ஜனதா கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜனதா கட்சி
Janata Party
சுருக்கக்குறிஜ.க (JP)
நிறுவனர்ஜெயபிரகாஷ் நாராயணன்
தொடக்கம்23 சனவரி 1977; 47 ஆண்டுகள் முன்னர் (1977-01-23)
இணைந்தவை
இணைந்தது11 ஆகத்து 2013 பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்துவிட்டது.
பின்னர்
இளைஞர் அமைப்புஜனதா யுவ மோர்ச்சா
பெண்கள் அமைப்புஜனதா மகிளா மோர்ச்சா
கொள்கை
  • இந்திய தேசிய கொள்கை பரப்பியம்
  • ஜனரஞ்சகம்
  • பிரிவுகள்:
  • காந்திய சோசலிசம்
  • சமூக நீதி
  • ஊழல்-தடுப்பு
அரசியல் நிலைப்பாடுநடுநிலை
தேர்தல் சின்னம்
கட்சிக்கொடி
        
இந்தியா அரசியல்

ஜனதா கட்சி (Janata Party -जनता पार्टी, People's Party மக்கள் கட்சி- ஆங்கிலம்) இந்திய அரசியல் கட்சியான இக்கட்சியை எமர்ஜென்சி ஜனதா கட்சி என்றும் அழைக்கபெற்றது. இக்கட்சி (1977–2013) வரை செயல்பட்டுவந்தது. இக்கட்சி இந்தியாவில் (1975–1977) காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அமல் படுத்திய நெருக்கடி நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடிய ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களால் ஜனதா கட்சி துவங்கப்பட்டது.

கட்சியின் நிலை & தேர்தல் வரலாறு[தொகு]

  • 1975-1977 வரை காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அன்றைய பிரதமருமான இந்திரா காந்தி அவர்கள் அதற்கு முந்தைய 1971 நாடாளுமன்றத் தேர்தலின் பிரச்சாரத்தின் போது தேர்தல் வரைமுறையை மீறிய முறைகேடுகளை செய்த இந்திரா காந்தியின் தவறுகளை காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராஜ் நாராயணன் அவர்கள் தொடுத்த வழக்கில் 1975 உச்ச நீதிமன்றம் இந்திரா காந்தி 1971 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று கூறி தீர்ப்பளித்து. அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகி சிறை தண்டனை பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
  • பின்பு இந்திரா காந்தி தனது மீதான தண்டனைக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை அமலாவதைத் தடுக்க 1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை இந்தியா முழுவதும் வரைமுறையற்ற அதிகாரத்தால் அமல்படுத்தினார்.
  • இதனை கடுமையாக எதிர்த்து போராடிய தலைவர்களுள் ஒருவரான ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் உருவாக்கப்பட்ட கட்சியாகும். இக்கட்சியுடன் சேர்ந்து நிறுவன காங்கிரஸ், பாரதிய லோக் தளம், பாரதிய ஜனசங்கம் போன்ற கட்சிகள் இணைந்து ஜனதா கட்சி என்று பெயர் மாற்றி நெருக்கடி நிலையை எதிர்த்து அக்கட்சி தலைவர்களுடன் இணைந்து இந்தியாவில் உள்ள பல மாநிலக்கட்சி தலைவர்களும் இணைந்து நெருக்கடி நிலையை அமல்படுத்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி பிரதமர் இந்திரா காந்தியை எதிர்த்து போராடினர்.
  • பின்பு 1977 ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை பிரதமர் இந்திரா காந்தி தளர்த்தி கொண்டதால்.
  • முந்தைய ஆண்டான 1976ல் நடக்க வேண்டிய நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கடி நிலை பிரகடனத்தால் ஒராண்டு கழித்து 1977 ஆம் ஆண்டு நடந்தது.
  • 1977 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனதா கட்சி இந்தியா சுதந்திரத்திற்கு பின் 30 வருடங்களாக ஆண்டு வந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை முதன் முதலில் தோற்கடித்து மத்திய காங்கிரசின் முதல் பிரதான எதிர்க்கட்சியான ஜனதா கட்சி மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசை நிறுவி புதிய சாதனை படைத்திட்ட பெருமை கொண்ட கட்சியாகும்.
  • மேலும் இக்கட்சியில் பிரதமர் ஆக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர்களில் ஒருவரான மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆக பதவி வகித்தார்.
  • 1977 முதல் 1979 வரை இக்கட்சியில் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆக இருந்த காலமானது இந்தியாவில் அவர் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டங்களாலும், ஒருவர் தனது ஒரு வேலை உணவை குறிப்பிட்ட குறைந்த விலைக்குள் தரமான உணவை உட்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக "ஜனதா உணவு" திட்டத்தை கொண்டு வந்தார். மேலும் இது ஏழை, எளிய மக்களுக்கு இந்திய நாடு முழுவதும் நல்ல பயனளித்ததால் மொரார்ஜி தேசாயை பல மக்கள்கள் கொண்டாடினர்.
  • மேலும் அன்றைய இந்தியாவில் எமர்ஜென்சி நிலைக்கு பிறகு பெரும் பொருளாதார பின்னடைவு சந்திக்க இருந்த போதிலும் அந்த ஆபத்தான காலகட்டத்தில் கூட விலைவாசி உயர்வு சாமானிய மக்களை பாதிக்காத வகையில் எவ்வித விலைவாசி உயர்வு செய்யாமல் பாதுகாத்ததால் இவரது ஆட்சியை இந்தியாவின் கோல்டன் பிரியட் தங்கமான ஆட்சி என்று இன்று வரை போற்றுகின்றனர்.
  • மேலும் பின்னாளில் அவரது ஜனதா ஆட்சியில் அக்கட்சியில் அமைச்சர்களுக்குள் நடந்த பதவி பிரச்சனைகளாலும், அக்கட்சிக்கு கூட்டணியில் இருந்து ஆதரவளித்த கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளாலும் குறிப்பாக ஜனதா கட்சியுடன் ஒன்றினைந்து செயல்பட்டு வந்த முந்தைய பாரதிய ஜனசங்கம் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் இந்து மத கொள்கை அமைப்பான ஆர்எஸ்எஸ் பிரிவை சார்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையாலும் 1979 ஆம் ஆண்டு ஜனதா கட்சி நிறுவனர் ஜெயபிரகாஷ் நாராயணன் மரணத்திற்கு பிறகு கட்சியில் ஒற்றுமையில்லாமையால் (1977-1979) இரண்டே ஆண்டுகளில் ஜனதா கட்சி கவிழ்ந்தது.
  • பின்பு ஜனதா கட்சியில் ஏற்பட்ட கூட்டணி பிரச்சனைகளை காரணம் காட்டி மொரார்ஜி தேசாய் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பின்பு ராஜ் நாராயணன் தலைமையில் உருவான புதிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா கட்சியில் சரண் சிங் பிரதமரானார். பின்பு ஜனதா கட்சியில் இருந்து பிரிந்த மற்றோரு பிரிவினர்களும் அக்கட்சிக்கு கூட்டணியில் இருந்து ஆதரவளித்து வந்த கட்சிகளின் அமைச்சர்களும் மதச்சார்பற்ற ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தி வெளியில் இருந்து ஆதரவளித்தார். பின்பு சரண் சிங் (1979-1980) பிரதமராக இருந்த போதிலும் அக்கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தி ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஒரே வருடத்தில் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் ஆட்சி 1980ல் கவிழ்ந்தது. அதனால் மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது.
  • 1980 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இந்திரா காந்தி மூன்றாவது முறை பிரதமர் ஆன போதிலும். 1984ல் இந்திரா காந்தி பஞ்சாப் தனிநாடு கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் காலிஸ்தான் அமைப்பை சார்ந்த அவரது மெய்க்காப்பாளர் ஒருவரால் இந்திரா காந்தி சுட்டு படுகொலை செய்யப்பட்டதால்
  • மீண்டும் 1984 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி மரணத்தால் மக்களிடையே ஏற்பட்ட அனுதாப அலையால் அவரது மகன் ராஜீவ் காந்தி வெற்றி பெற்று பிரதமரானார்.
  • 1984 நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி பல மாநில கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட போதிலும் தோல்வி அடைந்தது.

