இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையம், கைரு
இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையம் | |
---|---|
காட்டுயிரி பெருக்கம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 28°41′53″N 75°52′23″E / 28.69806°N 75.87306°E | |
நாடு | ![]() |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | பிவானி |
மொழி | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 127029 |
தொலைபேசி குறியீடு | +91-(01253) |
பாலின விகிதம் | ♂/♀ |
இணையதளம் | Website |

இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையம், கைரு (Chinkara Breeding Centre Kairu, Bhiwani) என்பது இந்தியாவின் அரியானாவில் உள்ள பிவானி மாவட்டத்தில் உள்ள தோஷம் வட்டத்தில், கைரு கிராமத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையமாகும்.[1] இது கைருவில் உள்ள சுரேந்தர் சிங் நினைவு மூலிகை பூங்கா அருகில் உள்ளது.
விளக்கம்
[தொகு]இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையம் மையம் 60 ஏக்கர்கள் (24 ha) பரப்பளவில் அமைந்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையமும் சுற்றுலாத்தலம் ஆகும். இந்த மையம் 1985-இல் 10 விலங்குகளுடன் தொடங்கப்பட்டது. ஏப்ரல் 2013[update]-ல் 66 விலங்குகள் (22 ஆண்கள், 44 பெண்கள் மற்றும் இரண்டு குட்டிகள்) இருந்தன.[2] இங்கு விலங்குகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை (காலை மற்றும் மாலை) உணவளிக்கப்படுகிறது.[3]
இன்று இந்தச் சுற்றுலாத்தலத்தில் 60 ஹெக்டேர்களில் தாவரங்களும் விலங்கினங்களும் பன்முகத்தன்மையுடன் இருப்பதைக் காணலாம்.[4]
போக்குவரத்து
[தொகு]கைரு கிராமத்தை அரசுப் போக்குவரத்து சேவை அல்லது தனியார் பேருந்து சேவைகள் மூலம் சாலை வழியாக அடையலாம். இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையம் பிவானியில் உள்ளது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Districtwise Herbal Parks in Haryana" (PDF). Haryana Forests Department. haryanaforest.gov.in. Archived from the original (PDF) on 9 November 2014. Retrieved 18 October 2014.
- ↑ "Haryana Forest Department". Archived from the original on 13 May 2014. Retrieved 12 May 2014.
- ↑ "Chinkara Breeding Centre, Kairu". haryanaforest.gov.in. Retrieved 2021-05-21.
- ↑ "Chinkara Breeding Centre Kairu - Famous Zoo in Haryana". www.indiamapped.com. Retrieved 2021-05-21.