காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா
காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா | |
---|---|
வகை | Natural Area |
அமைவிடம் | ஜுபிளி ஹில்ஸ், ஹைதராபாத், தெலுங்கானா |
அண்மைய நகரம் | ஹைதராபாத் |
ஆள்கூறு | 17°25′14″N 78°25′09″E / 17.420635°N 78.41927°E |
காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா என்பது தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்திலுள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இந்த பூங்காவானது 390-ஏக்கர் (1.6 km2) தோராயமான பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது 1998 ஆம் ஆண்டில் மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெற்று ஆந்திரா மாநில அரசாங்கத்தால் தேசிய பூங்காவாக அமைக்கப்பட்டது. இது ஜூபிளி மலைகளின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது 'கான்கிரீட்(கட்டிடங்கள்) காடுகளின் மத்தியில் ஒரு காடு' என விவரிக்கப்படுகிறது. இங்கு மயில்கள் மற்றும் பிற விலங்குகள் உள்ளன.
நுழைவுக் கட்டணம்
[தொகு]பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ20/ ஆகவும், சிறார்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ10/ ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா காலை 5:30 அல்லது 6 முதல் 10மணி வரையிலும், மாலை 4 அல்லது 4:30 முதல் 7வரையிலும் திறந்திருக்கும்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ sign at park gate 2013.11.27