உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய மயில், இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையம், ஜபுவா

ஆள்கூறுகள்: 28°02′12″N 76°36′27″E / 28.03667°N 76.60750°E / 28.03667; 76.60750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய மயில், இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையம், ஜபுவா
இந்திய மயில், இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையம், ஜபுவா is located in அரியானா
இந்திய மயில், இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையம், ஜபுவா
இந்திய மயில், இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையம், ஜபுவா
அரியானாவில் அமைவிடம்
இந்திய மயில், இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையம், ஜபுவா is located in இந்தியா
இந்திய மயில், இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையம், ஜபுவா
இந்திய மயில், இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையம், ஜபுவா
இந்திய மயில், இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையம், ஜபுவா (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°02′12″N 76°36′27″E / 28.03667°N 76.60750°E / 28.03667; 76.60750
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்ரேவாரி மாவட்டம்
தோற்றுவித்தவர்All 4 Villages of region (Jhabuwa, Bidawas, Bhadoj & Khijuri)
பெயர்ச்சூட்டுஅரியானா அரசு
அரசு
 • வகைஅரசு
 • நிர்வாகம்அரியானா வனத்துறை
மக்கள்தொகை
 • மொத்தம்5,000
 • தரவரிசைHigher
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
123501
ஐஎசுஓ 3166 குறியீடுIN-HR
வாகனப் பதிவுYes
இணையதளம்www.haryanaforest.gov.in

இந்திய மயில், இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையம், ஜபுவா (Peacock & Chinkara Breeding Centre, Jhabua) என்பது 750 ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட இந்திய மயிலும் இந்தியச் சிறுமான் இனப்பெருக்க மையமாகும். இது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள ரேவாரி மாவட்டத்தில் பாவாலுக்கு 15 கி.மீ. தெற்கே உள்ள ஜபுவா கிராமத்தில் உள்ள சின்காரா காப்புக்காட்டில் அமைந்துள்ளது. ஜபுவா தில்லியிலிருந்து 100 கிலோமீட்டர்கள் (62 mi) தொலைவிலும், குருகிராமிலிருந்து 70 கி.மி. தொலைவிலும் ஹிசாரிலிருந்து 200 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

வனத்துறையின் இந்த மையம், அரியானாவில் 4 அக்டோபர் 2011 அன்று அப்போதைய முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவால் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்த மையத்திற்கு மாநில அரசு சுமார் ரூ.20 கோடி நிதியுதவி அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.[1]

காப்புக் காடு

[தொகு]

ஜபுவா, பிடாவாசு, படோஜ், கிஜுரி கிராமங்களுக்கு இடையே ஜபுவா காப்புக்காடு அமைந்துள்ளது. சுமார் 750 ஏக்கர் காப்புக்காடுகளில், 80 ஏக்கர் இந்தியச் சிறுமான், இந்திய மயில்களின் இனப்பெருக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இருபது மயில்கள், பாம்பே இயற்கை வரலாற்று சங்க உதவியுடன், அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் இயக்கமும் ஆரோக்கியமும் நீண்ட கால ஆய்வுக்காகக் கால்களிலும் இறக்கைகளிலும் குறியிடப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இவை பிப்ரவரி 2018-இல் காடுகளில் விடுவிக்கப்பட்டன.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Capt. Ajay Singh Yadav will launch Wildlife Week celebrations the same day". ExposedIndia Live. Retrieved 11 January 2015.