அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்
Appearance
(அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் ஏப்ரல் 2004ல் நடிகர் டி. ராஜேந்தரால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும்.[1] இந்தக் கட்சியின் கொடியில் காணப்பட்ட நிறங்கள் கறுப்பு, சிவப்பு, மஞ்சள் ஆகும். இக்கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்துச் சென்றக் கட்சியாகும்.2013இல் கருணாநிதியை சந்தித்தபோது இது கலைக்கப்பட்டது என ராஜேந்திரர் அறிவிக்க, அவரை கட்சியை விட்டு வெளியேற்றி கட்சி கூட்டம் நடைபெற்றது. 2016இல் ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடிதம் எழுதினார். அதில் இலட்சிய திமுக என்று லெட்டர் பேடில் மாற்றியிருந்தார்.பிப்ரவரி 18, 2018இல் மீண்டும் இதை இலதிமுகவாக தொடங்கினார். தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாததால் 2022 செப்டம்பரில் இக்கட்சியின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.[2]