வால்மீகி தேசியப் பூங்கா
வால்மீகி தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | மேற்குச் சம்பாரன், பீகார், இந்தியா |
ஆள்கூறுகள் | 27°19′54″N 84°9′45″E / 27.33167°N 84.16250°E |
வால்மீகி தேசியப் பூங்கா மற்றும் வனவிலங்குகள் காப்பகம் (Valmiki National Park and Wildlife Sanctuary) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் மேற்குச் சம்பாரன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 899.38 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில்அமைந்துள்ளது. மேற்குச் சம்பாரன் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவில் இது 17.4 % ஆகும். 900 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட சம்ப்ரா காடுகளில் 800 சதுர கிலோமீட்டர்களில் வனவிலங்குக் காப்பகம் அமைந்துள்ளது. இதில் 335 சதுர கிலோமீட்டர்களில் இத்தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியானது நேபாளம் மற்றும் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்திலும் அமைந்துள்ளது. இது இமயமலையின் தெராய் பகுதியில் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்காவில் பாலூட்டிகள், ஊர்வன, பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் ஆகியவை காணப்படுகின்றன. 1990 ஆம் ஆண்டு இந்தத் தேசியப் பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2013-12-21.