அருண் ஜெட்லி
அருண் ஜெட்லி | |
---|---|
நிதித்துறை அமைச்சர் | |
பதவியில் 26 மே 2014 – 30 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | ப. சிதம்பரம் |
பின்னவர் | நிர்மலா சீத்தாராமன் |
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் | |
பதவியில் 26 மே 2014 – 30 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | சச்சின் பைலட் |
பின்னவர் | நிர்மலா சீத்தாராமன் |
பாதுகாப்புத்துறை அமைச்சர் (கூடுதல் பொறுப்பு)[1][2][3] | |
பதவியில் 13 மார்ச் 2017 – 3 செப்டம்பர் 2017 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | மனோகர் பாரிக்கர் |
பின்னவர் | நிர்மலா சீத்தாராமன் |
பதவியில் 26 மே 2015 – 9 நவம்பர் 2014 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | அ. கு. ஆன்டனி |
பின்னவர் | மனோகர் பாரிக்கர் |
தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் | |
பதவியில் 9 நவம்பர் 2014 – 5 சூலை 2016 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | பிரகாஷ் ஜவடேகர் |
பின்னவர் | வெங்கையா நாயுடு |
எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை | |
பதவியில் 3 சூன் 2009 – 26 மே 2014 | |
முன்னையவர் | ஜஸ்வந்த் சிங் |
பின்னவர் | குலாம் நபி ஆசாத் |
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் | |
பதவியில் 29 சூலை 2003 – 22 மே 2004 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | ஜனா கிருஷ்ணமூர்த்தி |
பின்னவர் | எச். ஆர். பரத்வாஜ் |
பதவியில் 7 நவம்பர் 2000 – 1 சூலை 2002 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | ராம் ஜெத்மலானி |
பின்னவர் | ஜனா கிருஷ்ணமூர்த்தி |
மேலவைத் தலைவர் (மாநிலங்களவை) | |
பதவியில் 26 மே 2014 – 11 சூன் 2019 | |
முன்னையவர் | மன்மோகன் சிங் |
பின்னவர் | தவார் சந்த் கெலாட் |
தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் | |
பதவியில் 13 அக்டோபர் 1999 – 30 செப்டம்பர் 2000 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | ஜெயபால் ரெட்டி |
பின்னவர் | சுஷ்மா சுவராஜ் |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், உத்தரப் பிரதேசம் | |
பதவியில் 3 ஏப்ரல் 2018 – 24 ஆகத்து 2019 | |
முன்னையவர் | நரேஷ் அகர்வால் |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், குஜராத் | |
பதவியில் 3 ஏப்ரல் 2000 – 2 ஏப்ரல் 2018 | |
பின்னவர் | நரன்பாய் ரத்வா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அருண் மகாராஜ் கிசென் ஜெட்லி திசம்பர் 28, 1952 தில்லி, இந்தியா |
இறப்பு | ஆகத்து 24, 2019 புது தில்லி, தில்லி, இந்தியா | (அகவை 66)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சங்கீதா ஜெட்லி (திருமண நாள்:24 மே 1982) |
பிள்ளைகள் | சோனாலி ஜெட்லி ரோசன் ஜெட்லி |
வாழிடம்(s) | புது தில்லி, தில்லி, இந்தியா |
முன்னாள் கல்லூரி | ஸ்ரீராம் பொருளியல் கல்லூரி மற்றும் தில்லி பல்கலைக்கழகம் |
வேலை | வழக்கறிஞர் அரசியல்வாதி |
இணையத்தளம் | அதிகாரப்பூர்வ வலைத்தளம் |
அருண் ஜெட்லி (Arun Jaitley, 28 திசம்பர் 1952 – 24 ஆகத்து 2019) ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினாறாவது மக்களவையின் அமைச்சரவையில், நிதியமைச்சராகவும், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தவர் ஆவார்.
இவர் பாதுகாப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரும் ஆவார். பதினைந்தாவது மக்களவையில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆய அமைச்சரவையில் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2014 பொதுத் தேர்தலில், அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர், படைத்தலைவர் அமரிந்தர் சிங்கிடம் தோற்றார்.
தனி வாழ்வு
[தொகு]பஞ்சாபி இந்து பிராமணக் குடும்பத்தில் வழக்கறிஞர் மகராசு கிசன் ஜெட்லிக்கும் இரத்தன் பிரபா ஜெட்லிக்கும் மகனாகப் பிறந்தார்.[4][5] தமது பள்ளிக்கல்வியை தில்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 69 வரை பயின்றார்.[6] பொருளியல் இளங்கலைப் பட்டத்தை சிறீராம் பொருளியல் கல்லூரியில் 1973இல் பெற்றார். 1997இல் சட்டப்படிப்பை தில்லி பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[7] தமது மாணவப் பருவத்தில் கல்வித்திறன் மற்றும் பிற கல்விசாரா செயற்பாடுகளுக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். 1974இல் தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.[8]
ஜெட்லி மே 24, 1982இல் சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர்.[9]
மறைவு
[தொகு]2018 மே 14 இல் அருண் ஜெட்லி சிறுநீரகக் கோளாறுகளுக்காக எயிம்சு மருத்துவமனையில் சிறுநீரகக் கொடை சிகிச்சை அளிக்கப்பட்டது.[10] இவர் நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டார்.[11] 2019, ஆகத்து 24 மதியம் 12:07 மணிக்கு இவர் எயிம்சு மருத்துவமனையில் தனது 66-வது அகவையில் காலமானார்.[12][13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Full minister defence minister in a few weeks: Arun Jaitley". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 May 2014.
- ↑ "Stint as defence minister will be short-term". டெக்கன் ஹெரால்டு. 28 May 2014.
- ↑ "Modi ministry to be expanded before Budget session". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 May 2014.
- ↑ "Arun Jaitley is no 'outsider' to Amritsar – Niticentral". Archived from the original on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 2014-07-10.
- ↑ "Sorry". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 25 October 2012.
- ↑ "My memorable School days at St. Xaviers". Arun Jaitley. Archived from the original on 12 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 17 February 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Member Profile: Arun Jeitley". Rajya Sabha. Archived from the original on 27 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 17 February 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-07-24. பார்க்கப்பட்ட நாள் 2014-07-10.
- ↑ "Knot for everybody's eyes". The Times of India. 24 April 2004. http://timesofindia.indiatimes.com/delhi-times/knot-for-everybodys-eyes/articleshow/636819.cms. பார்த்த நாள்: 25 October 2012.
- ↑ Smriti Irani Removed From I&B Ministry; Piyush Goyal to Step in for Arun Jaitley in Finance [1]
- ↑ "President visits AIIMS to enquire about Jaitley's health". Economic Times. 16 August 2019.
- ↑ "Arun Jaitley passes away at 66". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-24.
- ↑ "Arun Jaitley Passes Away due to health reasons". News Nation. 24 Aug 2019. பார்க்கப்பட்ட நாள் 24 Aug 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]- பதினாறாவது மக்களவை அமைச்சர்கள்
- 1952 பிறப்புகள்
- இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள்
- 2019 இறப்புகள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- இந்திய நிதியமைச்சர்கள்
- 20 ஆம் நூற்றாண்டு இந்திய வழக்கறிஞர்கள்
- மாநிலங்களவை உறுப்பினர்கள்
- தில்லி நபர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- தில்லி அரசியல்வாதிகள்