற ஏழை மாணவர்கள் தங்கிப் படிக்க மற்றும் உணவு அருந்த சேவா பாரதி அமைப்பு விடுதிகள் கட்டியுள்ளது.[20]

ஆதரவற்ற குழந்தைகள் இல்லம்

[தொகு]

மாத்திரி சாயா எனும் பெயரில் சேவா பாரதி அமைப்பு ஆதரவற்றவற்ற குழந்தைகளுக்கான நிவாரண மையங்கள் நடத்துகிறது. இம்மையத்தின் குழந்தைகள் சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்கும் வகையில் மேனிலைப் பள்ளிக்கல்வி மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வசதிகள் செய்து தருகிறது.[21]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Swain, Pratap Chandra (2001). Bharatiya Janata Party: People and Performance. New Delhi: Ashish Publishing House. p. 88.
  2. Jaffrelot, Christophe (2010). Religion, Caste, and Politics in India. New Delhi: Primus Books.
  3. "ABPS session begins in Puttur RSS leaders to focus on Corruption". mangalorean.com. Archived from the original on 2 April 2015.
  4. "RSS top 3day Annual meet Akhil Bharatiya Pratinidhi Sabha (ABPS) to be held on March 7–9 at Bangalore". samvada.org. 3 March 2014. Archived from the original on 6 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 மார்ச் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. Tughlaq, 12 January 2005
  6. India Today Magazine பரணிடப்பட்டது 3 செப்டெம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம். India-today.com (12 February 2001).
  7. 7.0 7.1 7.2 Rashtriya Seva Bharati report Seva Activity report பரணிடப்பட்டது 4 சூலை 2008 at the வந்தவழி இயந்திரம்
  8. Kashmir பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம். News.oneindia.in (25 June 2006).
  9. [1] பரணிடப்பட்டது 20 நவம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்
  10. ":: Sri Vivekananda Maharogi Arogya Kendram ::".
  11. Chandigarh, India – Regional Briefs. The Tribune. (9 February 2003).
  12. Tomar, Anjul (24 April 1998). "Financial difficulties hinder aid to poor patients"[தொடர்பிழந்த இணைப்பு], The Indian Express
  13. 202027 "Cardiac and diabetic check-up camp held" பரணிடப்பட்டது 28 மார்ச்சு 2009 at the வந்தவழி இயந்திரம், The Indian Express, 20 September 2006
  14. Medical camp in bhat inda, The Tribune, Tuesday, 3 October 2000, Chandigarh, India [2]
  15. The Tribune, Chandigarh, India – Regional Briefs பரணிடப்பட்டது 2017-01-23 at the வந்தவழி இயந்திரம். The Tribune.
  16. Chandigarh, India – Regional Briefs. The Tribune. (4 July 2003).
  17. NGO to hold neuropathy treatment camp Chandigarh, The Indian Express, 1 April [3][தொடர்பிழந்த இணைப்பு]
  18. "RSS begins swine flu awareness drive" பரணிடப்பட்டது 24 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம். The Times of India. (11 August 2009).
  19. Club planned for disabled children பரணிடப்பட்டது 5 நவம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம், The Hindu, Tuesday, 17 October 2000
  20. Hostel for tribal children opened, Monday, 27 Oct 2008, The Hindu
  21. C.B. Singh, (5 June 2006), The Indian Express "Someone is opening loving arms to abandoned children"[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவா_பாரதி&oldid=4057754" இலிருந்து மீள்விக்கப்பட்டது