சரபங்கா ஆறு
சரபங்கா நதி | |
ஆறு | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | தமிழ்நாடு |
நகரங்கள் | டேனிஷ்பேட்டை, ஓமலூர், தாதாபுரம், எடப்பாடி, புதுப்பாளையம் |
உற்பத்தியாகும் இடம் | |
- அமைவிடம் | சேலம், இந்தியா |
கழிமுகம் | |
- அமைவிடம் | சேலம், இந்தியா |
- elevation | 0 மீ (0 அடி) |
சரபங்கா ஆறு (Sarabanga River) என்பது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் ஓடும் ஒரு ஆறாகும். இந்த ஆறின் மூலமானது சேர்வராயன் மலை ஆகும்.
சரபங்கர் என்ற ஒரு முனிவர் தாம் செய்த தீவினைக்குப் பரிகாரம் தேடுவதற்காக, இதன் கரையிலிருந்து தவமியற்றிய காரணத்தால் இந்த ஆறு இப்பெயர் பெற்றது என்பர். ஓமலூரில் இரண்டு ஓடைகள் ஒன்று சேர்ந்து இந்த ஆறு உருவாகிறது. அவ்வோடைகள் இரண்டும் கீழ் ஆறு, மேல் ஆறு என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகின்றன. கீழ் ஆற்றைப் பெரியாறு என்றும் அழைப்பர். இது சேர்வராயன் மலையிலுள்ள ஏற்க்காட்டில் தோன்றுகிறது. இவ்வாறு ஏற்க்காட்டில் அமைந்துள்ள ஏரியில் தோன்றி, கிளியூர் அருவியில் தாவிக்குதித்து, மேற்கே திரும்பி ஓமலூரை நோக்கி ஓடுகிறது.[1]
மற்றாேர் ஆறாகிய மேல் ஆறு சேர்வராயன் மலையின் தென்சரிவில் தோன்றிக் காடையாம்பட்டி மலைப் படுகையின் வழியாக ஓடிவருகிறது. பட்டிப்பாடி ஆறு, பறியன் குழி ஆறு, கூட்டாறு, காட்டாறு எனப் பல பெயர்கள் இதற்கு வழங்குகின்றன. இருப்புப் பாதையைக் கடந்தவுடன் இவ்வாறு தெற்கு நோக்கித் திரும்பியோடிப் பெரியாற்றில் கலக்கிறது. இவ்விதமாக இவ்விரண்டு ஆறுகளால் உண்டாக்கப்பட்ட சரபங்க நதி தாரமங்கலம், இடைப்பாடி ஆகிய நகரங்களுக்கு அண்மையிலுள்ள பல ஏரிகளை நிரப்புகிறது.[1]
மேலும் இந்த ஆறு சேலத்தில் டேனிஷ்பேட்டை கிராமத்தின் விவசாய நீர்ப்பாசனத்தின் தேவையை நிறைவேற்றுகிறது. பின்னர் இந்நதி ஓமலூர், தொப்பூர்,சின்னப்பம்பட்டி, தாதாபுரம், எடப்பாடி, குள்ளம்பட்டி, செட்டிப்பட்டி, தேவூர்,பாலிருச்சான்பாளையம் வழியாக பாய்கிறது. பிறகு அண்ணமார் கோவில் அருகே காவேரி ஆற்றில் இணைகிறது. குள்ளம்பட்டியில், மேட்டூர் ஸ்டான்லி அணையிலிருந்து வரும் கிழக்குக் கரை வாய்க்காலின் கீழே சுமார் 100 அடி [1]ஆழத்தில் குறுக்கே செல்கிறது. கிழக்குக் கரை வாய்க்கால் ஆனது இந்த ஆற்றை கடப்பதற்காகவே சுமார் 800 மீட்டர் நீளத்திற்க்கு சதுர வடிவில் ஒரு சுரங்க கட்டுமானம் உள்ளது. ஆற்றின் குறுக்கே பல தடுப்பு அணைகளும் உள்ளன. மேலும் இந்த நதியானது நல்லவீரன் காடு பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. ஓமலூர் பகுதியில் உள்ள இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் மற்றும் கோட்டை பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவும் திகழ்கிறது. அதேபோல் இன்நதிக்கரையில் தாதாபுரம் பகுதியில் அமைந்துள்ள சொக்கநாச்சியமமன் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பிரஸத்தி பெற்ற அம்மனாகவும் திகழ்கிறது. நதிக்கரையில் ஏழு சிவாலயங்கள் உள்ளது. குள்ளம்பட்டி பழக்காரன்கொட்டாய் அருகில் கட்டப்பட்டுள்ள சோழீஸ்வரன் கோயில் புகழ்பெற்ற பழமையான சோழர்கள் கால கோயிலாகும்.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 13-50". பழனியப்பா பிரதர்ஸ். Retrieved 17 நவம்பர் 2020.
- Salem District profile 2014 - RIVERS பரணிடப்பட்டது 2017-12-15 at the வந்தவழி இயந்திரம்