ஜனதா கட்சியின் நீட்ச்சி கட்சிகள்[தொகு]

மதச்சார்பற்ற ஜனதா கட்சி தோற்றம்[தொகு]

பாரதிய ஜனதா கட்சி தோற்றம்[தொகு]

ஜனதா தளம் தோற்றம்[தொகு]

கட்சி இணைப்பு[தொகு]

  • 1988 ஆம் ஆண்டு ஜனதா கட்சி தலைவர்கள் வி. பி‌. சிங் ஜன மோர்ச்சா கட்சியுடன் இணைந்து ஜனதா தளம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது அதிலிருந்து விலகி ஜனதா கட்சியை தன்வசம் படுத்திக்கொண்ட அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியசாமி தலைமையில் ஜனதா கட்சி செயல்பட்டுவந்தது. அதன் அதிகாரப்பூர்வமான ஏர் கலப்பை தூக்கி செல்லும் உழவன் தேர்தல் சின்னத்தையும் தனது தலைமையின் கட்டுபாட்டில் வைத்து கொண்டார்.
  • பின்பு அவர் ஜனதா கட்சி சார்பில் பல சட்டமன்ற/நாடாளுமன்றத் தேர்தல்களை சந்தித்த போதிலும் 2000 ஆம் ஆண்டிற்க்கு பிறகு அக்கட்சியின் தனித்தன்மை தமிழக மக்களிடையே குறைய தொடங்கிய போதும் 2013 ஆம் ஆண்டு சுப்ரமணியசாமியின் ஆர். எஸ். எஸ் அரசியல் சகாக்களான அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங், அமித்ஷா வேண்டுகோளால் அவர்களது பாரதிய ஜனதா கட்சியுடன் ஜனதா கட்சி இணைந்து செயல்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனதா_கட்சி&oldid=3984724" இலிருந்து மீள்விக்கப்பட்டது