வஹினி ஆறு
Appearance
வஹினி ஆறு என்பது தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறாகும். இது ஒப்பீட்டளவில் சிறிய ஆறு ஆகும். இந்த ஆறு கர்நாடக மாநிலம், பெங்களூரு நகர மாவட்டத்தில் ஆனேக்கல் அருகே உள்ள முத்தாநல்லூர் என்ற பகுதியில் தோன்றி, அத்திப்பள்ளி வழியாக தமிழகத்தின் எல்லைக்குள் நுழைகிறது. அங்கிருந்து பேகேப்பள்ளி, பேடரப்பள்ளி, சாந்தாபுரம், எலசகிரி, ஒசூர் சமத்துவபுரம் வழியாக பாய்ந்து பெரியகூட்லு, சின்னகூட்லு ஆகிய சிற்றூர்களுக்கு அருகே தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இந்த இரு ஆறுகளும் சேரும் இடத்தில் சங்கமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் பெருக்கெடுத்தோடும் இந்த ஆறு இதன் சுற்றுப்புறத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர உதவுகிறது. ஒரு காலத்தில் தூய்மையான ஆறாக இருந்த இந்த ஆறானது கழிவுநீர் கலப்பதால் மாசடைந்துள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மாசடைந்துள்ள வஹினி நதியை தூர்வாரி சீரமைக்க கோரிக்கை". இந்து தமிழ். சூன் 22 2019.