தமிழ்நாடு முஸ்லிம் லீக்
தமிழ்நாடு முஸ்லிம் லீக் ( Tamil Nadu Muslim League ) தமிழகத்தின் ஒரு அரசியல் கட்சியாக 1973 ஆம் ஆண்டு நாவலர் அ._மு._யூசுப்_சாகிப் மற்றும் இலப்பைகுடிக்காடுஅப்துல் காதர் ஜமாலி சாகிப் ஆகியோரால் துவங்கப்பட்டது
தலைவர்கள்
[தொகு]இக்கட்சியின் தலைவராக ஹபிபுல்லா பெய்க்கும், செயலாளராக அ. மு. யூசுப் சாகிப் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரசியல்
[தொகு]இக்கட்சி துவஙகப்பட்ட கால கட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தது. எனினும் இவரது தலைமையிலான தமிழ்நாடு முஸ்லிம் லீகிற்கு சமுதாய மக்களிடம் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் சி.ஹெச் முகம்மது கோயா உள்ளிட்ட கேரள மாநில லீக் தலைவர்கள் யூசுப் சாகிபுடன் மேற்கொண்ட சமரசப் பேச்சு வார்த்தைகள் காரணமாக தமிழ்நாடு முஸ்லீம் லீக்கைக் கலைத்துவிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிகுடன் இணைந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- சமூக நீதி முரசு இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு]
- மறுமலர்ச்சி இதழ்கள் 1968 மற்றும் 1969.