வித்யா பாரதி
வித்யா பாரதி | |
---|---|
அமைவிடம் | |
இந்தியா | |
தகவல் | |
வகை | கல்வி நிறுவனம் |
குறிக்கோள் | Sa Vidya Ya Vimuktaye (அறிவே விடுதலையை அளிக்கும்) |
தொடக்கம் | 1977 |
நிலை | செயல்படுகிறது |
Publication | வித்யா பாரதி சன்ஸ்கிருதி சிக்சா சன்ஸ்தான், குருச்சேத்திரம் & பாரதிய சிக்சா சோத் சன்ஸ்தான், லக்னோ |
இணைப்புகள் | சங்கப் பரிவார் |
இணையம் | vidyabharti |
வித்தியா பாரதி (Vidya Bharati short for Vidya Bharati Akhil Bharatiya Shiksha Sansthan) ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் கல்விப் பிரிவாகும். தொண்டு நிறுவனமான இது இந்தியா முழுவதும் 12,000 கல்வி நிலையங்களை இயக்குகிறது. 2016-ஆம் ஆண்டு முடிய இக்கல்வி நிலையங்களில் 3.2 மில்லியன் மாணவ-மாணவிகள் பயின்றனர்.[1][2]இதன் பதிவு அலுவலகம் லக்னோ நகரத்திலும், செயல் அலுவலகம் தில்லியிலும் இயங்குகிறது. இதன் கிளை அலுவலகம் குருச்சேத்திரத்தில் உள்ளது. [3][4]
வரலாறு
[தொகு]ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் இரண்டாவது தேசியத் தலைவரான மாதவ சதாசிவ கோல்வால்கர் இக்கல்வி நிறுவனத்தின் முன்னோடியாக 1946-ஆம் ஆண்டில் குருச்சேத்திரத்தில் பகவத் கீதையை பயிற்றுவிக்க பள்ளிக்கூடத்தை நிறுவினார். 1948-ஆம் ஆண்டில் ஆர் எஸ் எஸ் தடை செய்யப்பட்டது. தடை நீகிய பின்னர் 1952-ஆம் ஆண்டில் கோரக்பூரில் ஆர் எஸ் எஸ் தலைவர் நானாஜி தேஷ்முக் பாலர் சரஸ்வதி பள்ளியை நிறுவினார்.[4][5]பின்னர் இதே போன்ற பள்ளிகள் நாட்டின் பல இடங்களில் நிறுவப்பட்டது. பள்ளிகள் பெருகியதால், பாலர் பள்ளிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க மாநில அளவில் தில்லி, பிகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாலர் கல்வி பிரச்சார மேலாண்மை குழு நிறுவப்பட்டது.[4][5]
1977-78-ஆம் ஆண்டில் தேசிய அளவில் பாலர் பள்ளிகளை மேற்பார்வையிட வித்யா பாரதி எனும் மைய அமைப்பு தில்லியில் நிறுவப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த அமைப்பு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் நன்மதிப்பைப் பெற்றது.[4][5]
அமைப்பு
[தொகு]1992-ஆம் ஆண்டில் வித்யா பாரதியின் கீழ் 5,000 பள்ளிகள் இருந்தன. 2002-ஆம் ஆண்டில் வித்யா பாரதி அமைப்பில் 17,396 பள்ளிகளில், 93,000 ஆசிரியர்களுடன், 22 இலட்சம் மாணவ-மாணவிகள் பயின்றனர். மேலும் வித்தியா பாரதி அமைப்பு 15 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளையும், 7 தொழில் படிப்பு நிறுவனங்களையும் நடத்துகிறது.[6]இந்த அமைப்பு 2019-ஆம் ஆண்டில் 12,828 சாதாரண பள்ளிகளும், 11,353 முறைசாராப் பள்ளிகளையும் நடத்துகிறது. [7]2019-ஆம் ஆண்டில் வித்யா பாரதியின் பள்ளிகளில் 34 இலட்சம் மாணவர்கள் பயின்றனர். இதன் பெரும்பாலான பள்ளிகள் சிபிஎஸ்சி அல்லது அதனதன் மாநில பாடத்திட்டங்களுடன் இணைப்பு பெற்றுள்ளது.[6][8]மேலும் வித்யா பாரதி அமைப்பு 250 இடைநிலைக் கல்லூரிகளை நிர்வகிக்கிறது.
மாநில அளவிலான குழுக்கள்
[தொகு]வித்தியா பாரதியின் மாநில அமைப்புகள் பல பெயர்களில் இயங்குகிறது.
