உள்ளடக்கத்துக்குச் செல்

வாழ்குடி விசுவநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழ்குடி விசுவநாதர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

[தொகு]

இவ்வூரை வாக்குடி என்றும் அழைக்கின்றனர். திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் கங்களாஞ்சேரியை அடுத்து நாகூர் சாலையில் விற்குடி ரயிசில்வே கேட்டினை அடுத்து கல்யாண இருப்பு என்னுமிடத்தில திருப்பயத்தங்குடி, திருமருகல் சாலையில் வாக்குடி உள்ளது.

இறைவன்,இறைவி

[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் விசுவநாதர் ஆவார். இறைவி விசாலாட்சி ஆவார். [1]

பிற சன்னதிகள்

[தொகு]

திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், சனீசுவரர் சன்னதிகள் உள்ளன. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009