உள்ளடக்கத்துக்குச் செல்

சிலம்பவேளாங்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலம்பவேளாங்காடு
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
தலைமையகம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி பட்டுக்கோட்டை
சட்டமன்ற உறுப்பினர்

கா. அண்ணாதுரை (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

சிலம்பவேளாங்காடு தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மூத்தாகுறிச்சி ஊராட்சியில் அமைந்திருக்கும் அழகிய கிராமம்.

அமைவிடம்

[தொகு]

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரிலிருந்து அதிராம்பட்டினம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் 5 கிமீ தொலைவிலும், பட்டுக்கோட்டையிலிருந்து மதுக்கூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் 7 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஊரின் வடக்கில் மூத்தாக்குறிச்சி கிராமம், இடையில் வடக்கு ஏரி, தெற்கில் காசாங்காடு கிராமம், இடையில் மஞ்சிக்கனேரி, கிழக்கில் வாட்டாக்கு்டி கிராமம், இடையில் குண்டுக்கட்டேரி, மேற்கில் நாட்டுச்சாலை கிராமம், இடையில் காசாங்காட்டேரி. இவ்வாறு ஏரிகள் சூழ்ந்த கிராமம்.

கோவில்கள்

[தொகு]
  • சித்திவினாயகர் ஆலயம்
  • பால சுப்பிரமணியர் ஆலயம்
  • இடும்பன் கோயில்
  • ஆகாச காளியம்மன் கோயில்
  • ஆலமர மாடன் சன்னதி கோயில்
  • ஏரிச்சாமி என்கின்ற வீரமுடையார் ஆலயம்

கல்வி

[தொகு]

அரசு தொடக்கப் பள்ளியும், ஒரு மழலையர் பள்ளியும் இங்கு உண்டு.

சாலை வசதி

[தொகு]

ஏறக்குறைய 3000 எக்டேர் பரப்பளவில் பரந்துக் கிடக்கும் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் தெருவிளக்குக் கொண்ட தார்ச் சாலைகள் உள்ளன.

தண்ணீர் வசதி

[தொகு]

குடியிருப்பு பகுதிகளில் வடக்கு, தெற்கு, மேற்கு ஓரங்களில் அரசு அமைத்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் உள்ளன.

விளையாட்டு

[தொகு]

மழலையர் பள்ளி அருகில் சிறிய மைதானம் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலம்பவேளாங்காடு&oldid=819834" இலிருந்து மீள்விக்கப்பட்டது