உள்ளடக்கத்துக்குச் செல்

கோரையாறு (திருநெல்வேலி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோரையாறு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் வட்டத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். இது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி ஆற்றின் வலது கரையோர துணை நதியாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் உருவாகும் சிறிய வடக்கு கோரையாறு மற்றும் தெற்கு கோரையாறு இணைந்து உருவாகிறது.[1] இந்த ஆற்றின் மொத்த நீளம் 13.2 கிலோமீட்டர்கள் (8.2 mi) ஆகும். கன்னடியன் அணைக்கட்டின் மேற்புறத்தில் வெள்ளங்குளி கிராமத்திற்கு அருகில் உள்ள கன்னடியன் கால்வாயில் இந்த கலக்கின்றது. இந்த வாய்க்கால் அணைக்கட்டைக் கடந்து தாமிரபரணி கீழ்நிலையிலும் அணையின் கிழக்கிலும் இணைகிறது. இதன் போக்கில் வண்டல் ஓடை, எலுமிச்சையாறு மற்றும் கொப்பரையாறு ஆகிய மூன்று துணை ஆறுகள் இணைகின்றன. கோரையாரின் வடிகால் படுகை 75.75 சதுர கிலோமீட்டர்கள் (29.25 sq mi) ஆகும். இந்த ஆற்றில் அதிகபட்சமாக 12000 கன அடி நீர் வெளியேறியது குறிப்பிடப்படுகிறது.[2][3]

மேலும் பார்க்கவும்

[தொகு]

தமிழக ஆறுகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Irrigation Policy Note 2019-2020" (PDF). Tamil Nadu Public Works Department. Retrieved 2020-12-06.
  2. "Environmental Impact Assessment Report" (PDF). Tamil Nadu Public Works Department. Retrieved 2020-12-06.
  3. "District Census Handbook - Tirunelveli District 2011" (PDF). Directorate of Census Operations-Tamil Nadu. 2020-10-01. Retrieved 2020-12-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரையாறு_(திருநெல்வேலி)&oldid=4212399" இலிருந்து மீள்விக்கப்பட்டது