உள்ளடக்கத்துக்குச் செல்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
நிறுவனர்சரத்குமார்
பொதுச் செயலாளர்[[காட்டுக்குளம் கார்த்திகேயன்]
தொடக்கம்ஆகஸ்ட் 31, 2007
கலைப்பு12 மார்ச்சு 2024; 7 மாதங்கள் முன்னர் (2024-03-12)
இணைந்ததுபாரதிய ஜனதா கட்சி
தலைமையகம்அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி எண்.46, ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை - 600017
கட்சிக்கொடி
இந்தியா அரசியல்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தமிழ் திரைப்பட நடிகர் சரத்குமாரால் ஆகஸ்ட் 31, 2007 அன்று தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சியாகும். இக்கட்சி காமராஜர், எம்ஜிஆர், அப்துல் கலாம் ஆகியோரின் சிந்தனைகளை, கொள்கைகளை, வழிகாட்டல்களை முன்னெடுத்து செயல்படும் என்று சரத்குமார் தெரிவித்தார். கட்சி நிறுவப்பட்ட நாளிலிருந்து 12 மார்ச் 2024 வரை சரத்குமார் கட்சியின் தலைவராக இருந்தார். 12 மார்ச் 2024 அன்று, அதன் நிறுவனர் சரத்குமாரால் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்டது.

2011 தேர்தல்

[தொகு]

சரத்குமார் தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தார்.[1] பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) சேர்ந்தார். பின்னர் அவர் அதிமுகவிலிருந்து விலகி 31 ஆகத்து 2007 அன்று தனது சொந்த அரசியல் கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.[2][3] தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் ஏ. நாராயணனும் வெற்றி பெற்றனர்.[4]

கட்சி கலைப்பு

[தொகு]

12 மார்ச் 2024 அன்று, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அதன் நிறுவனர் சரத்குமாரால் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்டது. சென்னையில் நடந்த இந்த இணைப்பிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை தலைமை தாங்கினார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ram, Arun (11 April 2006). "Starry blow to DMK, Sarath Kumar joins AIADMK". DNA India.
  2. "Tamil Nadu / Chennai News : Jayalalithaa establishes direct contact with leaders of AIADMK alliance". தி இந்து (Chennai, India). 2011-03-19 இம் மூலத்தில் இருந்து 2011-03-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110322190412/http://www.hindu.com/2011/03/19/stories/2011031963960400.htm. 
  3. "AIADMK signs seat-sharing pact with AISMK, allotes 2 seats - Chennaionline News". Archived from the original on 2011-04-16. பார்க்கப்பட்ட நாள் 2011-03-20.
  4. "Sarath Kumar's party gets two seats in AIADMK alliance". The Hindu (Chennai, India). 2011-03-10. http://www.thehindu.com/news/cities/chennai/sarath-kumars-party-gets-two-seats-in-aiadmk-alliance/article1525926.ece. 
  5. "Actor Sarath Kumar-led AISMK Merges With BJP For Lok Sabha Polls In Tamil Nadu". www.timesnownews.com. 12 March 2024. பார்க்கப்பட்ட நாள் 12 March 2024.

வெளியிணைப்புகள்

[தொகு]

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சரத்குமாரின் புதிய கட்சி உதயம் பரணிடப்பட்டது 2007-10-11 at the வந்தவழி இயந்திரம் - தமிழ் சினிமா