- தில்லி: இநது கல்விக் குழு
- அரியானா: இந்து கல்விக் குழு
- பஞ்சப்: சர்வ இத்காரி கல்விக் குழு
- பிகார்: வித்யா விகாஸ் சமிதி
- ஜம்மு: பாரதிய கல்விக் குழு
- ஜார்கண்ட்: வனவாஞ்சல் கல்விக் குழு,[5] Vidya Vikas Samiti, Shishu Shiksha Vikas Samiti[9]
- ஒடிசா: கல்வி மேம்பாட்டுக் குழு[5]
- தெலங்காணா மற்றும் ஆந்திரப் பிரதேசம்: சிறீ சரஸ்வதி வித்யா பீடம்[10]
- தமிழ்நாடு: விவேகானந்த கேந்திரம் மற்றும் பல[5]
- கேரளா: பாரதிய வித்யா நிகேதன்[11]
- அசாம்: பாலர் கல்விக் குழு[12]
- உத்தராகண்ட் : பாரதிய கல்விக் குழு
- உத்தரப் பிரதேசம்: பாரதிய கல்விக் குழு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PM Modi urges Vidya Bharati schools to aim for excellence" (in en-IN). The Indian Express. Express News Service (New Delhi). 13 February 2016. https://indianexpress.com/article/india/india-news-india/vidya-bharati-akhil-bharatiya-shiksha-sansthan-pm-modi-urges-vidya-bharati-schools-to-aim-for-excellence/.
- ↑ Gupta, Shekhar (21 September 2015). "Confessions Of A Shakhahari". Outlook. Retrieved 31 December 2017.
- ↑ Bakaya, Akshay (2004). "Lessons from Kurukshetra the RSS Education Project". In Anne Vaugier-Chatterjee (ed.). Education and Democracy in India. New Delhi: Manohar. ISBN 8173046042.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Nair, Padmaja (2009). Religious political parties and their welfare work: Relations between the RSS, the Bharatiya Janata Party and the Vidya Bharati Schools in India (PDF). University of Birmingham. ISBN 978-8187226635. Retrieved 2014-09-15.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Ramakrishnan, Venkitesh (7–20 Nov 1998). "A spreading network". Frontline. http://www.frontline.in/static/html/fl1523/15230100.htm.
- ↑ 6.0 6.1 Sundar, Nandini (2005). "Teaching to Hate: The Hindu Right's Pedagogical Program". In E. Ewing (ed.). Revolution and Pedagogy : Interdisciplinary and Transnational Perspectives on Educational Foundations. Vol. 39. New York: Palgrave Macmillan. pp. 1605–1612. doi:10.1057/9781403980137. ISBN 978-1-4039-8013-7. JSTOR 4414900.
{{cite book}}
:|journal=
ignored (help) - ↑ "Informal Education Units (11,353) | Vidya Bharti Akhil Bhartiya Shiksha Sansthan". vidyabharti.net. Retrieved 2020-11-16.
- ↑ Malik, Yogendra K.; Singh, V. B. (1994). "Organization, Decision-Making, and Supportive Groups". Hindu Nationalists in India : The Rise of the Bharatiya Janata Party. Boulder: Westview Press. p. 157. ISBN 0-8133-8810-4.
- ↑ "RSS wing steps in to fill govt school gap". The Telegraph. 30 Nov 2002. http://www.telegraphindia.com/1021130/asp/ranchi/story_1434897.asp.
- ↑ "Sri Vidyaranya Avasa Vidyalayam". Retrieved 2014-09-20.
- ↑ Bharatheeya Vidyanikethan the Kerala chapter of Vidya Bharathi Akhil Bharatheeya Siksha Sansthan "Vyasa Vidya Niketan - Our parent body". Archived from the original on 2016-04-19. Retrieved 2022-03-05.
- ↑ "Shishu Shiksha Samiti". Archived from the original on 2018-03-30. Retrieved 2022-03-05.
பிற ஆதாரங்கள்
[தொகு]- Panikkar, K. N. (1999). "Secular and democratic education". Social Scientist 27 (9/10): 70–75. doi:10.2307/3518105.
- Sharma, R. (2002). Indian Education at the Crossroads. Delhi: Shubhi Publications. ISBN 978-8187226635.
- Sarkar, Tanika (1994). "Educating the children of the Hindu Rashtra: Notes on RSS schools". Comparative Studies of South Asia 14 (2): pp. 10–15.